Song of Solomon · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Song of Solomon 6

1உன் நேசர் எங்கே போனார்? 1 பெண்களில் அழகுமிகுந்தவளே! 1 உன் நேசர் எவ்விடம் போய்விட்டார்? 1 உன்னோடேகூட நாங்களும் அவரைத் தேடுவோம். மணவாளி

2தோட்டங்களில் மேயவும், லீலிமலர்களைப் பறிக்கவும், 1 என் நேசர் தமது தோட்டத்திற்கும் கந்தவர்க்கப் பாத்திகளுக்கும் போனார். 1

3நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்; 1 அவர் லீலிமலர்களுக்குள்ளே மேய்கிறார். 1 சூலமித்தியாளின் அழகு மணவாளன் 1

4என் பிரியமே! நீ திர்சாவைப்போல் அழகும், 1 எருசலேமைப்போல் வடிவமும், 1 கொடிகள் பறக்கும் படையைப்போல் பயங்கரமானவள். 1

5உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு, 1 அவைகள் என்னை வென்றது; 1 உன் கருமையான கூந்தல் 1 கீலேயாத் மலையிலே இலைகள்மேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது. 1

6உன் பற்கள் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், 1 ஒன்றாகிலும் மலடாக இல்லாமல் 1 இரட்டைக்குட்டிகளை ஈன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போல் இருக்கிறது. 1

7உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதுளம்பழம்போல் இருக்கிறது. 1

8ராணிகள் அறுபதுபேரும், 1 மறுமனையாட்டிகள் எண்பதுபேருமுண்டு; 1 கன்னியர்களுக்குத் தொகையில்லை. 1

9என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே; 1 அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை; 1 அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள்; 1 இளம்பெண்கள் அவளைக் கண்டு, அவளை வாழ்த்தினார்கள்; 1 ராணிகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள். 1

10சந்திரனைப்போல் அழகும், சூரியனைப்போல் பிரகாசமும், 1 கொடிகள் பறக்கும் படையைப்போல் பயங்கரமானவளாக, 1 சூரிய உதயம்போல் உதிக்கிற இவள் யார்? 1

11பள்ளத்தாக்கிலே பழுத்த பழங்களைப் பார்க்கவும், 1 திராட்சைச்செடிகள் துளிர்விட்டு, மாதுளம்செடிகள் பூத்ததா என்று அறியவும், 1 வாதுமைத் தோட்டத்திற்குப் போனேன். 1

12நினைக்காததற்குமுன்னே 1 என் ஆத்துமா என்னை அம்மினதாபின் இரதங்களுக்கு ஒப்பாக்கினது. மணவாளியின் தோழிகள் 1

13திரும்பிவா, திரும்பிவா, 1 சூலமித்தியே! நாங்கள் உன்னைப் பார்க்கும்படிக்கு, 1 திரும்பிவா, திரும்பிவா. மணவாளி 1 சூலமித்தியில் நீங்கள் என்னத்தைப் பார்க்கிறீர்கள்? 1 அவள் இரண்டு படையின் கூட்டத்திற்குச் சமானமானவள்.

← Song of Solomon 5Read In The App, Free →Song of Solomon 7 →

Study Song of Solomon 6

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678