Proverbs · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Proverbs 22

1திரளான செல்வத்தைவிட நற்புகழே தெரிந்துகொள்ளப்படக்கூடியது; 1 பொன் வெள்ளியைவிட தயையே நலம். 1

2செல்வந்தனும், தரித்திரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; 1 அவர்கள் அனைவரையும் உண்டாக்கினவர் யெகோவா. 1

3விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; 1 பேதைகள் நேராகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள். 1

4தாழ்மைக்கும் யெகோவாவுக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் செல்வமும், 1 மகிமையும் ஜீவனும் ஆகும். 1

5மாறுபாடுள்ளவனுடைய வழியிலே முட்களும் கண்ணிகளும் உண்டு; 1 தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறவன் 1 அவைகளைவிட்டுத் தூரமாக விலகிப்போவான். 1

6பிள்ளையை நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; 1 அவனுடைய முதிர்வயதிலும் அதை விடாமல் இருப்பான். 1

7செல்வந்தன் தரித்திரனை ஆளுகிறான்; 1 கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை. 1

8அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான்; 1 அவனுடைய கடுங்கோபத்தின் கோல் ஒழியும். 1

9கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்; 1 அவன் தன்னுடைய உணவில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான். 1

10பரியாசக்காரனைத் துரத்திவிடு; 1 அப்பொழுது சண்டை நீங்கும், விரோதமும் அவமானமும் ஒழியும். 1

11சுத்த இருதயத்தை விரும்புகிறவனுடைய உதடுகள் இனிமையானவைகள்; 1 ராஜா அவனுக்கு நண்பனாவான். 1

12யெகோவாவுடைய கண்கள் ஞானத்தைக் காக்கும்; 1 துரோகிகளின் வார்த்தைகளையோ அவர் தாறுமாறாக்குகிறார். 1

13வெளியிலே சிங்கம், 1 வீதியிலே கொல்லப்படுவேன் என்று சோம்பேறி சொல்லுவான். 1

14ஒழுங்கீனமான பெண்களின் வாய் ஆழமான படுகுழி; 1 யெகோவாவுடைய கோபத்திற்கு ஏதுவானவன் அதிலே விழுவான். 1

15பிள்ளையின் இருதயத்தில் மதியீனம் ஒட்டியிருக்கும்; 1 அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும். 1

16தனக்கு அதிகம் உண்டாகத் தரித்திரனை ஒடுக்குகிறவன், 1 தனக்குக் குறைச்சல் உண்டாகவே செல்வந்தனுக்குக் கொடுப்பான். 1 ஞானிகளுடைய சொல் 1

17உன் செவியைச் சாய்த்து, ஞானிகளுடைய வார்த்தைகளைக் கேட்டு, 1 என் போதகத்தை உன் இருதயத்தில் வை. 1

18அவைகளை உன் உள்ளத்தில் காத்து, 1 அவைகளை உன்னுடைய உதடுகளில் நிலைத்திருக்கச்செய்யும்போது, 1 அது இன்பமாக இருக்கும். 1

19உன் நம்பிக்கை யெகோவாமேல் இருக்கும்படி, 1 இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன். 1

20சத்திய வார்த்தைகளின் யதார்த்தத்தை நான் உனக்குத் தெரிவிக்கும்படிக்கும், 1 நீ உன்னை அனுப்பினவர்களுக்குச் சத்திய வார்த்தைகளை பதிலாக சொல்லும்படிக்கும், 1

21ஆலோசனையையும், 1 ஞானத்தையும் பற்றி நான் உனக்கு முக்கியமானவைகளை எழுதவில்லையா? 1

22ஏழையாக இருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; 1 சிறுமையானவனை நீதிமன்றத்தில் உபத்திரவப்படுத்தாதே. 1

23யெகோவா அவர்களுக்காக வழக்காடி, 1 அவர்களைக் கொள்ளையிடுகிறவர்களுடைய உயிரைக் கொள்ளையிடுவார். 1

24கோபக்காரனுக்குத் தோழனாகாதே; 1 கோபமுள்ள மனிதனோடு நடக்காதே. 1

25அப்படிச் செய்தால். நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, 1 உன்னுடைய ஆத்துமாவுக்குக் கண்ணியை கொண்டுவருவாய். 1

26உறுதியளித்து உடன்பட்டு, 1 கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே. 1

27செலுத்த உனக்கு ஒன்றும் இல்லாமல் இருந்தால், 1 நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே. 1

28உன்னுடைய முன்னோர்கள் நாட்டின ஆரம்ப எல்லைக்குறியை மாற்றாதே. 1

29தன்னுடைய வேலையில் ஜாக்கிரதையாக இருக்கிறவனை நீ கண்டால், 1 அவன் சாதாரணமானவர்களுக்கு முன்பாக நிற்காமல், 1 ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.

← Proverbs 21Read In The App, Free →Proverbs 23 →

Study Proverbs 22

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031