2 Samuel · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

2 Samuel 22

1யெகோவா தாவீதை அவனுடைய எல்லா எதிரிகளின் கைக்கும், சவுலின் கைக்கும், விலக்கி விடுவித்தபோது, அவன் யெகோவாவுக்கு முன்பாகப் பாடின பாட்டு: 1

2“யெகோவா என்னுடைய கன்மலையும், 1 என்னுடைய கோட்டையும், 1 என்னுடைய இரட்சகருமானவர். 1

3தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையும், 1 என்னுடைய கேடகமும், என்னுடைய பாதுகாப்பின் கொம்பும், 1 என்னுடைய உயர்ந்த அடைக்கலமும், 1 என்னுடைய இருப்பிடமும், 1 என்னுடைய இரட்சகருமானவர்; 1 என்னைத் துன்பத்திற்கு விலக்கி இரட்சிக்கிறவர் அவரே. 1

4துதிக்குக் காரணரான யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவேன்; 1 அதனால் என்னுடைய எதிரிகளுக்கு விலக்கி இரட்சிக்கப்படுவேன். 1

5மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு, 1 பயனற்ற வெள்ளப்பெருக்கு என்னைப் பயப்படுத்தினது. 1

6பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டது; 1 மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது. 1

7எனக்கு உண்டான நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு, 1 என்னுடைய தேவனை நோக்கிக் கூப்பிட்டேன்; 1 தமது ஆலயத்திலிருந்து என்னுடைய சத்தத்தைக் கேட்டார்; 1 என்னுடைய கூப்பிடுதல் அவர் செவிகளில் விழுந்தது. 1

8அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது; 1 அவர் கோபங்கொண்டதால் வானத்தின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது. 1

9அவர் நாசியிலிருந்து புகை வந்தது, 1 அவர் வாயிலிருந்து ஒளிவீசும் அக்கினி புறப்பட்டது, 1 அதனால் தீப்பற்றிக்கொண்டது. 1

10வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது. 1

11கேருபீனின்மேல் ஏறி வேகமாகப் பறந்து சென்றார். 1 காற்றின் இறக்கைகளின்மேல் காட்சியளித்தார். 1

12வானத்து மேகங்களில் கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார். 1

13அவருக்கு முன்பாக இருந்த மின்னலினால் நெருப்புத்தழலும் எரிந்தது. 1

14யெகோவா வானத்திலிருந்து இடியைப்போல முழங்கி, 1 சர்வவல்லமையுள்ள தேவன் தமது சத்தத்தைத் தொனிக்கச் செய்தார். 1

15அவர் அம்புகளை எய்து, 1 அவர்களைச் சிதறடித்து, 1 மின்னல்களை உபயோகித்து, 1 அவர்களைச் சிதறடித்தார். 1

16யெகோவாவுடைய கடிந்துகொள்ளுதலினாலும், அவருடைய நாசியின் சுவாசக் காற்றினாலும் சமுத்திரத்தின் மதகுகள் திறக்கப்பட்டு, 1 பூமியின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது. 1

17உயரத்திலிருந்து அவர் கை நீட்டி, 1 என்னைப் பிடித்து, வெள்ளப்பெருக்கில் இருக்கிற என்னைத் தூக்கிவிட்டார். 1

18என்னைவிட பெலவானாக இருந்த 1 என்னுடைய எதிரிக்கும் என்னுடைய விரோதிகளுக்கும் என்னை விடுவித்தார். 1

19என்னுடைய ஆபத்து நாளிலே எனக்கு எதிராக வந்தார்கள்; 1 யெகோவாவோ எனக்கு ஆதரவாக இருந்தார். 1

20என்மேல் அவர் பிரியமாக இருந்தபடியால், 1 என்னைத் தப்புவித்தார். + 22:20 விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து 1

21யெகோவா என்னுடைய நீதிக்குத்தகுந்தபடி எனக்கு பதில் அளித்தார்; 1 என்னுடைய கைகளின் சுத்தத்திற்குத்தகுந்தபடி 1 எனக்குச் சரிக்கட்டினார். 1

22யெகோவாவுடைய வழிகளைக் காத்துக்கொண்டுவந்தேன்; 1 நான் என்னுடைய தேவனுக்குத் துரோகம் செய்ததில்லை. 1

23அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; 1 நான் அவருடைய கட்டளைகளைவிட்டு விலகாமல், 1

24அவருக்கு முன்பாக மன உண்மையாக இருந்து, 1 பாவத்திற்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன். 1

25ஆகையால் யெகோவா என்னுடைய நீதிக்குத் தகுந்தபடியும், 1 தம்முடைய கண்களுக்கு முன்பாக இருக்கிற என்னுடைய சுத்தத்திற்குத்தகுந்தபடியும் எனக்கு பலனளித்தார். 1

26தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், 1 உத்தமனுக்கு நீர் உத்தமராகவும், 1

27புனிதனுக்கு நீர் புனிதராகவும், 1 மாறுபாடு உள்ளவர்களுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர். 1

28சிறுமைப்பட்ட மக்களை இரட்சிப்பீர்; 1 பெருமையுள்ளவர்களைத் தாழ்த்த, 1 உம்முடைய கண்கள் அவர்களுக்கு விரோதமாகத் திருப்பப்பட்டிருக்கிறது. 1

29கர்த்தராகிய தேவரீர் என்னுடைய விளக்காக இருக்கிறீர்; 1 யெகோவா என்னுடைய இருளை வெளிச்சமாக்குகிறவர். 1

30உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன் + 22:30 மிதிப்பேன்; 1 என்னுடைய தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன். 1

31தேவனுடைய வழி உத்தமமானது; 1 யெகோவாவுடைய வசனம் சுத்தமானது; 1 தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாக இருக்கிறார். 1

32யெகோவாவைத் தவிர தேவன் யார்? 1 நம்முடைய தேவனையன்றி கன்மலையும் யார்? 1

33தேவன் எனக்குப் பெலத்த அரணானவர்; 1 அவர் என்னுடைய வழியைச் செவ்வைப்படுத்துகிறவர். 1

34அவர் என்னுடைய கால்களை மான்களுடைய கால்களைப்போல மாற்றி, 1 உயர்ந்த மலைகளில் என்னை நிறுத்துகிறார். 1

35வெண்கல வில்லும் என்னுடைய கரங்களால் வளையும்படி, 1 என்னுடைய கைகளை யுத்தத்திற்குப். 1

36உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; 1 உம்முடைய தயவு என்னைப் பெரியவனாக்கும். 1

37என்னுடைய கால்கள் வழுக்காதபடி நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர். 1

38என்னுடைய எதிரிகளைப் பின்தொடர்ந்து அவர்களை அழிப்பேன்; 1 அவர்களை அழிக்கும்வரைக்கும் திரும்பமாட்டேன். 1

39அவர்கள் எழுந்திருக்கமுடியாதபடி என்னுடைய பாதங்களின்கீழ் விழுந்தார்கள்; 1 அவர்களை முறியடித்து வெட்டினேன். 1

40யுத்தத்திற்கு நீர் என்னை பெலத்தால் இடைகட்டி, 1 என்மேல் எழும்பினவர்களை என்கீழ் விழும்படிச் செய்தீர். 1

41நான் என்னுடைய விரோதியை அழிக்கும்படி, 1 என்னுடைய எதிரிகளின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர். 1

42அவர்கள் நோக்கிப் பார்க்கிறார்கள், 1 அவர்களை இரட்சிப்பவர்கள் ஒருவருமில்லை; 1 யெகோவாவை நோக்கிப் பார்க்கிறார்கள், 1 அவர்களுக்கு அவர் பதில் கொடுக்கிறதில்லை. 1

43அவர்களை பூமியின் தூளாக இடித்து, 1 தெருக்களின் சேற்றைப்போல அவர்களை மிதித்து சிதறச்செய்கிறேன். 1

44என்னுடைய மக்களின் சண்டைகளுக்கு நீர் என்னை விலக்கிவிட்டு, 1 தேசங்களுக்கு என்னைத் தலைவனாக வைக்கிறீர்; 1 நான் அறியாத மக்கள் என்னைப் பணிகிறார்கள். 1

45அந்நியர்கள் எனக்கு எதிராகப் பேசி அடங்கி, 1 என்னுடைய சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள். 1

46அந்நியர்கள் பயந்துபோய், 1 தங்கள் கோட்டைகளிலிருந்து பயத்தோடு புறப்படுகிறார்கள். 1

47யெகோவா ஜீவனுள்ளவர்; என்னுடைய கன்மலையானவர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக; 1 என்னுடைய இரட்சிப்பின் கன்மலையான தேவன் உயர்ந்திருப்பாராக. 1

48அவர் எனக்காகப் பழிக்குப் பழி வாங்கி, 1 மக்களை எனக்குக் 1 கீழ்ப்படுத்துகிற தேவனானவர். 1

49அவரே என்னுடைய எதிரிகளுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; 1 எனக்கு விரோதமாக எழும்புகிறவர்கள்மேல் 1 என்னை உயர்த்திக் கொடுமையான மனிதனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர். 1

50இதனால் யெகோவாவே, 1 தேசங்களுக்குள் உம்மைத் துதித்து, 1 உம்முடைய நாமத்திற்கு துதிப் பாடல்கள் பாடுவேன். 1

51தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு 1 மகத்தான இரட்சிப்பை அளித்து, 1 தாம் அபிஷேகம்செய்த தாவீதுக்கும் 1 அவனுடைய சந்ததிக்கும் என்றென்றும் கிருபை செய்கிறார்.”

← 2 Samuel 21Read In The App, Free →2 Samuel 23 →

Study 2 Samuel 22

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324