Song of Solomon · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Song of Solomon 4

1நீ அழகு மிகுந்தவள், என் பிரியமே! நீ அழகு மிகுந்தவள்; 1 உன் முக்காட்டின் நடுவே உன் கண்கள் புறாக்கண்களைப்போல் இருக்கிறது; 1 உன் கூந்தல் கீலேயாத் மலையில் இலைகளை மேயும் வெள்ளாட்டு மந்தையைப்போல் இருக்கிறது. 1

2உன்னுடைய பற்கள், 1 ரோமம் கத்தரிக்கப்பட்டபின் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், 1 ஒன்றாகிலும் மலடாக இல்லாமல் அனைத்தும் இரட்டைக்குட்டி ஈன்றவைகளுமான 1 ஆட்டுமந்தையைப்போல் இருக்கிறது. 1

3உன் உதடுகள் சிவப்பு நூலுக்குச் சமானமும், 1 உன் வாய் இன்பமுமாக இருக்கிறது; 1 உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதுளம்பழம்போல் இருக்கிறது. 1

4உன்னுடைய கழுத்து, 1 பராக்கிரமசாலிகளின் ஆயிரம் கேடகங்கள் தூக்கியிருக்கிற ஆயுதசாலையாக்கப்பட்ட 1 தாவீதின் கோபுரம்போல் இருக்கிறது. 1

5உன் இரண்டு மார்பகங்களும் 1 லீலிமலர்களுக்கு இடையில் மேயும் 1 வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானம். 1

6பகல் குளிர்ச்சியாகி நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், 1 நான் வெள்ளைப்போளமலைக்கும் சாம்பிராணிமலைக்கும் போயிருப்பேன். 1

7என் பிரியமே! நீ பூரண அழகுமிகுந்தவள்; 1 உன்னில் குறையொன்றும் இல்லை. 1

8லீபனோனிலிருந்து என்னோடே வா, 1 என் மணவாளியே! லீபனோனிலிருந்து என்னோடே வா. 1 அமனாவின் உச்சியிலிருந்தும், 1 சேனீர் எர்மோனின் உச்சியிலிருந்தும், 1 சிங்கங்களின் குகைகளிலிருந்தும், 1 சிறுத்தைகளின் மலைகளிலிருந்தும் கீழே + 4:8 கீழே பார் இறங்கி வா. 1

9என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய்; 1 என் சகோதரியே! என் மணவாளியே! 1 உன் கண்களில் ஒன்றிலும் 1 உன் கழுத்திலுள்ள ஒரு நகையிலும் 1 என் இருதயத்தைக் கவர்ந்துகொண்டாய். 1

10உன் நேசம் எவ்வளவு இன்பமாக இருக்கிறது; 1 என் சகோதரியே! என் மணவாளியே! 1 திராட்சைரசத்தைவிட 1 உன் நேசம் எவ்வளவு இனிமையாக இருக்கிறது! 1 சகல கந்தவர்க்கங்களைவிட 1 உன் நறுமண தைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது! 1

11என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது, 1 உன் நாவின்கீழ் தேனும் பாலும் இருக்கிறது, 1 உன் உடைகளின் வாசனை லீபனோனின் வாசனைக்கு ஒப்பாக இருக்கிறது. 1

12என் சகோதரியே! என் மணவாளியே! 1 நீ அடைக்கப்பட்ட தோட்டமும், 1 மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், 1 பாதுகாக்கப்பட்ட கிணறுமாக இருக்கிறாய். 1

13உன் தோட்டம் மாதுளம்செடிகளும், 1 அருமையான பழமரங்களும், 1 மருதாணிச் செடிகளும், நளதச்செடிகளும், 1

14நளதமும், குங்குமமும், வசம்பும், லவங்கமும், 1 சகலவித தூபவர்க்க மரங்களும், வெள்ளைப்போளச்செடிகளும், 1 சந்தன மரங்களும், சகலவித கந்தவர்க்கச் செடிகளுமுள்ள சிங்கார வனமாக இருக்கிறது. 1

15தோட்டங்களுக்கு நீரூற்றும், ஜீவதண்ணீரின் கிணறும், 1 லீபனோனிலிருந்து ஓடிவரும் வாய்க்கால்களும் உண்டாயிருக்கிறது. மணவாளி 1

16வாடைக்காற்றே! எழும்பு; 1 தென்றலே! வா; கந்தப்பிசின்கள் வடிய என் தோட்டத்தில் வீசு; 1 என் நேசர் தம்முடைய தோட்டத்திற்கு வந்து, 1 தமது அருமையான பழங்களைச் சாப்பிடுவாராக.

← Song of Solomon 3Read In The App, Free →Song of Solomon 5 →

Study Song of Solomon 4

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678