Proverbs · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Proverbs 31

1ராஜாவாகிய லேமுவேலின் வசனங்கள்; 1 அவனுடைய தாய் அவனுக்குப் போதித்த உபதேசம்: 1

2என் மகனே, என்னுடைய கர்ப்பத்தின் மகனே, 1 என்னுடைய பொருத்தனைகளின் மகனே, 1

3பெண்களுக்கு உன்னுடைய பெலனையும் 1 ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன்னுடைய வழிகளையும் கொடுக்காதே. 1

4திராட்சைரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; 1 லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; 1 மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல. 1

5மதுபானம் குடித்தால் அவர்களுடைய நியாயப்பிரமாணத்தை மறந்து, 1 சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள். 1

6மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சைரசத்தையும் கொடுங்கள்; 1

7அவன் குடித்துத் தன்னுடைய குறைவை மறந்து, 1 தன்னுடைய வருத்தத்தை அப்புறம் நினைக்காமல் இருக்கட்டும். 1

8ஊமையனுக்காகவும் திக்கற்றவர்கள் எல்லோருடைய நியாயத்திற்காகவும் 1 உன்னுடைய வாயைத் திற. 1

9உன்னுடைய வாயைத் திறந்து, நீதியாக நியாயம் தீர்த்து, 1 சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயம் செய். 1

10குணசாலியான பெண்ணைக் கண்டுபிடிப்பவன் யார்? 1 அவளுடைய விலை முத்துக்களைவிட உயர்ந்தது. 1

11அவளுடைய கணவனுடைய இருதயம் அவளை நம்பும்; 1 அவனுடைய செல்வம் குறையாது. 1

12அவள் உயிரோடிருக்கிற நாட்களெல்லாம் அவனுக்குத் தீமையை அல்ல, 1 நன்மையையே செய்கிறாள். 1

13ஆட்டு ரோமத்தையும் சணலையும் தேடி, 1 தன்னுடைய கைகளினால் உற்சாகத்தோடு வேலைசெய்கிறாள். 1

14அவள் வியாபாரக் கப்பல்களைப்போல இருக்கிறாள்; 1 தூரத்திலிருந்து தன்னுடைய உணவைக் கொண்டுவருகிறாள். 1

15இருட்டோடு எழுந்து தன்னுடைய வீட்டாருக்கு உணவுகொடுத்து, 1 தன்னுடைய வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள். 1

16ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; 1 தன்னுடைய கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சைத்தோட்டத்தை நாட்டுகிறாள். 1

17தன்னை பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, 1 தன்னுடைய கைகளைப் பலப்படுத்துகிறாள். 1

18தன்னுடைய வியாபாரம் பயனுள்ளதென்று அறிந்திருக்கிறாள்; 1 இரவிலே அவளுடைய விளக்கு அணையாமல் இருக்கும். 1

19தன்னுடைய கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; 1 அவளுடைய விரல்கள் கதிரைப் பிடிக்கும். 1

20சிறுமையானவர்களுக்குத் தன்னுடைய கையைத் திறந்து, 1 ஏழைகளுக்குத் தன்னுடைய கரங்களை நீட்டுகிறாள். 1

21தன்னுடைய வீட்டார் அனைவருக்கும் கம்பளி ஆடை இருக்கிறபடியால், 1 தன்னுடைய வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படமாட்டாள். 1

22இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டாக்குகிறாள்; 1 மெல்லிய புடவையும் இரத்தாம்பரமும் அவளுடைய ஆடை. 1

23அவளுடைய கணவன் தேசத்தின் மூப்பர்களோடு நீதிமன்றங்களில் உட்கார்ந்திருக்கும்போது 1 பெயர் பெற்றவனாக இருக்கிறான். 1

24மெல்லிய புடவைகளை உண்டாக்கி விற்கிறாள்; 1 கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள். 1

25அவளுடைய உடை பலமும் அலங்காரமுமாக இருக்கிறது; 1 வருங்காலத்தைப் பற்றியும் மகிழுகிறாள். 1

26தன்னுடைய வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; 1 தயையுள்ள போதகம் அவளுடைய நாவின்மேல் இருக்கிறது. 1

27அவள் சோம்பலின் அப்பத்தை சாப்பிடாமல், 1 தன்னுடைய வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாக இருக்கிறாள். 1

28அவளுடைய பிள்ளைகள் எழும்பி, 1 அவளை பாக்கியவதி என்கிறார்கள்; 1 அவளுடைய கணவன் அவளைப்பார்த்து: 1

29அநேகம் பெண்கள் குணசாலிகளாக இருந்தது உண்டு; 1 நீயோ அவர்கள் எல்லோரையும்விட மேலானவள் என்று அவளைப் புகழுகிறான். 1

30செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், 1 யெகோவாவுக்குப் பயப்படுகிற பெண்ணே புகழப்படுவாள். 1

31அவளுடைய கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; 1 அவளுடைய செயல்கள் வாசல்களில் அவளைப் புகழ்வதாக.

← Proverbs 30Read In The App, Free →Ecclesiastes 1 →

Study Proverbs 31

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031