Proverbs 4
1பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, 1 புத்தியை அடையும்படி கவனியுங்கள். 1
2நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்; 1 என் உபதேசத்தை விடாதிருங்கள். 1
3நான் என்னுடைய தகப்பனுக்குப் பிரியமான மகனும், 1 என்னுடைய தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன். 1
4அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: 1 உன்னுடைய இருதயம் என்னுடைய வார்த்தைகளைக் காத்துக்கொள்வதாக; 1 என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய். 1
5ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; 1 என்னுடைய வாயின் வார்த்தைகளை மறக்காமலும் விட்டு விலகாமலும் இரு. 1
6அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்; 1 அதின்மேல் பிரியமாக இரு, 1 அது உன்னைக் காத்துக்கொள்ளும். 1
7ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; 1 என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள். 1
8நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; 1 நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உனக்கு மரியாதை செலுத்தும். 1
9அது உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடத்தைக் கொடுக்கும்; 1 அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும். 1
10என் மகனே, கேள், என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்; 1 அப்பொழுது உன்னுடைய ஆயுளின் வருடங்கள் அதிகமாகும். 1
11ஞானவழியை நான் உனக்குப் போதித்தேன்; 1 செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன். 1
12நீ அவைகளில் நடக்கும்போது உன்னுடைய நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; 1 நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய். 1
13புத்திமதியை உறுதியாகப் பற்றிக்கொள், 1 அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு உயிர். 1
14துன்மார்க்கர்களுடைய பாதையில் நுழையாதே; 1 தீயோர்களுடைய வழியில் நடக்காதே. 1
15அதை வெறுத்துவிடு, அதின் வழியாகப் போகாதே; 1 அதைவிட்டு விலகிக் கடந்துபோ. 1
16தீங்கு செய்யாமல் அவர்களுக்கு தூக்கம் வராது; 1 அவர்கள் யாரையாவது விழச்செய்யாமல் இருந்தால் அவர்களுடைய தூக்கம் கலைந்துபோகும். 1
17அவர்கள் துன்மார்க்கத்தின் அப்பத்தைச் சாப்பிட்டு, 1 கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள். 1
18நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் 1 அதிகமதிகமாகப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போல இருக்கும். 1
19துன்மார்க்கர்களுடைய பாதையோ காரிருளைப்போல இருக்கும்; 1 தாங்கள் எதினால் இடறுகிறோம் என்பதை அறியமாட்டார்கள். 1
20என் மகனே, என்னுடைய வார்த்தைகளைக் கவனி; 1 என்னுடைய வசனங்களுக்கு உன்னுடைய செவியைச் சாய். 1
21அவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக; 1 அவைகளை உன்னுடைய இருதயத்திற்குள்ளே காத்துக்கொள். 1
22அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் உயிரும், 1 அவர்களுடைய உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம். 1
23எல்லாக் காவலோடும் உன்னுடைய இருதயத்தைக் காத்துக்கொள், 1 அதிலிருந்து ஜீவஊற்று புறப்படும். 1
24வாயின் தாறுமாறுகளை உன்னைவிட்டு அகற்றி, 1 உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து. 1
25உன்னுடைய கண்கள் நேராக நோக்குவதாக; 1 உன்னுடைய கண்ணின் இமைகள் உனக்கு முன்னே செவ்வையாகப் பார்க்கட்டும். 1
26உன்னுடைய நடைகளைச் சீர்தூக்கிப்பார்; 1 உன்னுடைய வழிகளெல்லாம் பத்திரப்பட்டிருக்கட்டும். 1
27வலதுபுறமோ இடதுபுறமோ சாயாதே; 1 உன்னுடைய காலைத் தீமைக்கு விலக்கு.