Proverbs 12
1புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; 1 கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன். 1
2நல்லவன் யெகோவாவிடத்தில் தயவு பெறுவான்; 1 கெட்டசிந்தனைகளுள்ள மனிதனை அவர் தண்டனைக்கு உட்படுத்துவார். 1
3துன்மார்க்கத்தினால் மனிதன் நிலைவரப்படமாட்டான்; 1 நீதிமான்களுடைய வேரோ அசையாது. 1
4குணசாலியான பெண் தன்னுடைய கணவனுக்கு கிரீடமாக இருக்கிறாள்; 1 அவமானத்தை உண்டாக்குகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாக இருக்கிறாள். 1
5நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்; 1 துன்மார்க்கர்களுடைய ஆலோசனைகளோ வஞ்சனையுள்ளவைகள். 1
6துன்மார்க்கர்களின் வார்த்தைகள் இரத்தம் சிந்த மறைந்திருப்பதைப்பற்றியது; 1 உத்தமர்களுடைய வாயோ அவர்களைத் தப்புவிக்கும். 1
7துன்மார்க்கர்கள் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்; 1 நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும். 1
8தன்னுடைய புத்திக்குத் தகுந்தபடி மனிதன் புகழப்படுவான்; 1 மாறுபாடான இருதயமுள்ளவனோ இகழப்படுவான். 1
9உணவில்லாதவனாக இருந்தும், 1 தன்னைத்தான் மேன்மைப்படுத்துகிறவனைவிட, 1 மேன்மை இல்லாதவனாக இருந்தும் பணிவிடைக்காரனுள்ளவன் உத்தமன். 1
10நீதிமான் தன்னுடைய மிருகஜீவன்களைக் காப்பாற்றுகிறான்; 1 துன்மார்க்கர்களுடைய இரக்கமும் கொடுமையே. 1
11தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவினால் திருப்தியடைவான்; 1 வீணர்களைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன். 1
12துன்மார்க்கன் கெட்டவர்களுடைய வலையை விரும்புகிறான்; 1 நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும். 1
13துன்மார்க்கனுக்கு அவனுடைய உதடுகளின் துரோகமே கண்ணி; 1 நீதிமானோ நெருக்கத்திலிருந்து நீங்குவான். 1
14அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; 1 அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும். 1
15மதியீனனுடைய வழி அவனுடைய பார்வைக்குச் செம்மையாக இருக்கும்; 1 ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன். 1
16மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; 1 அவமானத்தை மூடுகிறவனோ விவேகி. 1
17சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; 1 பொய்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான். 1
18பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; 1 ஞானமுள்ளவர்களுடைய நாவோ மருந்து. 1
19சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; 1 பொய்நாவோ ஒரு நிமிடம்மாத்திரம் இருக்கும்; 1
20தீங்கை திட்டமிடுகிறவர்களின் இருதயத்தில் கபடம் இருக்கிறது; 1 சமாதானம்செய்கிற ஆலோசனைக்காரர்களுக்கு உள்ளது சந்தோஷம். 1
21நீதிமானுக்கு ஒரு கேடும் வராது; 1 துன்மார்க்கர்களோ தீமையினால் நிறையப்படுவார்கள். 1
22பொய் உதடுகள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; 1 உண்மையாக நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். 1
23விவேகமுள்ள மனிதன் அறிவை அடக்கிவைக்கிறான்; 1 மூடர்களுடைய இருதயமோ மதியீனத்தைப் பிரபலப்படுத்தும். 1
24ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும்; 1 சோம்பேறியோ கட்டாயமாக வேலை வாங்கப்படுவான். 1
25மனிதனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; 1 நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும். 1
26நீதிமான் தன்னுடைய அயலானைவிட மேன்மையுள்ளவன்; 1 துன்மார்க்கர்களுடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும். 1
27சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை; 1 ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது. 1
28நீதியின் பாதையில் வாழ்வு உண்டு; 1 அந்தப் பாதையில் மரணம் இல்லை.