Judges · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Judges 5

1அந்த நாட்களிலே தெபொராளும் அபினோகாமின் மகன் பாராக்கும் பாடினது: 1

2“ + 5:2 யெகோவா இஸ்ரவேலுக்காக நீதியைச் சரிக்கட்டியதற்காகவும் யுத்தத்தை இஸ்ரவேலின் அதிபதிகள் நடத்தினதற்காகவும், 1 மக்கள் மனப்பூர்வமாகத் தங்களை ஒப்புக்கொடுத்ததற்காகவும் அவரை ஸ்தோத்திரியுங்கள். 1

3ராஜாக்களே, கேளுங்கள்; 1 அதிபதிகளே, செவிகொடுங்கள்; 1 நான் யெகோவாவைப் பாடி, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவைக் கீர்த்தனம்செய்வேன். 1

4யெகோவாவே, நீர் சேயீரிலிருந்து புறப்பட்டு, 1 ஏதோமின் வெளியிலிருந்து நடந்து வரும்போது, 1 பூமி அதிர்ந்தது, வானம் பொழிந்தது, 1 மேகங்களும் தண்ணீராகப் பொழிந்தது. 1

5யெகோவாவுக்கு முன்பாக மலைகள் அதிர்ந்தது; 1 இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக சீனாய் மலையும் அதிர்ந்தது. 1

6ஆனாத்தின் மகனான சம்காரின் நாட்களிலும், 1 யாகேலின் நாட்களிலும், பெரும்பாதைகள் 1 பாழாய்ப் போனது; வழியில் நடக்கிறவர்கள் பக்கவழியாக நடந்தார்கள். 1

7தெபொராளாகிய நான் எழும்பும்வரைக்கும், 1 இஸ்ரவேலிலே நான் தாயாக எழும்பும்வரைக்கும், 1 கிராமங்கள் பாழாய்ப்போயின, இஸ்ரவேலின் கிராமங்கள் பாழாய்ப்போனது. 1

8புதிய தெய்வங்களைத் தெரிந்துகொண்டார்கள்; அப்பொழுது யுத்தம் வாசல்வரையும் வந்தது; இஸ்ரவேலிலே 40,000 பேருக்குள்ளே கேடகமும் ஈட்டியும் காணப்பட்டதுண்டோ?

9மக்களுக்குள்ளே தங்களை மனப்பூர்வமாக ஒப்புக்கொடுத்த 1 இஸ்ரவேலின் அதிபதிகளை என்னுடைய இருதயம் நாடுகிறது; 1 யெகோவாவை ஸ்தோத்திரியுங்கள். 1

10வெள்ளைக் கழுதைகளின் சேணத்தின் விரிப்புகளில் வீற்றிருக்கிறவர்களே, 1 வழியில் நடக்கிறவர்களே, 1 இதைப் பற்றி யோசியுங்கள். 1

11தண்ணீர் மொண்டுகொள்ளும் இடங்களில் வில்வீரர்களின் + 5:11 சங்கீத பாடகர்கள் இரைச்சலுக்கு நீங்கினவர்கள் 1 அங்கே யெகோவாவின் நீதிநியாயங்களையும், 1 அவர் இஸ்ரவேலிலுள்ள தமது கிராமங்களுக்குச் செய்த 1 நீதிநியாயங்களையும் அறிவிப்பார்கள்; 1 அதுமுதல் யெகோவாவின் மக்கள் 1 நகரத்தின் வாசல்களில் போய் இறங்குவார்கள். 1

12விழி, விழி, தெபொராளே, விழி, விழி, பாட்டுப்பாடு; 1 பாராக்கே, எழும்பு; அபினோகாமின் குமாரனே, 1 உன்னைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கிக்கொண்டுபோ. 1

13மீதியாக இருந்தவர்கள் மக்களின் தலைவர்களை ஆளும்படி செய்தார்; 1 யெகோவா எனக்குப் பெலசாலிகளின்மேல் ஆளுகை தந்தார். 1

14அமலேக்குக்கு விரோதமாக இவர்களுடைய வேர் எப்பிராயீமிலிருந்து துளிர்த்தது; 1 உன்னுடைய மக்களுக்குள்ளே பென்யமீன் மனிதர்கள் உனக்குப் பின்சென்றார்கள்; 1 மாகீரிலிருந்து அதிபதிகளும், 1 செபுலோனிலிருந்து எழுதுகோலைப் பிடிக்கிறவர்களும் இறங்கிவந்தார்கள். 1

15இசக்காரின் பிரபுக்களும் தெபொராளோடு இருந்தார்கள்; 1 பாராக்கைப்போல இசக்கார் மனிதர்களும் 1 பள்ளத்தாக்கில் கால்நடையாக அனுப்பப்பட்டார்கள்; 1 ரூபனின் பிரிவினைகளால் உண்டான இருதயத்தின் நினைவுகள் மிகுதி. 1

16மந்தைகளின் சத்தத்தைக் கேட்க, 1 நீ தொழுவங்களின் நடுவே இருந்துவிட்டது என்ன? 1 ரூபனின் பிரிவினைகளால் மனதின் வேதனைகள் மிகுதி. 1

17கீலேயாத் மனிதர்கள் யோர்தானுக்கு அக்கரையிலே இருந்துவிட்டார்கள்; 1 தாண் மனிதர்கள் கப்பல்களில் தங்கியிருந்தது என்ன? 1 ஆசேர் மனிதர்கள் கடற்கரையிலே தங்கி, 1 மூன்று பக்கமும் தரைசூழ்ந்தகடல் பகுதிகளில் வாழ்ந்தார்கள். 1

18செபுலோனும் நப்தலியும் போர்க்களத்து முனையிலே தங்கள் உயிரை எண்ணாமல் 1 மரணத்திற்குத் துணிந்து நின்றார்கள். 1

19ராஜாக்கள் வந்து யுத்தம்செய்தார்கள்; 1 அப்பொழுது கானானியர்களின் ராஜாக்கள் மெகிதோவின் தண்ணீர் அருகான தானாக்கிலே யுத்தம்செய்தார்கள்; 1 அவர்களுக்கு வெள்ளி கொள்ளைப் பொருளாக கிடைக்கவில்லை. 1

20வானத்திலிருந்து யுத்தம் உண்டாயிற்று; 1 நட்சத்திரங்கள் தங்கள் வானமண்டலங்களிலிருந்து சிசெராவோடு யுத்தம் செய்தன. 1

21கீசோன் நதி, பூர்வ நதியாகிய கீசோன் நதியே, 1 அவர்களை அடித்துக்கொண்டு போனது; என்னுடைய ஆத்துமாவே, 1 நீ பெலவான்களை மிதித்தாய். 1

22அப்பொழுது குதிரைகளின் குளம்புகள் பாய்ச்சலினாலே, 1 பெலவான்களின் பாய்ச்சலினாலேயே, பிளந்துபோயின. 1

23மேரோசைச் சபியுங்கள்; 1 அதின் குடிகளை நிச்சயமாகவே சபியுங்கள் என்று 1 யெகோவாவுடைய தூதனானவர் சொல்லுகிறார்; 1 அவர்கள் யெகோவாவோடு துணை நிற்க வரவில்லை; 1 பலசாலிகளுக்கு எதிராக அவர்கள் யெகோவாவோடு துணைநிற்க வரவில்லையே. 1

24பெண்களுக்குள்ளே கேனியனான ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஆசீர்வதிக்கப்பட்டவள்; 1 கூடாரத்தில் தங்கியிருக்கிற பெண்களுக்குள்ளே அவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே. 1

25தண்ணீரைக் கேட்டான், 1 பாலைக் கொடுத்தாள்; 1 ராஜாக்களின் கிண்ணத்திலே வெண்ணெயைக் கொண்டுவந்து கொடுத்தாள். 1

26தன்னுடைய கையால் ஆணியையும், 1 தன்னுடைய வலது கையால் தொழிலாளரின் சுத்தியையும் பிடித்து, 1 சிசெராவை அடித்தாள்; 1 அவனுடைய தலையில் உருவக்குத்தி, 1 அவனுடைய தலையை உடைத்துப்போட்டாள். 1

27அவன் அவளுடைய காலின் அருகே மடங்கி விழுந்தான்; 1 அவன் எங்கே மடங்கி விழுந்தானோ அங்கே இறந்துகிடந்தான். 1

28“சிசெராவின் தாய் ஜன்னலில் நின்று ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்து: 1 அவனுடைய இரதம் வராமல் தாமதமானது என்ன? 1 அவனுடைய இரதங்களின் ஓட்டம் தாமதிக்கிறது என்ன’ என்று புலம்பினாள். 1

29அவளுடைய பெண்களில் புத்திசாலிகள் அவளுக்கு பதில் சொன்னதுமின்றி, அவள் தனக்குத் தானே மறுமொழியாக: 1

30அவர்கள் கொள்ளையைக் கண்டுபிடிக்கவில்லையோ, அதைப் பங்கிடவேண்டாமோ, 1 ஆளுக்கு ஒன்று அல்லது இரண்டு பெண்களையும், 1 சிசெராவுக்குக் கொள்ளையிட்ட பலவர்ணமான ஆடைகளையும், 1 கொள்ளையிட்ட பலவர்ணமான சித்திரத் தையலாடைகளையும், + 5:30 கொள்ளையிட்டவர்களின் என் 1 கழுத்திற்கு இருபுறமும் பொருந்தும் சித்திர வேலை செய்யப்பட்டுள்ள பலநிறமான ஆடையையும் கொடுக்கவேண்டாமோ என்றாள். 1

31யெகோவாவே, உம்மைப் பகைக்கிற அனைவரும் இப்படியே அழியட்டும்; 1 அவரிடம் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடு உதிக்கிற சூரியனைப்போல இருக்கட்டும்” என்று பாடினார்கள். பின்பு தேசம் 40 வருடங்கள் அமைதலாக இருந்தது.

← Judges 4Read In The App, Free →Judges 6 →

Study Judges 5

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021