Proverbs · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Proverbs 3

1என் மகனே, என்னுடைய போதகத்தை மறவாதே; 1 உன்னுடைய இருதயம் என்னுடைய கட்டளைகளைக் காக்கட்டும். 1

2அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், 1 நீண்ட ஆயுளையும், சமாதானத்தையும் பெருகச்செய்யும். 1

3கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாமல் இருப்பதாக; 1 நீ அவைகளை உன்னுடைய கழுத்திலே கட்டி, 1 அவைகளை உன்னுடைய இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள். 1

4அதினால் தேவனுடைய பார்வையிலும் மனிதர்களுடைய பார்வையிலும் தயவையும் நற்புத்தியும் பெறுவாய். 1

5உன்னுடைய சுயபுத்தியின்மேல் சாயாமல், 1 உன்னுடைய முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாக இருந்து, 1

6உன்னுடைய வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; 1 அப்பொழுது அவர் உன்னுடைய பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். 1

7நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; 1 யெகோவாவுக்குப் பயந்து, 1 தீமையை விட்டு விலகு. 1

8அது உன்னுடைய சரீரத்திற்கு ஆரோக்கியமும், 1 உன்னுடைய எலும்புகளுக்கு ஊனுமாகும். 1

9உன்னுடைய பொருளாலும், 1 உன்னுடைய எல்லா விளைச்சலின் முதற்பலனாலும் யெகோவாவுக்கு மரியாதை செலுத்து. 1

10அப்பொழுது உன்னுடைய களஞ்சியங்கள் பூரணமாக நிரம்பும்; 1 உன்னுடைய ஆலைகளில் திராட்சைரசம் புரண்டோடும். 1

11என் மகனே, நீ யெகோவாவுடைய தண்டனையை அற்பமாக எண்ணாதே, 1 அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே. 1

12தகப்பன் தான் நேசிக்கிற மகனைத் தண்டிக்கிறதுபோல, 1 யெகோவாவும் எவனிடத்தில் அன்பாக இருக்கிறாரோ அவனை தண்டிக்கிறார். 1

13ஞானத்தைக் கண்டடைகிற மனிதனும், 1 புத்தியைச் சம்பாதிக்கிற மனிதனும் பாக்கியவான்கள். 1

14அதின் வியாபாரம் வெள்ளி வியாபாரத்திலும், 1 அதின் ஆதாயம் சுத்தப்பொன்னிலும் உத்தமமானது. 1

15முத்துக்களைவிட அது விலையேறப்பெற்றது; 1 நீ ஆசைப்படுவது ஒன்றும் அதற்கு சமமல்ல. 1

16அதின் வலதுகையில் நீடித்த ஆயுளும், 1 அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது. 1

17அதின் வழிகள் இனிதான வழிகள், 1 அதின் பாதைகளெல்லாம் சமாதானம். 1

18அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவமரம், 1 அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான். 1

19யெகோவா ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, 1 புத்தியினாலே வானங்களை நிலைநிறுத்தினார். 1

20அவருடைய ஞானத்தினாலே ஆழங்கள் பிரிந்தது, 1 ஆகாயமும் பனியைப் பெய்கிறது. 1

21என் மகனே, இவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக; 1 மெய்ஞானத்தையும் நல்ல ஆலோசனையையும் காத்துக்கொள். 1

22அவைகள் உன்னுடைய ஆத்துமாவுக்கு உயிரும், 1 உன்னுடைய கழுத்துக்கு அலங்காரமுமாகவும் இருக்கும். 1

23அப்பொழுது நீ பயமின்றி உன்னுடைய வழியில் நடப்பாய், 1 உன்னுடைய கால் இடறாது. 1

24நீ படுக்கும்போது பயப்படாமல் இருப்பாய்; 1 நீ படுத்துக்கொள்ளும்போது உன்னுடைய தூக்கம் இன்பமாக இருக்கும். 1

25திடீரென வரும் திகிலும், 1 துன்மார்க்கர்களின் பேரழிவும் வரும்போது நீ பயப்படவேண்டாம். 1

26யெகோவா உன்னுடைய நம்பிக்கையாக இருந்து, 1 உன்னுடைய கால் சிக்கிக்கொள்ளாதபடிக் காப்பார். 1

27நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யக்கூடியவர்களுக்குச் செய்யாமல் இருக்காதே. 1

28உன்னிடத்தில் பொருள் இருக்கும்போது உன்னுடைய அயலானை நோக்கி: 1 நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே. 1

29பயமின்றி உன்னிடத்தில் தங்குகிற 1 உன்னுடைய அயலானுக்கு விரோதமாகத் தீங்கு நினைக்காதே. 1

30ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாமல் இருக்க, 1 காரணமின்றி அவனோடு வழக்காடாதே. 1

31கொடுமைக்காரன்மேல் பொறாமைகொள்ளாதே; 1 அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே. 1

32மாறுபாடுள்ளவன் யெகோவாவுக்கு அருவருப்பானவன்; 1 நீதிமான்களோடு அவருடைய இரகசியம் இருக்கிறது. 1

33துன்மார்க்கனுடைய வீட்டில் யெகோவாவின் சாபம் இருக்கிறது, 1 நீதிமான்களுடைய வீட்டையோ அவர் ஆசீர்வதிக்கிறார். 1

34இகழ்வோரை அவர் இகழுகிறார்; 1 தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார். 1

35ஞானவான்கள் மரியாதையைப் பெற்றுக்கொள்வார்கள்; 1 மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள்.

← Proverbs 2Read In The App, Free →Proverbs 4 →

Study Proverbs 3

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031