1 Chronicles · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

1 Chronicles 3

1தாவீதுக்கு எப்ரோனில் பிறந்த மகன்கள்: யெஸ்ரெயேல் ஊரைச்சேர்ந்த அகினோவாமிடம் பிறந்த அம்னோன் முதலில் பிறந்தவன்; கர்மேலின் ஊரைச்சேர்ந்த அபிகாயிலிடம் பிறந்த கீலேயாப் இரண்டாம் மகன்.

2கெசூரின் ராஜாவாகிய தல்மாயின் மகள் மாக்காள் பெற்ற அப்சலோம் மூன்றாம் மகன்; ஆகீத் பெற்ற அதோனியா நான்காம் மகன்.

3அபித்தாள் பெற்ற செப்பத்தியா ஐந்தாம் மகன்; அவனுடைய மனைவியாகிய எக்லாள் பெற்ற இத்ரேயாம் ஆறாம் மகன்.

4இந்த ஆறு மகன்கள் அவனுக்கு எப்ரோனில் பிறந்தார்கள்; அங்கே ஏழு வருடங்களும் ஆறு மாதங்களும் ஆட்சிசெய்தான்; எருசலேமில் முப்பத்துமூன்று வருடங்கள் ஆட்சிசெய்தான்.

5எருசலேமில் அவனுக்குப் பிறந்தவர்கள்: அம்மியேலின் மகளாகிய பத்சேபாளிடம் சிமீயா, சோபாப், நாத்தான், சாலொமோன் என்னும் நான்குபேர்களும்,

6இப்பார், எலிஷாமா, எலிப்பெலேத்,

7நோகா, நெப்பேக், யப்பியா,

8எலிஷாமா, எலியாதா, எலிப்பெலேத் என்னும் ஒன்பதுபேர்களுமே.

9மறுமனையாட்டிகளின் மகன்களையும் இவர்களுடைய சகோதரியாகிய தாமாரையும்தவிர, இவர்களெல்லோரும் தாவீதின் மகன்கள். 1 யூதாவின் இராஜா

10சாலொமோனின் மகன் ரெகொபெயாம்; இவனுடைய மகன் அபியா; இவனுடைய மகன் ஆசா; இவனுடைய மகன் யோசபாத்.

11இவனுடைய மகன் யோராம்; இவனுடைய மகன் அகசியா; இவனுடைய மகன் யோவாஸ்.

12இவனுடைய மகன் அமத்சியா; இவனுடைய மகன் அசரியா; இவனுடைய மகன் யோதாம்.

13இவனுடைய மகன் ஆகாஸ்; இவனுடைய மகன் எசேக்கியா; இவனுடைய மகன் மனாசே.

14இவனுடைய மகன் ஆமோன்; இவனுடைய மகன் யோசியா.

15யோசியாவின் மகன்கள், முதலில் பிறந்த யோகனானும், யோயாக்கீம் என்னும் இரண்டாம் மகனும், சிதேக்கியா என்னும் மூன்றாம் மகனும், சல்லூம் என்னும் நான்காம் மகனுமே.

16யோயாக்கீமின் மகன்கள் எகொனியா முதலானவர்கள்; இவனுக்கு மகனானவன் சிதேக்கியா. 1 சிறையிருப்புக்குப்பின் ராஜ வம்சம்

17கட்டுண்ட எகொனியாவின் மகன்கள் செயல்தியேல்,

18மல்கீராம், பெதாயா, சேனாசார், யெகமியா, ஒசாமா, நெதபியா என்பவர்கள்.

19பெதாயாவின் மகன்கள் செருபாபேல், சீமேயி என்பவர்கள்; செருபாபேலின் மகன்கள் மெசுல்லாம், அனனியா என்பவர்கள்; இவர்கள் சகோதரி செலோமீத் என்பவள்.

20அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊசாபேசேத் என்னும் ஐந்துபேர்களுமே.

21அனனியாவின் மகன்கள், பெலத்தியா, எசாயா என்பவர்கள்; இவனுடைய மகன் ரெபாயா; இவனுடைய மகன் அர்னான்; இவனுடைய மகன் ஒபதியா; இவனுடைய மகன் செக்கனியா.

22செக்கனியாவின் மகன்கள் செமாயா முதலானவர்கள்; செமாயாவின் மகன்கள் அத்தூஸ், எகெயால், பாரியா, நெயாரியா, செப்பாத் என்னும் ஆறுபேர்.

23நெயாரியாவின் மகன்கள் எலியோனாய், எசேக்கியா, அஸ்ரிக்காம் என்னும் மூன்றுபேர்.

24எலியோனாவின் ஏழு மகன்கள் ஒதாயா, எலியாசிப், பெலாயா, அக்கூப், யோகனான், தெலாயா, ஆனானி என்பவர்கள்.

← 1 Chronicles 2Read In The App, Free →1 Chronicles 4 →

Study 1 Chronicles 3

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

1234567891011121314151617181920212223242526272829