Proverbs 10
1சாலொமோனின் நீதிமொழிகள்: 1 ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; 1 மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாக இருக்கிறான். 1
2அநியாயத்தின் பொருட்கள் ஒன்றுக்கும் உதவாது; 1 நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும். 1
3யெகோவா நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடமாட்டார்; 1 துன்மார்க்கர்களுடைய பொருளையோ அகற்றிவிடுகிறார். 1
4சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; 1 சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும். 1
5கோடைக்காலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; 1 அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ அவமானத்தை உண்டாக்குகிற மகன். 1
6நீதிமானுடைய தலையின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; 1 கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். 1
7நீதிமானுடைய பெயர் புகழ்பெற்று விளங்கும்; 1 துன்மார்க்கனுடைய பெயரோ அழிந்துபோகும். 1
8இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்; 1 அலப்புகிற மூடனோ விழுவான். 1
9உத்தமமாக நடக்கிறவன் பத்திரமாக நடக்கிறான்; 1 கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான். 1
10கண்சாடை காட்டுகிறவன் தவறு செய்கிறான்; 1 அலப்புகிற மூடன் விழுவான். 1
11நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; 1 கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். 1
12பகை விரோதங்களை எழுப்பும்; 1 அன்போ எல்லாப் பாவங்களையும் மூடும். 1
13புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்; 1 மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு. 1
14ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்; 1 மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது. 1
15செல்வந்தனுடைய பொருள் அவனுக்குப் பாதுகாப்பான பட்டணம்; 1 ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கச்செய்யும். 1
16நீதிமானுடைய உழைப்பு வாழ்வையும், 1 துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும். 1
17புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; 1 திருத்துதலை வெறுக்கிறவனோ மோசம்போகிறான். 1
18பகையை மறைக்கிறவன் பொய் உதடன்; 1 புறங்கூறுகிறவன் மதிகேடன். 1
19சொற்களின் மிகுதியால் பாவமில்லாமற்போகாது; 1 தன்னுடைய உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான். 1
20நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; 1 துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது. 1
21நீதிமானுடைய உதடுகள் அநேகருக்கு உணவளிக்கும்; 1 மூடரோ மதியீனத்தினால் சாவார்கள். 1
22யெகோவாவின் ஆசீர்வாதமே செல்வத்தைத் தரும்; 1 அதனோடு அவர் வேதனையைக் கூட்டமாட்டார். 1
23தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு; 1 புத்திமானுக்கோ ஞானம் உண்டு. 1
24துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து சம்பவிக்கும்; 1 நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும். 1
25சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்; 1 நீதிமானோ நிரந்தர அஸ்திபாரமுள்ளவன்; 1
26பற்களுக்கு புளிப்பும், கண்களுக்குப் புகையும் எப்படி இருக்கிறதோ, 1 அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான். 1
27யெகோவாவுக்குப் பயப்படுதல் ஆயுள்நாட்களைப் பெருகச்செய்யும்; 1 துன்மார்க்கர்களுடைய வருடங்களோ குறுகிப்போகும். 1
28நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; 1 துன்மார்க்கருடைய வாழ்க்கையோ அழியும். 1
29யெகோவாவின் வழி உத்தமர்களுக்குப் பாதுகாப்பு, 1 அக்கிரமக்காரர்களுக்கோ கலக்கம். 1
30நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; 1 துன்மார்க்கர்கள் பூமியில் வசிப்பதில்லை. 1
31நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; 1 மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோகும். 1
32நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப்பேச அறியும்; 1 துன்மார்க்கர்களுடைய வாயோ மாறுபாடுள்ளது.