Proverbs 17
1சண்டையோடுகூடிய வீடுநிறைந்த சுவையான உணவைவிட, 1 சமாதானத்தோடு சாப்பிடும் வெறும் அப்பமே நலம். 1
2புத்தியுள்ள வேலைக்காரன் அவமானத்தை உண்டாக்குகிற மகனை ஆண்டு, 1 சகோதரர்களுடைய சுதந்தரத்தில் பங்கை அடைவான். 1
3வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; 1 இருதயங்களைச் சோதிக்கிறவரோ யெகோவா. 1
4தீயவன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; 1 பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான். 1
5ஏழையைப் புறக்கணிக்கிறவன் அவனை உண்டாக்கினவரை சபிக்கிறான்; 1 ஆபத்தைக் குறித்துக் மகிழ்கிறவன் தண்டனைக்குத் தப்பமாட்டான். 1
6பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோர்களுக்குக் கிரீடம்; 1 பிள்ளைகளின் மேன்மை அவர்களுடைய தகப்பன்மார்களே. 1
7மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது; 1 பொய் பேசும் உதடு பிரபுவுக்கு கொஞ்சம்கூட தகாது. 1
8லஞ்சம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம்போல இருக்கும்; 1 அது பார்க்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும். 1
9குற்றத்தை மூடுகிறவன் நட்பை நாடுகிறான்; 1 கேட்டதைச் சொல்லுகிறவன் உயிர் நண்பனையும் பிரித்துவிடுகிறான். 1
10மூடனை நூறடி அடிப்பதைவிட, 1 புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாக உறைக்கும். 1
11தீயவன் கலகத்தையே தேடுகிறான்; 1 கொடிய தூதன் அவனுக்கு விரோதமாக அனுப்பப்படுவான். 1
12தன்னுடைய மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைவிட, 1 குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது மேல். 1
13நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ, 1 அவனுடைய வீட்டைவிட்டுத் தீமை நீங்காது. 1
14சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோல இருக்கும்; 1 ஆதலால் விவாதம் எழும்புமுன்பு அதை விட்டுவிடு. 1
15துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், 1 நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இந்த இருவரும் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள். 1
16ஞானத்தை வாங்கும்படி மூடன் கையிலே பணம் என்னத்திற்கு? 1 அதின்மேல் அவனுக்கு மனமில்லையே. 1
17நண்பன் எல்லாக் காலத்திலும் நேசிப்பான்; 1 இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான். 1
18புத்தியீனன் தன்னுடைய நண்பனுக்காக உறுதியளித்துப் பிணைப்படுகிறான். 1
19விவாதப்பிரியன் பாவப்பிரியன்; 1 தன்னுடைய வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான். 1
20மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; 1 பொய் நாவுள்ளவன் தீமையில் விழுவான். 1
21மதிகெட்ட மகனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலம் உண்டாக அவனைப் பெறுகிறான்; 1 மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை. 1
22மனமகிழ்ச்சி நல்ல மருந்து; 1 முறிந்த ஆவியோ எலும்புகளை உலரச்செய்யும். 1
23துன்மார்க்கன், நீதியின் வழியைப்புரட்ட மடியிலுள்ள லஞ்சத்தை வாங்குகிறான். 1
24ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்; 1 மூடனுடைய கண்களோ பூமியின் கடைசி எல்லைகள்வரை செல்லும். 1
25மதிகெட்ட மகன் தன்னுடைய தகப்பனுக்குச் சலிப்பும், 1 தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன். 1
26நீதிமானைத் தண்டிப்பதும், நியாயம்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல. 1
27அறிவாளி தன்னுடைய வார்த்தைகளை அடக்குகிறான்; 1 விவேகி குளிர்ந்த மனமுள்ளவன். 1
28பேசாமலிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; 1 தன்னுடைய உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.