Proverbs · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Proverbs 15

1சாந்தமான பதில் கடுங்கோபத்தை அடக்கும்; 1 கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.

2ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; 1 மூடர்களின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும். 1

3யெகோவாவின் கண்கள் எந்த இடத்திலுமிருந்து, 1 நல்லவர்களையும், தீயவர்களையும் நோக்கிப்பார்க்கிறது. 1

4ஆரோக்கியமுள்ள நாவு ஜீவமரம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும். 1

5மூடன் தன்னுடைய தகப்பனுடைய புத்தியை அலட்சியப்படுத்துகிறான்; 1 கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி. 1

6நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷம் உண்டு; 1 துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பம் உண்டு. 1

7ஞானிகளின் உதடுகள் அறிவை விதைக்கும்; 1 மூடர்களின் இருதயமோ அப்படியல்ல. 1

8துன்மார்க்கர்களுடைய பலி யெகோவாவுக்கு அருவருப்பானது; 1 செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம். 1

9துன்மார்க்கர்களுடைய வழி யெகோவாவுக்கு அருவருப்பானது; 1 நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார். 1

10வழியைவிட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி எரிச்சலாக இருக்கும்; 1 கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான். 1

11பாதாளமும் அழிவும் யெகோவாவின் பார்வைக்கு முன்பாக இருக்க, 1 மனுமக்களுடைய இருதயம் அதிகமாக அவர் முன்பாக இருக்குமல்லவோ? 1

12பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசிக்கமாட்டான்; 1 ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான். 1

13மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; 1 மனதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோகும். 1

14புத்திமானுடைய மனம் அறிவைத்தேடும்; 1 மூடர்களின் வாயோ மதியீனத்தை மேயும். 1

15சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்; 1 மனரம்மியமோ நிரந்தர விருந்து. 1

16சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருட்களைவிட, 1 யெகோவாவைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம். 1

17பகையோடு இருக்கும் கொழுத்த எருதின் கறியைவிட, 1 சிநேகத்தோடு இருக்கும் இலைக்கறியே நல்லது. 1

18கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; 1 நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான். 1

19சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமம்; 1 நீதிமானுடைய வழியோ ராஜபாதை. 1

20ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; 1 மதியற்ற மனிதனோ தன்னுடைய தாயை அலட்சியப்படுத்துகிறான். 1

21மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்; 1 புத்திமானோ தன்னுடைய செயல்களைச் செம்மைப்படுத்துகிறான். 1

22ஆலோசனை இல்லாததால் எண்ணங்கள் சிதைந்துபோகும்; 1 ஆலோசனைக்காரர்கள் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும். 1

23மனிதனுக்குத் தன்னுடைய வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; 1 ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது! 1

24கீழான பாதாளத்தைவிட்டு விலகும்படி, 1 விவேகிக்கு வாழ்வின் வழியானது உன்னதத்தை நோக்கும் வழியாகும். 1

25அகங்காரியின் வீட்டைக் யெகோவா பிடுங்கிப்போடுவார்; 1 விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார். 1

26துன்மார்க்கர்களுடைய நினைவுகள் 1 யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; 1 சுத்தமானவர்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள். 1

27பொருளாசைக்காரன் தன்னுடைய வீட்டைக் கலைக்கிறான்; 1 லஞ்சங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான். 1

28நீதிமானுடைய மனம் பதில் சொல்ல யோசிக்கும்; 1 துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும். 1

29துன்மார்க்கர்களுக்குக் யெகோவா தூரமாக இருக்கிறார்; 1 நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார். 1

30கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; 1 நற்செய்தி எலும்புகளை ஆரோக்கியமாக்கும். 1

31வாழ்வுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது 1 ஞானிகளிடத்திலே தங்கும். 1

32புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை வெறுக்கிறான்; 1 கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான். 1

33யெகோவாவுக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; 1 மேன்மைக்கு முன்னானது தாழ்மை.

← Proverbs 14Read In The App, Free →Proverbs 16 →

Study Proverbs 15

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031