Proverbs · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Proverbs 20

1திராட்சைரசம் பரியாசம்செய்யும்; மதுபானம் கூச்சலிடும்; 1 அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல. 1

2ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமம்; 1 அவனைக் கோபப்படுத்துகிறவன் தன்னுடைய உயிருக்கே துரோகம்செய்கிறான். 1

3வழக்குக்கு விலகுவது மனிதனுக்கு மேன்மை; 1 மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான். 1

4சோம்பேறி குளிருகிறது என்று உழமாட்டான்; 1 அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றும் கிடைக்காது. 1

5மனிதனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போல இருக்கிறது; 1 புத்திமானோ அதை மொண்டெடுப்பான். 1

6மனிதர்கள் பெரும்பாலும் தங்களுடைய தாராள குணத்தை பிரபலப்படுத்துவார்கள்; 1 உண்மையான மனிதனைக் கண்டுபிடிப்பவன் யார்? 1

7நீதிமான் தன்னுடைய உத்தமத்திலே நடக்கிறான்; 1 அவனுக்குப்பிறகு அவனுடைய பிள்ளைகளும் பாக்கியவான்களாக இருப்பார்கள். 1

8நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா 1 தன்னுடைய கண்களினால் எல்லாத் தீங்கையும் சிதறச்செய்கிறான். 1

9என்னுடைய இருதயத்தைச் சுத்தமாக்கினேன், 1 என்னுடைய பாவம் நீங்க சுத்தமானேன் என்று சொல்லக்கூடியவன் யார்? 1

10வெவ்வேறான நிறைகல்லும், 1 வெவ்வேறான மரக்காலும் ஆகிய இவ்விரண்டும் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள். 1

11பிள்ளையானாலும், அதின் செயல்கள் சுத்தமோ செம்மையோ என்பது, 1 அதின் செயலினால் வெளிப்படும். 1

12கேட்கிற காதும், காண்கிற கண்ணும் 1 ஆகிய இந்த இரண்டையும் யெகோவா உண்டாக்கினார். 1

13தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; 1 கண்விழித்திரு, அப்பொழுது உணவினால் திருப்தியாவாய். 1

14வாங்குகிறவன்: நல்லதல்ல, நல்லதல்ல என்பான்; 1 போய்விட்டபின்போ மெச்சிக்கொள்வான். 1

15பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு; 1 அறிவுள்ள உதடுகளோ விலை உயர்ந்த இரத்தினம். 1

16அந்நியனுக்காகப் பிணைப்பட்டவனுடைய ஆடையை எடுத்துக்கொள்; 1 அந்நிய பெண்ணுக்காக அவனுடைய கையில் ஈடுவாங்கிக்கொள். 1

17வஞ்சனையினால் வந்த உணவு மனிதனுக்கு இன்பமாக இருக்கும்; 1 பின்போ அவனுடைய வாய் உணவுப்பருக்கைக் கற்களால் நிரப்பப்படும். 1

18ஆலோசனையினால் எண்ணங்கள் உறுதிப்படும்; 1 நல்யோசனை செய்து யுத்தம்செய். 1

19தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்; 1 ஆதலால் தன்னுடைய உதடுகளினால் அதிகம் பேசுகிறவனோடு சேராதே. 1

20தன்னுடைய தகப்பனையும் தன்னுடைய தாயையும் தூஷிக்கிறவனுடைய 1 தீபம் காரிருளில் அணைந்துபோகும். 1

21ஆரம்பத்திலே விரைவாகக் கிடைத்த சுதந்தரம் முடிவிலே ஆசீர்வாதம் பெறாது. 1

22தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே; 1 யெகோவாவுக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார். 1

23வெவ்வேறான நிறைகற்கள் 1 யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; 1 கள்ளத்தராசு நல்லதல்ல. 1

24யெகோவாவாலே மனிதர்களுடைய நடைகள் வாய்க்கும்; 1 ஆகையால் மனிதன் தன்னுடைய வழியை அறிந்துகொள்வது எப்படி? 1

25பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், 1 மனிதனுக்குக் கண்ணியாக இருக்கும். 1

26ஞானமுள்ள ராஜா துன்மார்க்கர்களை சிதறடித்து, 1 அவர்கள்மேல் உருளையை உருட்டுவான். 1

27மனிதனுடைய ஆவி யெகோவா தந்த தீபமாக இருக்கிறது; 1 அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும். 1

28தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்; 1 தயையினாலே தன்னுடைய சிங்காசனத்தை நிற்கச்செய்வான். 1

29வாலிபர்களின் அலங்காரம் அவர்களுடைய பலம்; 1 முதிர்வயதானவர்களின் மகிமை அவர்கள் நரை. 1

30காயத்தின் தழும்புகளும், 1 உள்ளத்தில் உறைக்கும் அடிகளும், 1 பொல்லாதவனை அழுக்கு நீங்கத் துடைக்கும்.

← Proverbs 19Read In The App, Free →Proverbs 21 →

Study Proverbs 20

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031