Lamentations · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Lamentations 3

1ஆண்டவருடைய கோபத்தின் பிரம்பினால் ஏற்பட்ட சிறுமையைக் கண்ட மனிதன் நான். 1

2அவர் என்னை வெளிச்சத்திலே அல்ல, 1 இருளிலே அழைத்து நடத்திவந்தார். 1

3அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே தினமும் திருப்பினார். 1

4என் சதையையும், என் தோலையும் கடினமாக்கினார்; 1 என் எலும்புகளை நொறுக்கினார். 1

5அவர் எனக்கு விரோதமாக மதிலைக்கட்டி, 1 கசப்பினாலும் வருத்தத்தினாலும் என்னைச் சூழ்ந்துகொண்டார். 1

6ஆரம்பகாலத்தில் இறந்தவர்களைப்போல என்னை இருளான இடங்களில் கிடக்கச்செய்தார். 1

7நான் தப்பிப்போகாமலிருக்க என்னைச்சூழ வேலியடைத்தார்; 1 என் விலங்கை கடினமாக்கினார். 1

8நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், 1 என் ஜெபத்திற்கு வழியை அடைத்துப்போட்டார். 1

9வெட்டின கற்களின் சுவரால் என் வழிகளை அடைத்துப்போட்டார், 1 என் பாதைகளைத் தாறுமாறாக்கினார். 1

10அவர் எனக்காகப் பதுங்கியிருக்கிற கரடியும், 1 மறைவிடங்களில் தங்குகிற சிங்கமுமாயிருக்கிறார். 1

11என்னுடைய வழிகளை அகற்றி, என்னைத் துண்டித்துப்போட்டார்; 1 என்னைப் பயனற்றவனாக்கிவிட்டார். 1

12தமது வில்லை நாணேற்றி, என்னை அம்புக்கு இலக்காக வைத்தார். 1

13தம்முடைய அம்புகளை வைக்கும் பையின் அம்புகளை என் உள்ளத்தின் ஆழத்தில் படச்செய்தார். 1

14நான் என் மக்கள் அனைவருக்கும் பரியாசமும், 1 தினமும் அவர்களுடைய கின்னரப் பாடலுமானேன். 1

15கசப்பினால் என்னை நிரப்பி, 1 எட்டியினால் என்னை வெறுப்படையச்செய்தார். 1

16அவர் உணவிலுள்ள சிறுகற்களால் என் பற்களை நொறுக்கி, 1 என்னைச் சாம்பலில் புரளச்செய்தார். 1

17என் ஆத்துமாவைச் சமாதானத்திற்குத் தூரமாக்கினார்; 1 சுகத்தை மறந்தேன். 1

18என் பெலனும், நான் யெகோவாவுக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோனது என்றேன். 1

19எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும். 1

20என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் உடைந்துபோகிறது. 1

21இதை என் மனதிலே வைத்து நம்பிக்கை கொண்டிருப்பேன். 1

22நாம் அழிந்துபோகாமலிருக்கிறது யெகோவாவுடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. 1

23அவைகள் காலைதோறும் புதியவைகள்; 1 உமது உண்மை பெரிதாயிருக்கிறது. 1

24யெகோவா என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; 1 ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன். 1

25தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும், தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் யெகோவா நல்லவர். 1

26யெகோவாவுடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது. 1

27தன் இளவயதில் நுகத்தைச் சுமக்கிறது மனிதனுக்கு நல்லது. 1

28அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனிமையாயிருந்து மெளனமாயிருப்பானாக. 1

29நம்பிக்கைக்கு இடமுண்டோ என்று தன் வாய் மண்ணில்படும்படி குப்புறவிழுவானாக. 1

30தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, அவமானத்தால் நிறைந்திருப்பானாக. 1

31ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார். 1

32அவர் வருத்தப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி மனமிரங்குவார். 1

33அவர் மனப்பூர்வமாக மனுமக்களைச் சிறுமையாக்கி வருத்தப்படுத்துகிறதில்லை. 1

34ஒருவன் பூமியில் சிறைப்பட்டவர்கள் அனைவரையும் தன் கால்களின்கீழ் நசுக்குகிறதையும், 1

35உன்னதமான தேவனின் சமுகத்தில் மனிதர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறதையும், 1

36மனிதனை அவனுடைய வழக்கிலே மாறுபாடாக்குகிறதையும், ஆண்டவர் காணாதிருப்பாரோ? 1

37ஆண்டவர் கட்டளையிடாமல் இருக்கும்போது, 1 காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்? 1

38உன்னதமான தேவனுடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ? 1

39உயிருள்ள மனிதன் முறையிடுவானேன்? அவன் தன்னுடைய பாவத்திற்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன? 1

40நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, யெகோவாவிடத்தில் திரும்பக்கடவோம். 1

41நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுப்போமாக. 1

42நாங்கள் துரோகம்செய்து, கலகம்செய்தோம்; 1 ஆகையால் தேவரீர் மன்னிக்காமல் இருந்தீர். 1

43தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின்தொடர்ந்து கொன்றீர். 1

44ஜெபம் உள்ளே நுழையமுடியாதபடி உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர். 1

45மக்களுக்குள்ளே எங்களைக் குப்பையும் அருவருப்புமாக்கினீர். 1

46எங்கள் பகைவர்கள் எல்லோரும் எங்களுக்கு விரோதமாகத் தங்கள் வாயைத் திறந்தார்கள். 1

47பயமும், படுகுழியும், பயனற்றநிலையும், அழிவும் எங்களுக்கு நேரிட்டது. 1

48மகளாகிய என் மக்கள் அடைந்த கேட்டினால் என் கண்களிலிருந்து கண்ணீர் வடிகிறது. 1

49யெகோவா பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்கும்வரை, 1

50என் கண் இடைவிடாமல் ஓய்வின்றி வழிகிறது. 1

51என் பட்டணத்தின் பெண்கள் அனைவரினிமித்தம், 1 என் கண் என் ஆத்துமாவுக்கு வேதனையுண்டாக்குகிறது. 1

52காரணமே இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பறவையைப்போல வேட்டையாடினார்கள். 1

53படுகுழியிலே என் உயிரை ஒடுக்கி, என்மேல் கல்லைவைத்தார்கள். 1

54தண்ணீர் என் தலைக்குமேல் வந்தது; அழிந்தேன் என்றேன். 1

55மகா ஆழமான குழியிலிருந்து, யெகோவாவே, 1 உம்முடைய பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன். 1

56என் சத்தத்தைக் கேட்டீர்; என் பெருமூச்சுக்கும் என் கூப்பிடுதலுக்கும் உமது செவியை அடைத்துக்கொள்ளாதேயும். 1

57நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டநாளிலே நீர் கேட்டு: பயப்படாதே என்றீர். 1

58ஆண்டவரே, என் ஆத்துமாவின் வழக்கை நடத்தினீர்; 1 என் உயிரை மீட்டுக்கொண்டீர். 1

59யெகோவாவே, எனக்கு உண்டான அநியாயத்தைக் கண்டீர்; எனக்கு நியாயம் செய்யும். 1

60அவர்களுடைய எல்லா விரோதத்தையும், 1 அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும் கண்டீர். 1

61யெகோவாவே, அவர்கள் அவமதித்த அவமானங்களையும், 1 அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும், 1

62எனக்கு விரோதமாக எழும்பினவர்களின் வாய்ச்சொற்களையும், 1 அவர்கள் நாள்முழுவதும் எனக்கு விரோதமாக யோசிக்கும் யோசனைகளையும் கேட்டீர். 1

63அவர்கள் உட்கார்ந்திருப்பதையும் அவர்கள் எழுந்திருப்பதையும் நோக்கிப் பாரும்; 1 நான் அவர்களுடைய பாடலாயிருக்கிறேன். 1

64யெகோவாவே, அவர்களுடைய கைகள் செய்த செயல்களுக்குத்தக்கதாக அவர்களுக்குப் பலன் கொடுப்பீர். 1

65அவர்களுக்கு மனவேதனையைக் கொடுப்பீர், 1 உம்முடைய சாபம் அவர்கள்மேல் இருக்கும். 1

66கோபமாக அவர்களைப் பின்தொடர்ந்து, 1 யெகோவாவுடைய வானங்களின் கீழே அவர்கள் இல்லாதபடி அவர்களை அழித்துவிடுவீர்.

← Lamentations 2Read In The App, Free →Lamentations 4 →

Study Lamentations 3

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345