Habakkuk · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Habakkuk 3

1ஆபகூக் தீர்க்கதரிசி சிகாயோனில் பாடின விண்ணப்பம். 1

2யெகோவாவே, நீர் வெளிப்படுத்தினதை நான் கேட்டேன், 1 எனக்குப் பயமுண்டானது; 1 யெகோவாவே, வருடங்களின் நடுவிலே உம்முடைய செயலை உயிர்ப்பியும், 1 வருடங்களின் நடுவிலே அதை விளங்கச்செய்யும்; 1 கோபித்தாலும் இரக்கத்தை நினைத்தருளும். 1

3தேவன் தேமானிலிருந்தும், 1 பரிசுத்தர் பாரான் மலையிலிருந்தும் வந்தார்; (சேலா.) 1 அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; 1 அவர் துதியினால் பூமி நிறைந்தது. 1

4அவருடைய பிரகாசம் சூரியனைப்போலிருந்தது; 1 அவருடைய கரத்திலிருந்து கிரணங்கள் வீசின; 1 அங்கே அவருடைய பராக்கிரமம் மறைந்திருந்தது. 1

5அவருக்கு முன்பாகக் கொள்ளைநோய் சென்றது; 1 அவர் அடிகளிலிருந்து எரிபந்தமான காய்ச்சல் புறப்பட்டது. 1

6அவர் நின்று பூமியை அளந்தார் + 3:6 அசைத்தார்; 1 அவர் பார்த்து அந்நிய மக்களைக் கரையச்செய்தார்; 1 முந்தின மலைகள் சிதறடிக்கப்பட்டது, 1 என்றுமுள்ள மலைகள் தாழ்ந்தது; 1 அவருடைய நடைகள் நித்திய நடைகளாயிருந்தது. 1

7கூஷானின் கூடாரங்கள் வருத்தத்தில் அகப்பட்டிருக்கக்கண்டேன்; 1 மீதியான் தேசத்தின் கூடாரங்கள் நடுங்கின. 1

8யெகோவா நதிகளின்மேல் கோபமாயிருந்தாரோ? 1 தேவரீர் உம்முடைய குதிரைகளின்மேலும் காப்பாற்றுகிற உம்முடைய இரதங்களின்மேலும் ஏறிவருகிறபோது, 1 உமது கோபம் நதிகளுக்கும் உமது சினம் சமுத்திரத்திற்கும் விரோதமாயிருந்ததோ? 1

9கோத்திரங்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த வாக்கின்படியே உம்முடைய வில் நாணேற்றப்பட்டதாக விளங்கினது; (சேலா.) 1 நீரே பூமியைப் பிளந்து ஆறுகளை உண்டாக்கினீர். 1

10மலைகள் உம்மைக்கண்டு நடுங்கின; 1 தண்ணீர் திரண்டு கடந்துபோனது; 1 கடல் இரைந்தது, அதின் அலைகளை + 3:10 கைகளைஉயர எழுந்தது. 1

11சந்திரனும் சூரியனும் தன்தன் மண்டலத்தில் நின்றன; 1 உமது அம்புகளின் வெளிச்சத்திலும், 1 உமது ஈட்டியினுடைய மின்னல் பிரகாசத்திலும் நடந்தன. 1

12நீர் கோபத்துடன் பூமியில் நடந்தீர், 1 உக்கிரத்துடன் மக்களைப் போரடித்தீர். 1

13உமது மக்களின் பாதுகாப்பிற்காகவும் 1 நீர் அபிஷேகம்செய்தவனின் பாதுகாப்பிற்காகவுமே நீர் புறப்பட்டீர்; 1 கழுத்தளவாக அஸ்திபாரத்தைத் திறப்பாக்கி, 1 தீயவனுடைய வீட்டிலிருந்த தலைவனை வெட்டினீர்; (சேலா) 1

14என்னைச் சிதறடிப்பதற்குப் பெருங்காற்றைப்போல் வந்தார்கள்; 1 சிறுமையானவனை மறைவிடத்திலே அழிப்பது அவர்களுக்குச் சந்தோஷமாயிருந்தது; 1 நீர் அவனுடைய ஈட்டிகளினாலேயே அவனுடைய சேனைகளின் அதிபதிகளை + 3:14 அவனுடைய தலையை உருவக் குத்தினீர். 1

15திரளான தண்ணீர் குவியலாகிய சமுத்திரத்திற்குள் உமது குதிரைகளுடன் நடந்துபோனீர். 1

16நான் கேட்டபோது என் குடல் குழம்பியது; 1 அந்தச் சத்தத்திற்கு என் உதடுகள் துடித்தது; என் எலும்புகளில் பெலவீனம் உண்டானது; 1 என் நிலையிலே நடுங்கினேன்; 1 ஆனாலும் எங்களோடு எதிர்க்கும் மக்கள் வரும்போது, 1 இக்கட்டுநாளிலே நான் இளைப்பாறுதல் அடைவேன். 1 விசுவாசப் பாடல் 1

17அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், 1 திராட்சைச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், 1 ஒலிவமரத்தின் பலன் இல்லாமல் போனாலும், 1 வயல்கள் தானியத்தை விளைவிக்காமற்போனாலும், 1 கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், 1 தொழுவத்திலே மாடுகள் இல்லாமற்போனாலும், 1

18நான் யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், 1 என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன். 1

19ஆண்டவராகிய யெகோவா என் பெலன்; 1 அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, 1 உயரமான இடங்களில் என்னை நடக்கச்செய்வார். இது நெகிநோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்டப் பாடல்.

← Habakkuk 2Read In The App, Free →Zephaniah 1 →

Study Habakkuk 3

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123