Deuteronomy · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Deuteronomy 33

1தேவனுடைய மனிதனாகிய மோசே தான் மரணமடைவதற்கு முன்னே இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதித்த ஆசீர்வாதமாவது: 1

2“யெகோவா சீனாயிலிருந்து எழுந்தருளி, 1 சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; 1 பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, 1 பத்தாயிரங்களான பரிசுத்தவான்களுடன் வெளிப்பட்டார்; 1 அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது. 1

3உண்மையாகவே அவர் மக்களை நேசிக்கிறார்; 1 அவருடைய பரிசுத்தவான்கள் எல்லோரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள்; 1 அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து, 1 உம்முடைய வார்த்தைகளினால் போதிக்கப்படுவார்கள். 1

4மோசே நமக்கு ஒரு நியாயப்பிரமாணத்தைக் கற்பித்தான்; 1 அது யாக்கோபின் சபைக்குச் சொந்தமானது. 1

5மக்களின் தலைவர்களும் இஸ்ரவேலின் கோத்திரங்களும் ஒன்றாகக்கூடினபோது 1 அவர் யெஷூரனுக்கு ராஜாவாயிருந்தார். 1

6“ரூபன் மரணமடையாமல் பிழைப்பானாக; 1 அவன் மக்கள் குறைவாக இருக்கமாட்டார்கள்” என்றான். 1

7அவன் யூதாவைக்குறித்து: “யெகோவாவே, யூதாவின் சத்தத்தைக் கேட்டு, 1 அவன் தன்னுடைய மக்களிடத்திற்கு திரும்பிவரச் செய்யும்; 1 அவனுடைய கை பலப்படுவதாக; 1 அவனுடைய எதிரிகளுக்கு அவனைப் பாதுகாத்து விடுவிக்கிற உதவி செய்கிறவராக இருப்பீராக” என்றான். 1

8லேவியர்களைக்குறித்து: “நீ மாசாவிலே பரீட்சைபார்த்து, 1 மேரிபாவின் தண்ணீரின் அருகில் வாக்குவாதம்செய்த உன் பரிசுத்த மனிதனிடம் 1 உன்னுடைய தும்மீம் ஊரீம் என்பவைகள் இருப்பதாக. 1

9தன்னுடைய தகப்பனையும், 1 தாயையும் குறித்து நான் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டேன் என்று சொல்லி, 1 தன் சகோதரர்களையும், பிள்ளைகளையும் 1 ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறவனிடத்தில் அவைகள் இருப்பதாக; 1 அவர்கள் உம்முடைய வார்த்தைகளைக் கைக்கொண்டு, 1 உம்முடைய உடன்படிக்கையைக் காக்கிறவர்கள். 1

10அவர்கள் யாக்கோபுக்கு உம்முடைய நியாயங்களையும், 1 இஸ்ரவேலுக்கு உம்முடைய பிரமாணத்தையும் கற்பித்து, 1 உமது சந்நிதானத்திலே தூபவர்க்கத்தையும், 1 உமது பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலிகளையும் செலுத்துவார்கள். 1

11யெகோவாவே, அவனுடைய ஆஸ்தியை ஆசீர்வதித்து, 1 அவன் கையின் செயல்களின்மேல் பிரியமாயிரும்; 1 அவனைப் பகைத்து அவனுக்கு விரோதமாக எழும்புகிறவர்கள் 1 திரும்ப எழுந்திருக்காதபடி அவர்களுடைய இடுப்புகளை நொறுக்கிவிடும்” என்றான். 1

12பென்யமீனைக்குறித்து: 1 “யெகோவாவுக்குப் பிரியமானவன், 1 அவருடன் சுகமாகத் தங்கியிருப்பான்; 1 அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, 1 அவனுடைய எல்லைக்குள்ளே தங்கியிருப்பார்” என்றான். 1

13யோசேப்பைக்குறித்து: “யெகோவாவால் அவனுடைய தேசம் ஆசீர்வதிக்கப்படுவதாக; 1 அது வானத்தின் செல்வத்தினாலும், பனியினாலும், ஆழத்திலுள்ள நீரூற்றுகளினாலும், 1

14சூரியன் பக்குவப்படுத்தும் அருமையான பழங்களினாலும், + 33:14 மோந்த்லி 1 சந்திரன் பக்குவப்படுத்தும் அருமையான பலன்களினாலும், 1

15பழமையான மலைகளில் உண்டாகும் விலையுயர்ந்த பொருட்களினாலும், 1 நித்திய மலைகளில் கிடைக்கும் அரிதான பொருட்களினாலும், 1

16நாடும் அதின் நிறைவும் கொடுக்கும் அருமையான தானியங்களினாலும் ஆசீர்வதிக்கப்படுவதாக. 1 முட்செடியில் காட்சியளித்தவரின் தயவு யோசேப்புடைய தலையின்மேலும், 1 தன் சகோதரர்களில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக. 1

17அவனுடைய அலங்காரம் அவன் முதற்பிறந்த காளையினுடைய அலங்காரத்தைப்போலவும், 1 அவன் கொம்புகள் காண்டாமிருகத்தின் கொம்புகளைப்போலவும் இருக்கும்; 1 அவைகளாலே மக்கள் அனைவரையும் தேசத்தின் கடைசிவரை முட்டித் துரத்துவான்; 1 அவைகள் எப்பிராயீமின் பத்தாயிரங்களும் மனாசேயின் ஆயிரங்களுமானவைகள்” என்றான். 1

18“செபுலோனைக்குறித்து: செபுலோனே, 1 நீ வெளியே புறப்பட்டுப்போகும்போதும், இசக்காரே, 1 நீ உன் கூடாரங்களில் தங்கும்போதும் சந்தோஷமாயிரு. 1

19அவர்கள், மக்களை மலையின்மேல் வரவழைத்து, 1 அங்கே நீதியின் பலிகளைச் செலுத்துவார்கள்; 1 கடல்களிலுள்ள சம்பூரணத்தையும் மணலுக்குள்ளே மறைந்திருக்கும் பொருட்களையும் அநுபவிப்பார்கள்” என்றான். 1

20“காத்தைக்குறித்து: 1 காத்திற்கு விசாலமான இடத்தைக் கொடுக்கிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; 1 அவன் சிங்கத்தைப்போல் தங்கியிருந்து, 1 புயத்தையும் உச்சந்தலையையும் பீறிப்போடுவான். 1

21அவன் தனக்காக முதல் இடத்தைப் பார்த்துக்கொண்டான்; 1 அங்கே தனக்கு நியாயப்பிரமாணிகன் கொடுத்த பங்கு பத்திரமாயிருக்கிறது; 1 ஆனாலும் அவன் மக்களுக்கு முன்பாக வந்து, 1 மற்ற இஸ்ரவேலுடனே யெகோவாவின் நீதியையும் அவருடைய நியாயங்களையும் செய்வான்” என்றான். 1

22“தாணைக்குறித்து: தாண் ஒரு பாலசிங்கம், 1 அவன் பாசானிலிருந்து பாய்வான்” என்றான். 1

23“நப்தலியைக்குறித்து: நப்தலி யெகோவாவுடைய தயவினாலே திருப்தியடைந்து, 1 அவருடைய ஆசீர்வாதத்தினாலே நிறைந்திருப்பான். 1 நீ மேற்குத் திசையையும் தெற்குத் திசையையும் சொந்தமாக்கிக்கொள்” என்றான். 1

24ஆசேரைக்குறித்து: “ஆசேர் குழந்தை பாக்கியமுடையவனாக, தன் சகோதரர்களுக்குப் பிரியமாயிருந்து, 1 தன் காலை எண்ணெயிலே தோய்ப்பான். 1

25இரும்பும் வெண்கலமும் உன் காலணியின் கீழிருக்கும்; 1 உன் நாட்களுக்குத்தக்கதாக உன் பெலனும் இருக்கும் என்றான். 1

26“யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை; 1 அவர் உனக்கு உதவியாக வானங்களின்மேலும் 1 தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின் மேலும் ஏறிவருகிறார். 1

27அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; 1 அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; 1 அவர் உனக்கு முன்னின்று எதிரிகளைத் துரத்தி, 1 அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார். 1

28இஸ்ரவேல் சுகமாகத் தனித்து குடியிருப்பான்; 1 யாக்கோபின் ஊற்றானது + 33:28 வாசஸ்தலம் தானியமும் திராட்சைரசமும் உள்ள தேசத்திலே இருக்கும்; 1 அவருடைய வானமும் பனியைப் பெய்யும். 1

29இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; யெகோவாவால் இரட்சிக்கப்பட்ட மக்களே, 1 உனக்கு ஒப்பானவன் யார்? 1 உனக்கு உதவிசெய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே; 1 உன் எதிரிகள் உன்னை நிந்தித்துப் பேசி அடங்குவார்கள்; 1 அவர்களுடைய மேடுகளை + 33:29 முதுகுகளை. மிதிப்பாய்” என்று சொன்னான்.

← Deuteronomy 32Read In The App, Free →Deuteronomy 34 →

Study Deuteronomy 33

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031323334