Proverbs 29
1அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன்னுடைய பிடரியைக் கடினப்படுத்துகிறவன் 1 உதவியின்றி திடீரென்று நாசமடைவான். 1
2நீதிமான்கள் பெருகினால் மக்கள் மகிழுவார்கள்; 1 துன்மார்க்கர்கள் ஆளும்போதோ மக்கள் தவிப்பார்கள். 1
3ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன்னுடைய தகப்பனை 1 சந்தோஷப்படுத்துகிறான்; வேசிகளோடு தொடர்புள்ளவனோ சொத்தை அழிக்கிறான். 1
4நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலைநிறுத்துகிறான்; 1 லஞ்சப்பிரியனோ அதைக் தலைகீழாக்குகிறான். 1
5பிறனை முகஸ்துதி செய்கிறவன், 1 அவனுடைய கால்களுக்கு வலையை விரிக்கிறான். 1
6துன்மார்க்கனுடைய துரோகத்திலே கண்ணி இருக்கிறது; 1 நீதிமானோ பாடி மகிழுகிறான். 1
7நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்து அறிகிறான்; 1 துன்மார்க்கனோ அதை அறிய விரும்பமாட்டான். 1
8பரியாசக்காரர்கள் பட்டணத்தில் தீக்கொளுத்திவிடுகிறார்கள்; 1 ஞானிகளோ கோபத்தை விலக்குகிறார்கள். 1
9ஞானி மூடனுடன் வழக்காடும்போது, 1 கோபப்பட்டாலும் சிரித்தாலும் அமைதியில்லை. 1
10இரத்தப்பிரியர்கள் உத்தமனைப் பகைக்கிறார்கள்; 1 செம்மையானவர்களோ அவனுடைய உயிரைக் காப்பாற்றுகிறார்கள். 1
11மூடன் தன்னுடைய உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; 1 ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான். 1
12அதிபதியானவன் பொய்களுக்குச் செவிகொடுத்தால், 1 அவனுடைய அலுவலர்கள் எல்லோரும் துன்மார்க்கர்களாவார்கள். 1
13தரித்திரனும் கொடுமைக்காரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; 1 அந்த இருவருடைய கண்களுக்கும் யெகோவா வெளிச்சம் கொடுக்கிறார். 1
14ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாக விசாரிக்கிற ராஜாவின் சிங்காசனம் 1 என்றும் நிலைபெற்றிருக்கும். 1
15பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; 1 தன்னுடைய இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ 1 தன்னுடைய தாய்க்கு வெட்கத்தை உண்டாக்குகிறான். 1
16துன்மார்க்கர்கள் பெருகினால் பாவமும் பெருகும்; 1 நீதிமான்களோ அவர்கள் விழுவதைக் காண்பார்கள். 1
17உன்னுடைய மகனை தண்டி, அவன் உனக்கு ஆறுதல் செய்வான், 1 உன்னுடைய ஆத்துமாவிற்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான். 1
18தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் மக்கள் சீர்கெட்டுப்போவார்கள்; 1 வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான். 1
19அடிமையானவன் வார்த்தைகளினாலே அடங்கமாட்டான்; 1 அவைகளை அவன் அறிந்தாலும் உத்திரவு கொடுக்கமாட்டான். 1
20தன்னுடைய வார்த்தைகளில் பதறுகிற மனிதனைக் கண்டால், 1 அவனை நம்புவதைவிட மூடனை நம்பலாம். 1
21ஒருவன் தன்னுடைய அடிமையைச் சிறு வயதுமுதல் அவனது இஷ்டப்படி வளர்த்தால், 1 முடிவிலே அவன் தன்னை மகனாக உரிமைபாராட்டுவான். 1
22கோபக்காரன் வழக்கை உண்டாக்குகிறான்; 1 கடுங்கோபி பெரும்பாதகன். 1
23மனிதனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; 1 மனத்தாழ்மையுள்ளவனோ மதிப்படைவான். 1
24திருடனோடு பங்கிட்டுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைப் பகைக்கிறான்; 1 சாபத்தை அவன் கேட்டாலும் காரியத்தை வெளிப்படுத்தமாட்டான். 1
25மனிதனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; 1 யெகோவாவை நம்புகிறவனோ 1 உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான். 1
26ஆளுகை செய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்; 1 ஆனாலும் அவனவனுடைய நியாயம் யெகோவாவாலே தீரும். 1
27நீதிமானுக்கு அநியாயக்காரன் அருவருப்பானவன்; 1 சன்மார்க்கனும் துன்மார்க்கனுக்கு அருவருப்பானவன்.