Proverbs · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Proverbs 5

1என் மகனே, என்னுடைய ஞானத்தைக் கவனித்து, 1 என்னுடைய புத்திக்கு உன்னுடைய செவியைச் சாய்; 1

2அப்பொழுது நீ விவேகத்தைப் பேணிக்கொள்வாய், 1 உன்னுடைய உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும். 1

3ஒழுங்கீனமானவளின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; 1 அவளுடைய வாய் எண்ணெயைவிட மிருதுவாக இருக்கும். 1

4அவளுடைய செயல்களின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும், 1 இருபுறமும் கூர்மையுள்ள பட்டயம்போல் கூர்மையுமாக இருக்கும். 1

5அவளுடைய காலடிகள் மரணத்திற்கு இறங்கும்; 1 அவளுடைய நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும். 1

6நீ வாழ்வின் வழியைச் சிந்தித்துக்கொள்ளாதபடி, 1 அவளுடைய நடைகள் மாறிமாறி அலையும்; அவைகளை அறியமுடியாது. 1

7ஆதலால் பிள்ளைகளே; இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்; 1 என்னுடைய வாயின் வசனங்களைவிட்டு நீங்காமல் இருங்கள். 1

8உன்னுடைய வழியை அவளுக்குத் தூரப்படுத்து; 1 அவளுடைய வீட்டின் வாசலுக்கு அருகில் சேராதே. 1

9சேர்ந்தால் உன்னுடைய மேன்மையை அந்நியர்களுக்கும், 1 உன்னுடைய ஆயுளின் காலத்தைக் கொடூரமானவர்களுக்கும் கொடுத்துவிடுவாய். 1

10அந்நியர்கள் உன்னுடைய செல்வத்தினால் திருப்தியடைவார்கள்; 1 உன்னுடைய உழைப்பின் பலன் மற்றவர்களுடைய வீட்டில் சேரும். 1

11முடிவிலே உன்னுடைய மாம்சமும் உன்னுடைய சரீரமும் உருவழியும்போது நீ துக்கித்து: 1

12ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, 1 கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம் செய்ததே! 1

13என்னுடைய போதகரின் சொல்லை நான் கேட்காலும், 1 எனக்கு உபதேசம்செய்தவர்களுக்கு செவிகொடுக்காமலும் போனேனே! 1

14சபைக்குள்ளும் சங்கத்திற்குள்ளும் கொஞ்சம்குறைய 1 எல்லாத் தீமைக்கும் உள்ளானேனே! என்று முறையிடுவாய். 1

15உன்னுடைய கிணற்றிலுள்ள தண்ணீரையும், 1 உன்னுடைய ஊற்றில் ஊறுகிற நீரையும் குடி. 1

16உன்னுடைய ஊற்றுகள் வெளியிலும் 1 உன்னுடைய வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக. 1

17அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாக இல்லாமல், 1 உனக்கே உரியவைகளாக இருப்பதாக. 1

18உன்னுடைய ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; 1 உன்னுடைய இளவயதின் மனைவியோடு மகிழ்ந்திரு. 1

19அவளே நேசிக்கப்படக்கூடிய பெண்மானும், 1 அழகான வரையாடும்போல இருப்பாளாக; 1 அவளுடைய மார்புகளே எப்பொழுதும் உன்னைத் திருப்தியாக்கும்; 1 அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிரு. 1

20என் மகனே, நீ ஒழுங்கீனமானவளின்மேல் மயங்கித் திரிந்து, 1 அந்நிய பெண்ணின் மார்பைத் தழுவவேண்டியது என்ன? 1

21மனிதனுடைய வழிகள் யெகோவாவின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; 1 அவனுடைய வழிகள் எல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார். 1

22துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; 1 தன்னுடைய பாவக்கயிறுகளால் கட்டப்படுவான். 1

23அவனுடைய புத்தியைக் கேட்காததினால் இறந்து, 1 தன்னுடைய மதிகேட்டின் மிகுதியினால் மயங்கிப்போவான்.

← Proverbs 4Read In The App, Free →Proverbs 6 →

Study Proverbs 5

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031