Proverbs 2
1என் மகனே, நீ உன்னுடைய செவியை ஞானத்திற்குச் சாய்த்து, 1 உன்னுடைய இருதயத்தைப் புத்திக்கு அமையச்செய்வதற்காக, 1
2நீ என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, 1 என்னுடைய கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, 1
3ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, 1
4அதை வெள்ளியைப்போல் நாடி, 1 புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடினால், 1
5அப்பொழுது யெகோவாவுக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, 1 தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய். 1
6யெகோவா ஞானத்தைத் தருகிறார்; 1 அவருடைய வாயிலிருந்து அறிவும் புத்தியும் வரும். 1
7அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞானத்தை வைத்திருக்கிறார்; 1 உத்தமமாக நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாக இருக்கிறார். 1
8அவர் நியாயத்தின் வழிகளைத் தற்காத்து, 1 தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார். 1
9அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், 1 எல்லா நல்வழிகளையும் அறிந்துகொள்வாய். 1
10ஞானம் உன்னுடைய இருதயத்தில் நுழைந்து, 1 அறிவு உன்னுடைய ஆத்துமாவுக்கு இன்பமாக இருக்கும்போது, 1
11நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், 1 புத்தி உன்னைப் பாதுகாக்கும். 1
12அதினால் நீ துன்மார்க்கர்களுடைய வழிக்கும், 1 மாறுபாடு பேசுகிற மனிதனுக்கும், 1
13இருளான வழிகளில் நடக்க நீதிநெறிகளைவிட்டு, 1
14தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கர்களுடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும், 1
15மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் 1 நீ தப்புவிக்கப்படுவாய். 1
16தன்னுடைய இளவயதின் நாயகனை விட்டு, 1 தன்னுடைய தேவனுடைய உடன்படிக்கையை மறந்து, 1
17ஆசை வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய ஒழுங்கீனமானவளுக்கும் தப்புவிக்கப்படுவாய். 1
18அவளுடைய வீடு மரணத்திற்கும், 1 அவளுடைய பாதைகள் மரித்தவர்களிடத்திற்கும் சாய்கிறது. 1
19அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை, 1 வாழ்வின்பாதைகளில் வந்து சேருகிறதுமில்லை. 1
20ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, 1 நீதிமான்களின் பாதைகளைக் காத்துக்கொள். 1
21நன்மை செய்கிறவர்கள் பூமியிலே தங்குவார்கள்; 1 உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். 1
22துன்மார்க்கர்களோ பூமியிலிருந்து துண்டிக்கப்பட்டுபோவார்கள்; 1 துரோகிகள் அதில் இல்லாதபடி அழிவார்கள்.