Song of Solomon 8
1ஆ, நீர் என் தாயின் பால்குடித்த என் சகோதரனைப்போல் இருந்தீரானால், 1 நான் உம்மை வெளியிலே சந்தித்து முத்தமிடுவேன்; 1 என்னை நிந்திக்கவுமாட்டார்கள். 1
2நான் உம்மைக் கூட்டிக்கொண்டு, 1 என் தாயின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோவேன்; 1 நீர் எனக்குப் போதிப்பீர், கந்தவர்க்கமிட்ட திராட்சைரசத்தையும், 1 என் மாதுளம்பழரசத்தையும் உமக்குக் குடிக்கக்கொடுப்பேன். 1
3அவருடைய இடதுகை என் தலையின்கீழ் இருக்கும், 1 அவருடைய வலதுகை என்னை அணைக்கும். 1
4எருசலேமின் இளம்பெண்களே! 1 எனக்குப் பிரியமானவளுக்கு மனதிருப்தி உண்டாகும்வரை 1 நீங்கள் அவளை விழிக்கச் செய்யாமலும் எழுப்பாமலும் இருக்க 1 உங்களுக்கு ஆணையிடுகிறேன். 1 அன்பு புதுப்பிக்கப்படுதல் மணவாளியின் தோழிகள் 1
5தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு 1 வனாந்திரத்திலிருந்து வருகிற இவள் யார்? மணவாளி 1 கிச்சிலிமரத்தின்கீழ் உம்மை எழுப்பினேன்; 1 அங்கே உமது தாய் உம்மைப் பெற்றாள்; 1 அங்கே உம்மைப் பெற்றவள் வேதனைப்பட்டு உம்மைப் பெற்றாள். 1
6நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், 1 உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; 1 நேசம் மரணத்தைப்போல் வலிமையானது; 1 நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடியதாக இருக்கிறது; 1 அதின் தழல் அக்கினித்தழலும் அதின் சுடர் கடும் சுடரொளியுமாக இருக்கிறது. 1
7திரளான தண்ணீர்கள் நேசத்தை அணைத்துவிட முடியாது, 1 வெள்ளங்களும் அதைத் தணிக்கமுடியாது; 1 ஒருவன் தன் வீட்டிலுள்ள சொத்துக்களையெல்லாம் நேசத்திற்காகக் கொடுத்தாலும், 1 அது முற்றிலும் அசட்டைசெய்யப்படும் + 8:7 அவன் முற்றிலும் அசட்டைசெய்யப்படும். மணவாளியின் சகோதரன் 1
8நமக்கு ஒரு சிறிய சகோதரி உண்டு, 1 அவளுக்கு மார்பகங்கள் இல்லை; 1 நம்முடைய சகோதரியைக் கேட்கும் நாளில் அவளுக்காக நாம் என்ன செய்வோம்? 1
9அவள் ஒரு மதிலானால், 1 அதின்மேல் வெள்ளிக்கோட்டையைக் கட்டுவோம்; 1 அவள் கதவானால், கேதுருப்பலகைகளை அதற்கு இணைப்போம். மணவாளி 1
10நான் மதில்தான், 1 என் மார்பகங்கள் கோபுரங்கள்; 1 அவருடைய கண்களில் இரக்கம் பெறலானேன். மணவாளன் 1
11பாகால் ஆமோனிலே சாலொமோனுக்கு ஒரு திராட்சைத்தோட்டம் உண்டாயிருந்தது, 1 அந்தத் தோட்டத்தைக் காவலாளிகள் வசத்திலே அதின் பலனுக்காக, 1 ஒவ்வொருவன் ஆயிரம் வெள்ளிக்காசுகளைக் + 8:11 கிராம வேலைக்காரனின் ஒரு நாள் கூலி கொண்டுவரும்படி விட்டார். 1
12என் திராட்சைத்தோட்டம் எனக்கு முன்பாக இருக்கிறது; 1 சாலொமோனே! உமக்கு அந்த ஆயிரமும், 1 அதின் பழத்தைக் காக்கிறவர்களுக்கு இருநூறும் சேரும். 1
13தோட்டங்களில் குடியிருக்கிறவளே! 1 தோழர்கள் உன் சத்தத்தைக் கேட்கிறார்கள்; 1 நானும் அதைக் கேட்கட்டும். மணவாளி 1
14என் நேசரே! விரைவாக வாரும், 1 கந்தவர்க்கங்களின் மலைகள்மேல் உள்ள 1 வெளிமானுக்கும் மான் குட்டிக்கும் சமானமாக இரும்.