Song of Solomon 7
1இளவரசியே! காலணிகள் அணிந்த உன் பாதங்கள் 1 மிகவும் அழகாக இருக்கிறது; 1 உன் இடுப்பின் வடிவு திறமைமிக்க 1 தொழிற்காரர்களின் வேலையாகிய அணிகலன்போல் இருக்கிறது. 1
2உன் தொப்புள் திராட்சைரசம் நிறைந்த வட்டவடிவக் கிண்ணம்போல் இருக்கிறது; 1 உன் வயிறு லீலிமலர்கள் சூழ்ந்த கோதுமைக் குவியல்போல் இருக்கிறது. 1
3உன் இரண்டு மார்பகங்களும் 1 வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானமாக இருக்கிறது. 1
4உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும், 1 உன் கண்கள் எஸ்போனிலே பத்ரபீம் 1 வாசலின் அருகிலிருக்கும் குளங்களைப்போலவும், 1 உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கும் 1 லீபனோனின் கோபுரத்தைப்போலவும் இருக்கிறது. 1
5உன் தலை கர்மேல் மலையைப்போல் இருக்கிறது; 1 உன் தலைமுடி இரத்தாம்பரமயமாக இருக்கிறது; 1 ராஜா உன் கூந்தலின் அழகில் மயங்கி நிற்கிறார். 1
6மனமகிழ்ச்சியை உண்டாக்கும் என் பிரியமே! 1 நீ எவ்வளவு அழகுமிகுந்தவள், 1 நீ எவ்வளவு இன்பமுள்ளவள். 1
7உன் உயரம் பனைமரத்தைப்போலவும், 1 உன் மார்பகங்கள் திராட்சைக்குலைகள்போலவும் இருக்கிறது. 1
8நான் பனைமரத்தில் ஏறி, 1 அதின் மடல்களைப் பிடிப்பேன் என்றேன்; 1 இப்பொழுதும் உன் மார்பகங்கள் திராட்சைக்குலைகள்போலவும், 1 உன் மூக்கின் சுவாசத்தின் வாசனை கிச்சிலிப்பழங்கள்போலவும் இருக்கிறது. 1
913 உன் முத்தங்கள், என் நேசர் குடிக்கும்போது மெதுவாக இறங்குகிறதும், 1 உறங்குகிறவர்களின் உதடுகளைப் பேசச்செய்கிறதுமான, 1 நல்ல திராட்சைரசத்தைப்போல் இருக்கிறது. மணவாளி 1
10நான் என் நேசருடையவள், 1 அவருடைய பிரியம் என்மேல் இருக்கிறது. 1
11வாரும் என் நேசரே! வயல்வெளிக்குப் போய், 1 கிராமங்களில் தங்குவோம். 1
12அதிகாலையிலே திராட்சைத்தோட்டங்களுக்குப் போவோம்; 1 திராட்சைக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும், 1 மாதுளம்செடிகள் பூ பூத்ததோ என்றும் பார்ப்போம்; 1 அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன். 1
13தூதாயீம் பழம் + 7:13 மாதுளம்செடிகள், இனிமையும் வாசனையுமான ஒரு செடி, இதின் பழம் பால் உணர்வை, தூண்டி மலட்டுத்தன்மை நீக்க கூடியது என்று கருதப்படுகிறது. ஆதி 30: 14-16. வாசனை வீசும்; 1 நமது வாசல்களின் அருகில் புதியவைகளும் பழையவைகளுமான சகலவித அருமையான பழங்களும் உண்டு; 1 என் நேசரே! அவைகளை உமக்கு வைத்திருக்கிறேன்.