Song of Solomon · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Song of Solomon 1

1சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு. மணவாளி 1

2நீர் உமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவீராக + 1:2 அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக: 1 உமது நேசம் திராட்சைரசத்தைவிட இன்பமானது. 1

3உமது நறுமணமுள்ள தைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; 1 உமது நாமம் ஊற்றப்பட்ட நறுமணமுள்ள தைலமாக இருக்கிறது; 1 ஆகையால் இளம்பெண்கள் உம்மை நேசிக்கிறார்கள். 1

4என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடிவருவோம்; 1 ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டு வந்தார்; 1 நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்; 1 திராட்சைரசத்தைவிட உமது நேசத்தை நினைப்போம்; 1 உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள். 1

5எருசலேமின் பெண்களே! கேதாரின் + 1:5 கேதார் அராபியர்களில் ஒரு இஸ்மவேல் கோத்திரம். பார்க்க, ஆதி. 25:13, ஏசாயா. 21:16-17, சங்கீதம், 120:5 ஒரு வாலிப பெண்ணின் கறுப்பு நிறத் தோல் கூடாரங்களைப்போலவும், 1 சாலொமோனின் திரைகளைப்போலவும் நான் கறுப்பாக இருந்தாலும், 1 அழகாக இருக்கிறேன். 1

6நான் கறுப்பாக இருக்கிறேன் என்று பார்க்காதீர்கள்; 1 வெயில் என்மேல் பட்டது; 1 என் சகோதரர்கள் என்மேல் கோபமாயிருந்து, 1 என்னைத் திராட்சைத் தோட்டங்களுக்குக் + 1:6 அதிக பால் உணர்வுள்ள ஒரு வாலிப பெண்ணை குறிக்கலாம் காவற்காரியாக வைத்தார்கள்; 1 என் சொந்தத் திராட்சைத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை. 1

7என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து, 1 அதை மத்தியானத்தில் எங்கே சேர்க்கிறீர்? 1 எனக்குச் சொல்லும்; 1 உமது தோழர்களின் மந்தைகளின் அருகே அலைந்து திரிகிறவளைப்போல + 1:7 முக்காடுயிட்ட பெண்ணைப் போல் நான் இருக்கவேண்டியதென்ன? மணவாளன் 1

8பெண்களில் அழகு மிகுந்தவளே! 1 அதை நீ அறியவில்லையென்றால், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், 1 மேய்ப்பர்களுடைய கூடாரங்களுக்கு அருகில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு. 1

9என் பிரியமே! 1 பார்வோனுடைய இரதங்களில் பூட்டப்பட்டிருக்கிற பெண்குதிரைக் கூட்டத்திற்கு உன்னை ஒப்பிடுகிறேன். 1

10அணிகலன்கள் அணிந்த உன் கன்னங்களும், 1 ஆரங்கள் அணிந்த உன் கழுத்தும் அழகாக இருக்கிறது. மணவாளி 1

11வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களை உனக்குச் செய்விப்போம். 1

12ராஜா தமது பந்தியிலிருக்கும் + 1:12 மஞ்சத்தில் படுத்திருக்கும் வரைவரை 1 என்னுடைய நறுமணமுள்ள தைலம் தன் வாசனையை வீசும். 1

13என் நேசர் எனக்கு என் மார்பகங்களின் நடுவில் தங்கும் வெள்ளைப்போளச் செண்டு. 1

14என் நேசர் எனக்கு எங்கேதி + 1:14 சவக் கடலின் தென்மேற்கு பகுதியில் உள்ள சோலைவனம், இது நீர் ஊற்றுகளால் செழிப்பாக இருந்தது, மனதை குளிர செய்தது. ஊர் திராட்சைத்தோட்டங்களில் 1 முளைக்கும் மருதாணிப் பூங்கொத்து. மணவாளன் 1

15என் பிரியமே! நீ அழகு மிகுந்தவள்; 1 நீ மிக அழகுள்ளவள்; 1 உன் கண்கள் புறாக்கண்கள். மணவாளி

16நீர் ரூபமுள்ளவர்; 1 என் நேசரே! நீர் இன்பமானவர்; 1 நம்முடைய படுக்கை பசுமையானது. 1

17நம்முடைய வீட்டின் உத்திரங்கள் கேதுரு மரம், 1 நம்முடைய வீட்டின் மேல்தளம் தேவதாரு மரம்.

← Ecclesiastes 12Read In The App, Free →Song of Solomon 2 →

Study Song of Solomon 1

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678