Isaiah · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Isaiah 12

1அக்காலத்திலே நீ சொல்வது: 1 “யெகோவாவே, நான் உம்மைத் துதிப்பேன்; 1 நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கியது; 1 நீர் என்னைத் தேற்றுகிறீர். 1

2இதோ, தேவனே என் இரட்சிப்பு; 1 நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; 1 கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; 1 அவரே எனக்கு இரட்சிப்புமானவர். 1

3நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து 1 மகிழ்ச்சியுடன் தண்ணீர் மொண்டுகொள்வீர்கள்.

4அக்காலத்திலே நீங்கள் சொல்வது: 1 யெகோவாவை துதியுங்கள்; 1 அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; 1 அவருடைய செய்கைகளை மக்களுக்குள்ளே அறிவியுங்கள்; 1 அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம் செய்யுங்கள். 1

5யெகோவாவைக் கீர்த்தனம்செய்யுங்கள், 1 அவர் மகத்துவமான செயல்களைச் செய்தார்; 1 இது பூமியெங்கும் அறியப்படக்கடவது என்பீர்கள். 1

6சீயோனில் குடியிருக்கிறவளே, 1 நீ சத்தமிட்டுக் கெம்பீரி; 1 இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.”

← Isaiah 11Read In The App, Free →Isaiah 13 →

Study Isaiah 12

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566