Proverbs · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Proverbs 7

1என் மகனே, நீ என்னுடைய வார்த்தைகளைக்காத்து, 1 என்னுடைய கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து. 1

2என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய போதகத்தையும் உன்னுடைய கண்மணியைப்போல் காத்துக்கொள், 1 அப்பொழுது பிழைப்பாய். 1

3அவைகளை உன்னுடைய விரல்களில் கட்டி, 1 அவைகளை உன்னுடைய இருதயப்பலகையில் எழுதிக்கொள். 1

4ஆசைவார்த்தைகளைப் பேசும் அந்நியப் பெண்ணாகிய ஒழுங்கீனமானவளுக்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக, 1

5ஞானத்தை நோக்கி, நீ என்னுடைய சகோதரி என்றும், 1 புத்தியைப்பார்த்து, நீ என்னுடைய இனத்தைச் சேர்ந்தவள் என்றும் சொல்லு. 1

6நான் என்னுடைய வீட்டின் ஜன்னல் அருகே நின்று, 1 அதின் வழியாகப் பார்த்தபோது, 1

7பேதையர்களாகிய வாலிபர்களுக்குள்ளே 1 ஒரு புத்தியற்ற வாலிபனைக்கண்டு அவனை கவனித்தேன். 1

8அவன் மாலைமயங்கும் சூரியன் மறையும் நேரத்திலும், 1 இரவின் இருளிலும். 1

9அவள் இருக்கும் தெருவிற்கு அடுத்த தெருவில் சென்று, 1 அவளுடைய வீட்டுவழியாக நடந்துபோனான். 1

10அப்பொழுது இதோ, விபசாரியின் ஆடை ஆபரணம் தரித்த 1 தந்திரமனமுள்ள ஒரு பெண் அவனுக்கு எதிர்ப்பட்டாள். 1

11அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்; 1 அவளுடைய கால்கள் வீட்டிலே தங்குகிறதில்லை. 1

12சிலவேளை வெளியிலே இருப்பாள், சிலவேளை வீதியில் இருப்பாள், 1 சந்துகள்தோறும் மறைந்திருப்பாள். 1

13அவள் அவனைப் பிடித்து முத்தமிட்டு, 1 முகம் நாணாமல் அவனைப் பார்த்து: 1

14சமாதான பலிகள் என்மேல் சுமந்திருந்தது, 1 இன்றைக்குத்தான் என்னுடைய பொருத்தனைகளை நிறைவேற்றினேன். 1

15ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு, 1 உன் முகத்தை ஆவலோடு தேடினேன்; 1 இப்பொழுது உன்னைக் கண்டுபிடித்தேன். 1

16என்னுடைய மெத்தையை இரத்தினக் கம்பளங்களாலும், 1 எகிப்து தேசத்தின் விசித்திரமான மெல்லிய துணிகளாலும் அலங்கரித்தேன். 1

17என்னுடைய படுக்கையை வெள்ளைப்போளத்தாலும் 1 சந்தனத்தாலும் இலவங்கப்பட்டையாலும் வாசனையாக்கினேன். 1

18வா, விடியற்காலைவரைக்கும் சந்தோஷமாக இருப்போம், 1 இன்பங்களினால் பூரிப்போம். 1

19கணவன் வீட்டிலே இல்லை, தூரப்பயணம் போனான். 1

20பணப்பையைத் தன்னுடைய கையிலே கொண்டுபோனான், 1 குறிக்கப்பட்ட நாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி, 1

21தன்னுடைய மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, 1 தன்னுடைய உதடுகளின் இனிமையான பேச்சால் அவனை இணங்கச்செய்தாள். 1

22உடனே அவன் அவள் பின்னே சென்றான்; 1 ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலவும், 1 ஒரு மூடன் விலங்கிடப்பட்டு தண்டனைக்குப் போவதுபோலவும், 1

23ஒரு குருவி தன்னுடைய உயிரை வாங்கும் கண்ணியை அறியாமல் 1 அதில் விழுவதற்கு விரைந்து போகிறதுபோலவும், 1 அவளுக்குப் பின்னே போனான்; 1 அம்பு அவனுடைய இருதயத்தைப் பிளந்தது. 1

24ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; 1 என்னுடைய வாயின் வார்த்தைகளைக் கவனியுங்கள். 1

25உன்னுடைய இருதயம் அவளுடைய வழியிலே சாயவேண்டாம்; 1 அவளுடைய பாதையிலே மயங்கித் திரியாதே. 1

26அவள் அநேகரைக் காயப்படுத்தி, விழச்செய்தாள்; 1 பலவான்கள் அநேகரைக் கொலைசெய்தாள். 1

27அவளுடைய வீடு பாதாளத்திற்குப்போகும் வழி; 1 அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும்.

← Proverbs 6Read In The App, Free →Proverbs 8 →

Study Proverbs 7

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031