Song of Solomon · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Song of Solomon 2

1நான் சாரோனின் + 2:1 சாரோன் ஒரு இடத்தின் பெயர். இஸ்ரவேல் தேசத்தின் மத்திய தரைக்கடல் (ஏசாயா. 35:2, 65:10). இது சமபூமி. இங்கே கிச்சிலி மரங்கள் அடர்த்தியாக இருந்தன. ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிமலராக இருக்கிறேன். மணவாளன் 1

2முட்களுக்குள்ளே லீலிமலர் எப்படியிருக்கிறதோ, 1 அப்படியே இளம்பெண்களுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள். மணவாளி 1

3காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலி மரம் எப்படியிருக்கிறதோ, 1 அப்படியே இளம் ஆண்களுக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; 1 அதின் நிழலிலே ஆர்வமுடன் உட்காருகிறேன், 1 அதின் பழம் என் வாய்க்கு இனிப்பாக இருக்கிறது. 1

4என்னை விருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார்; 1 என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே. 1

5திராட்சைரசத்தால் என்னைத் தேற்றுங்கள், 1 கிச்சிலிப்பழங்களால் என்னை ஆற்றுங்கள்; 1 நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன். 1

6அவருடைய இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது; 1 அவருடைய வலதுகை என்னை அணைத்துக்கொள்கிறது. மணவாளன் 1

7எருசலேமின் இளம்பெண்களே! 1 எனக்குப் பிரியமானவளுக்கு மனதிருப்தி உண்டாகும்வரை 1 நீங்கள் அவளை விழிக்கச் செய்யாமலும், 1 எழுப்பாமலும் இருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களுக்கு ஆணையிடுகிறேன். 1 நேசரின் வேண்டுகோள் மணவாளி 1

8இது என் நேசருடைய சத்தம்! 1 இதோ, அவர் மலைகளின்மேல் குதித்தும் மேடுகளின்மேல் துள்ளியும் வருகிறார். 1

9என் நேசர் வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாக இருக்கிறார்; 1 இதோ, அவர் எங்கள் மதிலுக்கு வெளியே நின்று 1 சன்னல் வழியாகப் பார்த்து, 1 தட்டியின் வழியாகத் தமது மலர்ந்த முகத்தைக் காண்பிக்கிறார். 1

10என் நேசர் என்னோடே பேசி: மணவாளன் 1 என் பிரியமே! 1 என் அழகு மிகுந்தவளே! எழுந்துவா. 1

11இதோ, மழைக்காலம் சென்றது, 1 மழைபெய்து ஓய்ந்தது. 1

12பூமியிலே மலர்கள் காணப்படுகிறது; 1 குருவிகள் பாடும் காலம் வந்தது, 1 காட்டுப்புறாவின் சத்தம் நமது தேசத்தில் கேட்கப்படுகிறது. 1

13அத்திமரம் காய்காய்த்தது; 1 திராட்சைக்கொடிகள் பூப்பூத்து 1 வாசனையும் நறுமணத்தையும் கொடுக்கிறது; 1 என் பிரியமே! என் அழகு மிகுந்தவளே! 1 நீ எழுந்து வா. 1

14கன்மலையின் வெடிப்புகளிலும், 1 மலையுச்சிகளின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே! 1 உன் முகத்தோற்றத்தை எனக்குக் காட்டு, 1 உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; 1 உன் சத்தம் இன்பமும், 1 உன் முகத்தோற்றம் அழகுமாக இருக்கிறது என்றார். 1

15திராட்சைத் தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் 1 சிறுநரிகளையும் + 2:15 இந்த வாலிப பெண்ணை தங்கள் காதலால் இழுக்க பார்க்கும் வாலிப ஆண்களை குறிக்கலாம். நமக்குப் பிடியுங்கள்; 1 நம்முடைய திராட்சைத்தோட்டங்கள் 1 பூவும் பிஞ்சுமாக இருக்கிறதே. மணவாளி 1

16என் நேசர் என்னுடையவர், 1 நான் அவருடையவள். 1 அவர் லீலிமலர்களுக்குள்ளே மேய்கிறார். 1

17என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி, 1 நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், 1 நீர் திரும்பி, குன்றும் பிளப்புமான கன்மலைகளில் 1 குதித்துவரும் கலைமானுக்கும் 1 மரைகளின் குட்டிக்கும் சமானமாக இரும்.

← Song of Solomon 1Read In The App, Free →Song of Solomon 3 →

Study Song of Solomon 2

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678