Proverbs · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Proverbs 13

1ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; 1 பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலை கேட்கமாட்டான். 1

2மனிதன் தன்னுடைய வாயின் பலனால் நன்மையைச் சாப்பிடுவான்; 1 துரோகிகளின் ஆத்துமாவோ கொடுமையை சாப்பிடும். 1

3தன்னுடைய வாயைக் காக்கிறவன் தன்னுடைய உயிரைக் காக்கிறான்; 1 தன்னுடைய உதடுகளை விரிவாகத் திறக்கிறவனோ கலக்கமடைவான். 1

4சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெற்றுக்கொள்ளாது; 1 ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ செழிக்கும்; 1

5நீதிமான் பொய்ப்பேச்சை வெறுக்கிறான்; 1 துன்மார்க்கனோ வெட்கமும் அவமானமும் உண்டாக்குகிறான். 1

6நீதி உத்தமவழியில் உள்ளவனைத் தற்காக்கும்; 1 துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும். 1

7ஒன்றுமில்லாமல் இருக்கத் தன்னைச் செல்வந்தனாக நினைக்கிறவனும் உண்டு; 1 மிகுந்த செல்வம் இருக்கத் தன்னைத் தரித்திரனாக நினைக்கிறவனும் உண்டு. 1

8மனிதனுடைய செல்வம் அவனுடைய உயிரை மீட்கும்; 1 தரித்திரனோ மிரட்டுதலைக் கேட்காமல் இருக்கிறான். 1

9நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷப்படுத்தும்; 1 துன்மார்க்கர்களின் தீபமோ அணைந்துபோகும். 1

10அகந்தையினால் மட்டும் விவாதம் பிறக்கும்; 1 ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு. 1

11வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோகும்; 1 கஷ்டப்பட்டு சேர்க்கிறவனோ விருத்தியடைவான். 1

12நெடுங்காலமாகக் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கச்செய்யும்; 1 விரும்பினது வரும்போதோ ஜீவமரம்போல இருக்கும். 1

13திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்; 1 கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான். 1

14ஞானவான்களுடைய போதகம் வாழ்வுதரும் ஊற்று; 1 அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம். 1

15நற்புத்தி தயவை உண்டாக்கும்; 1 துரோகிகளுடைய வழியோ கரடுமுரடானது. 1

16விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான்; 1 மூடனோ தன்னுடைய மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான். 1

17துரோகமுள்ள தூதன் தீமையிலே விழுவான்; 1 உண்மையுள்ள தூதுவர்களோ நல்மருந்து. 1

18புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் அவமானத்தையும் அடைவான்; 1 கடிந்து கொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ மேன்மையடைவான். 1

19வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது; 1 தீமையைவிட்டு விலகுவது மூடர்களுக்கு அருவருப்பு. 1

20ஞானிகளோடு வாழ்கிறவன் ஞானமடைவான்; 1 மூடர்களுக்குத் தோழனோ நாசமடைவான். 1

21பாவிகளைத் தீவினை தொடரும்; 1 நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும். 1

22நல்லவன் தன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு சொத்தை வைத்துப்போகிறான்; 1 பாவியின் செல்வமோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும். 1

23ஏழைகளின் வயல் மிகுதியான உணவை விளைவிக்கும்; 1 நியாயம் கிடைக்காமல் கெட்டுப்போகிறவர்களும் உண்டு. 1

24பிரம்பைப் பயன்படுத்தாதவன் தன்னுடைய மகனைப் பகைக்கிறான்; 1 அவன்மேல் அன்பாக இருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான். 1

25நீதிமான் தனக்குத் திருப்தியாகச் சாப்பிடுகிறான்; 1 துன்மார்க்கர்களுடைய வயிறோ பசியாக இருக்கும்.

← Proverbs 12Read In The App, Free →Proverbs 14 →

Study Proverbs 13

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031