Proverbs 30
1யாக்கேயின் மகனாகிய ஆகூர் என்னும் ஆண்மகன் ஈத்தியேலுக்கு வசனித்து, 1 ஈத்தியேலுக்கும் ஊகாலுக்கும் சொன்ன உபதேச வாக்கியங்கள்: 1
2மனிதர்கள் எல்லோரையும்விட நான் மூடன்; 1 மனிதர்களுக்கேற்ற புத்தி எனக்கு இல்லை. 1
3நான் ஞானத்தைக் கற்கவும் இல்லை, 1 பரிசுத்தரின் அறிவை அறிந்துகொள்ளவும் இல்லை. 1
4வானத்திற்கு ஏறி இறங்கினவர் யார்? 1 காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? 1 தண்ணீர்களை துணியிலே கட்டினவர் யார்? 1 பூமியின் எல்லைகளையெல்லாம் நிறுவியவர் யார்? 1 அவருடைய பெயர் என்ன? 1 அவருடைய மகனுடைய பெயர் 1 என்ன? அதை அறிவாயோ? 1
5தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; 1 தம்மை அண்டிக்கொள்கிறவர்களுக்கு அவர் கேடகமானவர். 1
6அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, 1 கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், 1 நீ பொய்யனாவாய். 1
7இரண்டு மனு உம்மிடத்தில் கேட்கிறேன்; 1 நான் மரணமடையும்வரைக்கும் அவைகளை எனக்கு மறுக்காமல் தாரும். 1
8மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; 1 தரித்திரத்தையும் செல்வத்தையும் எனக்குக் கொடுக்காமல் இருப்பீராக. 1
9நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, யெகோவா யார் என்று சொல்லாதபடிக்கும்; 1 தரித்திரமடைகிறதினால் திருடி, என்னுடைய தேவனுடைய நாமத்தை வீணாக கெடுக்காதபடிக்கும், 1 என்னுடைய படியை எனக்கு அளந்து எனக்கு உணவளியும். 1
10எஜமானிடத்தில் அவனுடைய வேலைக்காரன்மேல் குற்றம் சுமத்தாதே; 1 அவன் உன்னைச் சபிப்பான், 1 நீ குற்றவாளியாகக் காணப்படுவாய். 1
11தங்களுடைய தகப்பனைச் சபித்தும், 1 தங்களுடைய தாயை ஆசீர்வதிக்காமலும் இருக்கிற சந்ததியாரும் உண்டு. 1
12தாங்கள் அழுக்கு நீங்க கழுவப்படாமல் இருந்தும், 1 தங்களுடைய பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாரும் உண்டு. 1
13வேறொரு சந்ததியாரும் உண்டு; அவர்களுடைய கண்கள் எத்தனை மேட்டிமையும் அவர்களுடைய இமைகள் எத்தனை பெருமையுமானவைகள். 1
14தேசத்தில் சிறுமையானவர்களையும் மனிதர்களில் எளிமையானவர்களையும் 1 சாப்பிடுவதற்கு வாளுக்கு ஒப்பான பற்களையும் கத்திகளுக்கு ஒப்பான கடைவாய்ப்பற்களையும் உடைய சந்ததியாரும் உண்டு. 1
15கொடு, கொடு, என்கிற இரண்டு மகள்கள் அட்டைக்கு உண்டு. 1 திருப்தி அடையாத மூன்று உண்டு, போதும் என்று சொல்லாத நான்கும் உண்டு. 1
16அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும், 1 தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத நெருப்புமே. 1
17தகப்பனைப் பரியாசம்செய்து, 1 தாயின் கட்டளையை அசட்டைசெய்கிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும், 1 கழுகின் குஞ்சுகள் சாப்பிடும். 1
18எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்று உண்டு, 1 என்னுடைய புத்திக்கு எட்டாதவைகள் நான்கும் உண்டு. 1
19அவையாவன: ஆகாயத்தில் கழுகினுடைய வழியும், 1 கன்மலையின்மேல் பாம்பினுடைய வழியும், நடுக்கடலில் கப்பலினுடைய வழியும், 1 ஒரு கன்னிகையை நாடிய மனிதனுடைய வழியுமே. 1
20அப்படியே விபசார பெண்ணுடைய வழியும் இருக்கிறது; 1 அவள் சாப்பிட்டு, தன்னுடைய வாயைத் துடைத்து; 1 நான் ஒரு பாவமும் செய்யவில்லை என்பாள். 1
21மூன்றினால் பூமி சஞ்சலப்படுகிறது, 1 நான்கையும் அது தாங்கமுடியாது. 1
22அரசாளுகிற அடிமைக்காகவும், 1 உணவால் திருப்தியான மூடனுக்காகவும், 1
23பகைக்கப்படக்கூடியவளாக இருந்தும், கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்ணுக்காகவும், 1 தன்னுடைய எஜமானிக்குப் பதிலாக மனைவியாகும் அடிமைப் பெண்ணுக்காகவுமே. 1
24பூமியில் சிறியவைகளாக இருந்தும், 1 மகா ஞானமுள்ளவைகள் நான்கு உண்டு. 1
25அவையாவன: சிறிய உயிரினமாக இருந்தும், 1 கோடைக்காலத்திலே தங்களுடைய உணவைச் சம்பாதிக்கிற எறும்பும், 1
26பெலமில்லாத உயிரினமாக இருந்தும், 1 தங்களுடைய வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழிமுயல்களும், 1
27ராஜா இல்லாமல் இருந்தும், 1 கூட்டம் கூட்டமாகப் புறப்படுகிற வெட்டுக்கிளிகளும், 1
28தன்னுடைய கைகளினால் வலையைப்பின்னி, 1 அரசர்கள் அரண்மனைகளில் இருக்கிற சிலந்திப் பூச்சியுமே. 1
29விநோதமாக அடிவைத்து நடக்கிறவைகள் மூன்று உண்டு; 1 விநோத நடையுள்ளவைகள் நான்கும் உண்டு. 1
30அவையாவன: மிருகங்களில் பெலமுள்ளதும் ஒன்றுக்கும் பின்வாங்காததுமாகிய சிங்கமும், 1
31பெருமையாய் நடக்கிற சேவலும் + 30:31 போர்க்குதிரை, வெள்ளாட்டுக் கடாவும், 1 ஒருவரும் எதிர்க்க முடியாத ராஜாவுமே. 1
32நீ மேட்டிமையானதினால் பைத்திமாக நடந்து, 1 துர்ச்சிந்தனையுள்ளவனாக இருந்தால், கையினால் வாயை மூடு. 1
33பாலைக் கடைதல் வெண்ணையைப் பிறப்பிக்கும்; 1 மூக்கைப் பிசைதல் இரத்தத்தைப் பிறப்பிக்கும்; 1 அப்படியே கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையைப் பிறப்பிக்கும்.