Proverbs · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Proverbs 24

1பொல்லாத மனிதர்கள்மேல் பொறாமைகொள்ளாதே; 1 அவர்களோடு இருக்கவும் விரும்பாதே. 1

2அவர்களுடைய இருதயம் கொடுமையை யோசிக்கும், 1 அவர்களுடைய உதடுகள் தீவினையைப் பேசும். 1

3வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும். 1

4அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான எல்லாவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும். 1

5ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; 1 அறிவுள்ளவன் தன்னுடைய வல்லமையை அதிகரிக்கச்செய்கிறான். 1

6நல்யோசனைசெய்து யுத்தம்செய்; 1 ஆலோசனைக்காரர்கள் அநேகரால் வெற்றி கிடைக்கும். 1

7மூடனுக்கு ஞானம் எட்டாத உயரமாக இருக்கும்; 1 அவன் நீதிமன்றத்தில் தன்னுடைய வாயைத் திறக்கமாட்டான். 1

8தீவினைசெய்ய நினைக்கிறவன் மதிகெட்டவன் என்னப்படுவான். 1

9தீயநோக்கம் பாவமாகும்; பரியாசக்காரன் மனிதர்களுக்கு அருவருப்பானவன். 1

10ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோனால், 1 உன்னுடைய பெலன் குறுகினது. 1

11மரணத்திற்கு ஒப்புவிக்கப்பட்டவர்களையும், கொலைசெய்வதற்கு கொண்டுபோகிறவர்களையும் 1 விடுவிக்க முடிந்தால் விடுவி. 1

12அதை நாங்கள் அறியோம் என்று சொன்னால், 1 இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியமாட்டாரோ? 1 உன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறவர் கவனிக்கமாட்டாரோ? 1 அவர் மனிதர்களுக்கு அவனவன் செயல்களுக்கு தக்கதாகப் பலனளிக்கமாட்டாரோ? 1

13என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது; 1 கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாக இருக்கும். 1

14அப்படியே ஞானத்தை அறிந்துகொள்வது உன்னுடைய ஆத்துமாவுக்கு இன்பமாக இருக்கும்; 1 அதைப் பெற்றுக்கொண்டால், அது முடிவில் உதவும், 1 உன்னுடைய நம்பிக்கை வீண்போகாது. 1

15துன்மார்க்கனே, நீ நீதிமானுடைய வீட்டிற்கு விரோதமாக மறைந்திருக்காதே; 1 அவன் தங்கும் இடத்தைப் பாழாக்கிப்போடாதே. 1

16நீதிமான் ஏழுமுறை விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; 1 துன்மார்க்கர்களோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள். 1

17உன் எதிரி விழும்போது சந்தோஷப்படாதே; 1 அவன் இடறும்போது உன்னுடைய இருதயம் சந்தோஷப்படாமல் இருப்பதாக. 1

18யெகோவா அதைக் காண்பார், அது அவருடைய பார்வைக்கு தீங்காக இருக்கும்; 1 அப்பொழுது அவனிடத்திலிருந்து அவர் தமது கோபத்தை நீக்கிவிடுவார். 1

19பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலாகாதே; 1 துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே. 1

20துன்மார்க்கனுக்கு நல்ல முடிவு இல்லை; 1 துன்மார்க்கர்களுடைய விளக்கு அணைந்துபோகும். 1

21என் மகனே, நீ யெகோவாவுக்கும் ராஜாவுக்கும் பயந்து நட, 1 கலகக்காரர்களோடு சேராதே. 1

22திடீரென அவர்களுடைய ஆபத்து எழும்பும்; 1 அவர்கள் இருவரின் அழிவையும் அறிந்தவன் யார்? 1

23பின்னும் ஞானமுள்ளவர்களின் புத்திமதிகள் என்னவெனில்: 1 நியாயத்திலே பாரபட்சம் நல்லதல்ல. 1

24துன்மார்க்கனைப் பார்த்து: 1 நீதிமானாக இருக்கிறாய் என்று சொல்லுகிறவனை மக்கள் சபிப்பார்கள், 1 குடிமக்கள் அவனை வெறுப்பார்கள். 1

25அவனைக் கடிந்துகொள்ளுகிறவர்கள்மேல் பிரியம் உண்டாகும், 1 அவர்களுக்கு உத்தம ஆசீர்வாதம் கிடைக்கும். 1

26செம்மையான மறுமொழி சொல்லுகிறவன் 1 உதடுகளை முத்தமிடுகிறவனுக்குச் சமம். 1

27வெளியில் உன்னுடைய வேலையைத் தயாராக்கி, 1 வயலில் அதை ஒழுங்காக்கி, 1 பின்பு உன்னுடைய வீட்டைக் கட்டு. 1

28நியாயமில்லாமல் பிறனுக்கு விரோதமாகச் சாட்சியாக ஏற்படாதே; 1 உன்னுடைய உதடுகளினால் வஞ்சகம் பேசாதே. 1

29அவன் எனக்குச் செய்தபடி நானும் அவனுக்குச் செய்வேன், 1 அவன் செய்த செயல்களுக்குத் தகுந்தபடி நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே. 1

30சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சைத்தோட்டத்தையும் கடந்துபோனேன். 1

31இதோ, அதெல்லாம் முள்ளுக்காடாக இருந்தது; 1 நிலத்தின் முகத்தை முட்கள் மூடினது, 1 அதின் கற்சுவர் இடிந்துகிடந்தது.

32அதைக் கண்டு சிந்தனை செய்தேன்; 1 அதை நோக்கிப் புத்தியடைந்தேன். 1

33இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், 1 இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு தூங்கட்டும் என்பாயோ? 1

34உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும் 1 உன் வறுமை ஆயுதம் அணிந்தவனைப்போலவும் வரும்.

← Proverbs 23Read In The App, Free →Proverbs 25 →

Study Proverbs 24

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031