Proverbs · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Proverbs 8

1ஞானம் கூப்பிடுகிறதில்லையோ? 1 புத்தி சத்தமிடுகிறதில்லையோ? 1

2அது வழியருகே உள்ள மேடைகளிலும், 1 நான்கு சந்திப்புகளிலும் நிற்கிறது. 1

3அது ஊர்வாசல்களின் ஓரத்திலும், பட்டணத்தின் வாசலிலும், நடை கூடங்களிலும் நின்று சத்தமிட்டு: 1

4மனிதர்களே, உங்களை நோக்கிக் கூப்பிடுகிறேன்; 1 என்னுடைய சத்தம் மனுமக்களுக்குத் தொனிக்கும். 1

5பேதைகளே, விவேகம் அடையுங்கள்; 1 மூடர்களே, புத்தியுள்ள சிந்தையாக இருங்கள். 1

6கேளுங்கள், மேன்மையான காரியங்களைப் பேசுவேன்; 1 என்னுடைய உதடுகள் உத்தம காரியங்களை வசனிக்கும். 1

7என்னுடைய வாய் சத்தியத்தைச் சொல்லும், 1 ஏளனம் என்னுடைய உதடுகளுக்கு அருவருப்பானது. 1

8என்னுடைய வாயின் வாக்குகளெல்லாம் நீதியானவைகள்; 1 அவைகளில் புரட்டும் விபரீதமும் இல்லை. 1

9அவைகளெல்லாம் புத்தியுள்ளவனுக்குத் தெளிவும், 1 ஞானத்தைப் பெற்றவர்களுக்கு எதார்த்தமாகவும் இருக்கும். 1

10வெள்ளியைவிட என்னுடைய புத்திமதியையும், 1 சுத்தபொன்னைவிட ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள். 1

11முத்துக்களைவிட ஞானமே நல்லது; 1 ஆசைப்படத்தக்கவைகள் எல்லாம் அதற்கு நிகரல்ல. 1

12ஞானமாகிய நான் விவேகத்தோடு தங்கி, 1 நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன். 1

13தீமையை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயப்படும் பயம்; 1 பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், 1 மாறுபாடுள்ள வாயையும் நான் வெறுக்கிறேன். 1

14ஆலோசனையும் மெய்ஞானமும் என்னுடையவைகள்; 1 நானே புத்தி, வல்லமை என்னுடையது. 1

15என்னாலே ராஜாக்கள் அரசாளுகிறார்கள், 1 பிரபுக்கள் நீதிசெலுத்துகிறார்கள். 1

16என்னாலே அதிகாரிகளும், பிரபுக்களும், 1 பூமியிலுள்ள எல்லா நியாயாதிபதிகளும் ஆளுகை செய்துவருகிறார்கள். 1

17என்னை நேசிக்கிறவர்களை நான் நேசிக்கிறேன்; 1 அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள். 1

18செல்வமும், கனமும், நிலையான பொருளும், 1 நீதியும் என்னிடத்தில் உண்டு. 1

19பொன்னையும் தங்கத்தையும்விட என்னுடைய பலன் நல்லது; 1 சுத்த வெள்ளியைவிட என்னுடைய வருமானம் நல்லது. 1

20என்னை நேசிக்கிறவர்கள் மெய்ப்பொருளை பெற்றுக்கொள்ளும்படிக்கும், 1 அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும், 1

21அவர்களை நீதியின் வழியிலும், 1 நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன். 1

22யெகோவா தமது செயல்களுக்குமுன் 1 ஆரம்பமுதல் என்னைத் தமது வழியின் துவக்கமாகக்கொண்டிருந்தார். 1

23பூமி உண்டாவதற்குமுன்னும், 1 ஆரம்பம்முதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்செய்யப்பட்டேன். 1

24ஆழங்களும், தண்ணீர் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்பே நான் உருவாக்கப்பட்டேன். 1

25மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், 1 குன்றுகள் உண்டாவதற்கு முன்னும், 1

26அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் 1 நான் உருவாக்கப்பட்டேன். 1

27அவர் வானங்களைப் படைக்கும்போது நான் அங்கே இருந்தேன்; 1 அவர் சமுத்திர விலாசத்தை குறிக்கும்போதும், 1

28உயரத்தில் மேகங்களை அமைத்து, 1 சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்துவைக்கும்போதும், 1

29சமுத்திரத் தண்ணீர் தன்னுடைய கரையைவிட்டு மீறாதபடி 1 அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்தும்போதும், 1

30நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாக இருந்தேன்; 1 எப்பொழுதும் அவருடைய மனமகிழ்ச்சியாக இருந்து, 1 எப்பொழுதும் அவருடைய சமுகத்தில் களிகூர்ந்தேன். 1

31அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு, 1 மனுமக்களுடனே மகிழ்ந்து கொண்டிருந்தேன். 1

32ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; 1 என்னுடைய வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள். 1

33நீங்கள் புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்; 1 அதைவிட்டு விலகாமல் இருங்கள். 1

34என்னுடைய வாசற்படியில் எப்பொழுதும் விழித்திருந்து, 1 என்னுடைய கதவு நிலை அருகே காத்திருந்து, 1 எனக்குச் செவிகொடுக்கிற மனிதன் பாக்கியவான். 1

35என்னைக் கண்டடைகிறவன் வாழ்வைக் கண்டடைகிறான்; 1 யெகோவாவிடத்தில் தயவையும் பெறுவான். 1

36எனக்கு விரோதமாகப் பாவம் செய்கிறவனோ, 1 தன்னுடைய ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான்; 1 என்னை வெறுக்கிறவர்கள் எல்லோரும் மரணத்தை விரும்புகிறவர்கள் என்று சொல்லுகிறது.

← Proverbs 7Read In The App, Free →Proverbs 9 →

Study Proverbs 8

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031