Proverbs 14
1புத்தியுள்ள பெண் தன்னுடைய வீட்டைக் கட்டுகிறாள்; 1 புத்தியில்லாத பெண்ணோ தன்னுடைய கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள். 1
2நிதானமாக நடக்கிறவன் யெகோவாவுக்குப் பயப்படுகிறான்; 1 தன்னுடைய வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்செய்கிறான். 1
3மூடன் வாயிலே அவனுடைய அகந்தைக்கு ஏற்ற கோல் உண்டு; 1 ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும். 1
4எருதுகள் இல்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாக இருக்கும்; 1 காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு. 1
5மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லமாட்டான்; 1 பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான். 1
6பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடிக்கமாட்டான்; 1 புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாகவரும். 1
7மூடனுடைய முகத்தைவிட்டு விலகிப்போ; 1 அறிவுள்ள உதடுகளை அங்கே காணமாட்டாய். 1
8தன்னுடைய வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்; 1 மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம். 1
9மூடர்கள் பாவத்தைக்குறித்துப் பரியாசம்செய்கிறார்கள்; 1 நீதிமான்களுக்குள்ளே தயவு உண்டு. 1
10இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; 1 அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தை ஆகமாட்டான். 1
11துன்மார்க்கனுடைய வீடு அழியும்; 1 செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும். 1
12மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழி உண்டு; 1 அதின் முடிவோ மரணவழிகள். 1
13சிரிப்பிலும் மனதிற்குத் துக்கமுண்டு; 1 அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம். 1
14பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன்னுடைய வழிகளிலேயும், 1 நல்ல மனிதனோ தன்னிலே தானும் திருப்தியடைவான். 1
15பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; 1 விவேகியோ தன்னுடைய நடையின்மேல் கவனமாக இருக்கிறான். 1
16ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; 1 மதியீனனோ கடுங்கோபம்கொண்டு துணிகரமாக இருக்கிறான். 1
17முன்கோபி மதிகேட்டைச் செய்வான்; 1 கெட்டச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான். 1
18பேதையர்கள் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்; 1 விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள். 1
19தீயோர்கள் நல்லவர்களுக்கு முன்பாகவும், துன்மார்க்கர்கள் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு. 1
20தரித்திரன் தன்னைச் சேர்ந்தவனாலும் பகைக்கப்படுகிறான்; 1 செல்வந்தனுக்கோ அநேக நண்பர்கள் உண்டு. 1
21பிறனை அவமதிக்கிறவன் பாவம்செய்கிறான்; 1 தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான். 1
22தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? 1 நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமும் உண்டு. 1
23எல்லா உழைப்பினாலும் பயனுண்டு; 1 உதடுகளின் பேச்சோ வறுமையை மட்டும் தரும். 1
24ஞானிகளுக்கு முடி அவர்களுடைய செல்வம்; 1 மூடர்களின் மதியீனம் மூடத்தனமே. 1
25மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களைக் காப்பாற்றுகிறான்; 1 வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான். 1
26யெகோவாவுக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; 1 அவனுடைய பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும். 1
27யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்வு தரும் ஊற்று; 1 அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம். 1
28மக்கள் கூட்டம் ராஜாவின் மகிமை; 1 மக்கள்குறைவு தலைவனின் முறிவு.
29நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; 1 முன்கோபியோ புத்தியீனத்தை விளங்கச்செய்கிறான். 1
30சமாதானத்துடன் இருப்பது உடலுக்கு வாழ்வு; 1 பொறாமையோ எலும்புருக்கி. 1
31தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; 1 தரித்திரனுக்குத் தயவு செய்கிறவனோ அவரை மேன்மைப்படுத்துகிறான்; 1
32துன்மார்க்கன் தன்னுடைய தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; 1 நீதிமானோ தன்னுடைய மரணத்திலே நம்பிக்கையுள்ளவன். 1
33புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனர்களிடத்தில் உள்ளதோ வெளிப்படும். 1
34நீதி மக்களை உயர்த்தும்; பாவமோ எந்த மக்களுக்கும் இகழ்ச்சி. 1
35ராஜாவின் தயவு விவேகமுள்ள பணிவிடைக்காரன்மேல் இருக்கும்; 1 அவனுடைய கோபமோ அவமானத்தை உண்டாக்குகிறவன்மேல் இருக்கும்.