Lamentations · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Lamentations 4

1ஐயோ, தங்கம் மங்கி, சுத்தத் தங்கம் மாறி, 1 பரிசுத்த ஸ்தலத்தின் கற்கள் சகல வீதிகளின் முனையிலும் கொட்டப்பட்டதே. 1

2ஐயோ, தங்கத்துக்கொப்பான விலையேறப்பெற்ற மகன்களாகிய சீயோன், 1 குயவனுடைய கைவேலையான மண்பாத்திரங்களைப்போல நினைக்கப்படுகிறார்களே. 1

3திமிங்கிலங்கள் முதற்கொண்டு மார்பகங்களை நீட்டி, 1 தங்கள் குட்டிகளுக்குப் பால் கொடுக்கும்; 1 என் மகளாகிய மக்களோ வனாந்தரத்திலுள்ள நெருப்புக்கோழியைப்போல் கடின மனமுள்ளவளாக இருக்கிறாளே. 1

4குழந்தைகளின் நாக்கு தாகத்தால் மேல்வாயோடே ஒட்டிக்கொண்டிருக்கிறது; 1 பிள்ளைகள் உணவுகேட்கிறார்கள், அவர்களுக்கு கொடுப்பவர்கள் இல்லை. 1

5சுவையான உணவுகளைச் சாப்பிட்டவர்கள் வீதிகளில் பயனற்றுக்கிடக்கிறார்கள்; 1 இரத்தாம்பரம் உடுத்தி வளர்ந்தவர்கள் குப்பைமேடுகளை அணைத்துக்கொள்கிறார்கள். 1

6உதவி செய்பவர்கள் இல்லாமல், ஒரு நிமிடத்திலே அழிக்கப்பட்ட 1 சோதோமின் பாவத்திற்கு வந்த தண்டனையைவிட 1 என் மகளாகிய மக்களின் அக்கிரமத்திற்கு வந்த தண்டனை பெரிதாயிருக்கிறது. 1

7அவளுடைய தலைவர்கள் உறைந்த மழையைவிட சுத்தமும், 1 பாலைவிட வெண்மையும், பவளத்தைவிட சிவப்பும், 1 இந்திரநீலத்தைவிட பலமுள்ள தோற்றமுமாக இருந்தார்கள். 1

8இப்பொழுதோ அவர்களுடைய முகம் கரியைக்காட்டிலும் கறுத்துப்போனது; 1 வீதிகளில் அவர்களை அடையாளம் காணமுடியாது; 1 அவர்களுடைய தோல் அவர்கள் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டு, 1 காய்ந்த மரத்திற்கு ஒப்பானது. 1

9பசியினால் கொல்லப்பட்டவர்களைவிட 1 பட்டயத்தால் கொல்லப்பட்டவர்கள் பாக்கியவான்களாக இருக்கிறார்கள்; 1 அவர்கள், வயலில் விளைச்சல் இல்லாததால் பசியினால் கரைந்து போகிறார்கள். 1

10இரக்கமுள்ள பெண்களின் கைகள் தங்கள் பிள்ளைகளைச் சமைத்தன, 1 என் மகளாகிய மக்களின் அழிவில் அவைகள் அவர்களுக்கு ஆகாரமாயின. 1

11யெகோவா தமது கோபத்தை நிறைவேற்றி, தமது கடுங்கோபத்தை ஊற்றி, 1 சீயோனில் அக்கினியைக் கொளுத்தினார்; 1 அது அதின் அஸ்திபாரங்களை உடைத்துப்போட்டது. 1

12எதிரியும் பகைவனும் எருசலேமின் வாசல்களுக்குள் நுழைவான் என்கிறதைப் 1 பூமியின் ராஜாக்களும் உலகத்தின் சகல குடிமக்களும் நம்பாமல் இருந்தார்கள். 1

13அதின் நடுவில் நீதிமான்களின் இரத்தத்தைச் சிந்தின அதின் தீர்க்கதரிசிகளின் பாவங்களினாலும், 1 அதின் ஆசாரியர்களின் அக்கிரமங்களினாலும் இப்படி வந்தது. 1

14குருடர்களைப்போல வீதிகளில் அலைந்து, 1 ஒருவரும் அவர்களுடைய உடைகளைத் தொடமுடியாதபடி இரத்தத்தால் கறைப்பட்டிருந்தார்கள். 1

15தீட்டுப்பட்டவர்களே விலகுங்கள், தொடாமல் விலகுங்கள், விலகுங்கள், 1 என்று அவர்களை நோக்கிக் கூப்பிட்டார்கள்; 1 உண்மையாகவே பறந்தோடி அலைந்து போனார்கள்; 1 இனி தங்கியிருக்கமாட்டார்கள் என்று அந்நிய மக்களுக்குள்ளே சொல்லப்பட்டது. 1

16யெகோவாவுடைய கோபம் அவர்களைச் சிதறடித்தது, 1 அவர்களை இனி அவர் பார்க்கமாட்டார்; 1 ஆசாரியர்களுடைய முகத்தைப் பார்க்காமலும் முதியோரை மதிக்காமலும்போனார்கள். 1

17இன்னும் எங்களுக்கு உதவி வருமென்று நாங்கள் வீணாக எதிர்பார்த்திருந்ததினாலே எங்களுடைய கண்கள் பூத்துப்போயின; 1 காப்பாற்றமுடியாத மக்களுக்காக எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம். 1

18நாங்கள் எங்கள் வீதிகளில் நடந்து செல்லாதபடி எங்கள் பாதசுவடுகளை வேட்டையாடினார்கள்; 1 எங்கள் முடிவு நெருங்கியது; எங்கள் நாட்கள் நிறைவேறிவிட்டது; 1 எங்கள் முடிவு வந்துவிட்டது. 1

19எங்களைப் பின்தொடர்ந்தவர்கள் ஆகாயத்துக் கழுகுகளைவிட வேகமாயிருந்தார்கள்; 1 மலைகள்மேல் எங்களைப் பின்தொடர்ந்தார்கள்; 1 வனாந்திரத்தில் எங்களுக்காகப் பதுங்கியிருந்தார்கள். 1

20யெகோவாவால் அபிஷேகம்செய்யப்பட்டவனும், எங்கள் உயிர்மூச்சுமாக இருந்தவனும், அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டான்; 1 அவனுடைய நிழலிலே தேசங்களுக்குள்ளே பிழைத்திருப்போம் என்று அவனைக்குறித்துச் சொல்லியிருந்தோமே. 1

21ஊத்ஸ் தேசத்தைச் சேர்ந்த மகளாகிய ஏதோமே, சந்தோஷப்பட்டு மகிழ்ந்திரு; 1 பாத்திரம் உன்னிடத்திற்கும் வரும், அப்பொழுது நீ வெறித்து, ஆடையில்லாமல் கிடப்பாய். 1

22மகளாகிய சீயோனே, உன் அக்கிரமத்திற்கு வரும் தண்டனை முடிந்தது; 1 அவர் இனி உன்னை சிறைப்பட்டுப்போக விடமாட்டார்; 1 மகளாகிய ஏதோமே, உன் அக்கிரமத்தை அவர் விசாரிப்பார்; 1 உன் பாவங்களை வெளிப்படுத்துவார்.

← Lamentations 3Read In The App, Free →Lamentations 5 →

Study Lamentations 4

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345