Song of Solomon · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Song of Solomon 3

1இரவுநேரங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்; 1 தேடியும் நான் அவரைக் காணவில்லை. 1

2நான் எழுந்து, நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் சுற்றி, 1 என் ஆத்தும நேசரைத் தேடுவேன் என்றேன்; 1 தேடியும் நான் அவரைக் காணவில்லை. 1

3நகரத்திலே உலாவுகிற காவலாளர்கள் என்னைக் கண்டார்கள்: 1 என் ஆத்தும நேசரைக் கண்டீர்களா என்று அவர்களைக் கேட்டேன். 1

4நான் அவர்களைவிட்டுக் கொஞ்சதூரம் சென்றவுடனே, 1 என் ஆத்தும நேசரைக் கண்டேன்; 1 நான் அவரை என் தாயின் வீட்டிலும், 1 என்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடும்வரைக்கும் அவரை உறுதியாகப் பற்றிக்கொண்டேன். 1

5எருசலேமின் இளம்பெண்களே! 1 எனக்குப் பிரியமானவர்களுக்கு மனதிருப்தி உண்டாகும்வரை 1 நீங்கள் அவளை விழிக்கச் செய்யாமலும் எழுப்பாமலும் இருக்கும்படி, 1 வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் 1 உங்களுக்கு ஆணையிடுகிறேன். 1 சாலோமொனின் வருகை மணவாளி 1

6வெள்ளைப்போளத்தினாலும் சாம்பிராணியினாலும் 1 வியாபாரிகளுடைய சகலவித கந்தப்பொடியினாலும் உண்டாகிய வாசனையை வீசி, 1 தூபமேகத்தைப்போல் வனாந்திரத்திலிருந்து வருகிற இவர் யார்? 1

7இதோ, சாலொமோனுடைய படுக்கை; 1 இஸ்ரவேலின் பலசாலிகளில் அறுபது பலசாலிகள் அதைச் சுற்றிலும் நிற்கிறார்கள். 1

8இவர்களெல்லோரும் பட்டயம் பிடித்து, 1 போருக்குப் பயிற்சிபெற்றவர்களாக இருக்கிறார்கள்; 1 இரவுநேர பயத்தினாலே அவனவனுடைய பட்டயம் அவனவன் இடுப்பிலிருக்கிறது. 1

9சாலொமோன் ராஜா தனக்கு லீபனோனின் மரத்தினால் ஒரு இரதத்தைச் செய்வித்தார். 1

10அதின் தூண்களை வெள்ளியினாலும், 1 அதின் தளத்தைப் பொன்னினாலும், 1 அதின் இருக்கையை இரத்தாம்பரத்தினாலும் செய்வித்தார்; 1 அதின் உட்புறத்திலே எருசலேமின் இளம்பெண்களினிமித்தம் 1 நேசம் என்னும் சமுக்காளம் விரிக்கப்பட்டிருந்தது. 1

11சீயோனின் இளம்பெண்களே! நீங்கள் புறப்பட்டுப்போய், 1 ராஜாவாகிய சாலொமோனின் திருமணநாளிலும், 1 மனமகிழ்ச்சியின் நாளிலும், 1 அவருடைய தாயார் அவருக்கு 1 அணிவித்த கிரீடத்துடன் இருக்கிற அவரைப் பாருங்கள்.

← Song of Solomon 2Read In The App, Free →Song of Solomon 4 →

Study Song of Solomon 3

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678