Proverbs · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Proverbs 16

1மனதின் யோசனைகள் மனிதனுடையது; 1 நாவின் பதில் யெகோவாவால் வரும். 1

2மனிதனுடைய வழிகளெல்லாம் அவனுடைய பார்வைக்குச் சுத்தமானவைகள்; 1 யெகோவாவோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார். 1

3உன்னுடைய செயல்களைக் யெகோவாவுக்கு ஒப்புவி; 1 அப்பொழுது உன்னுடைய யோசனைகள் உறுதிப்படும். 1

4யெகோவா எல்லாவற்றையும் தமக்கென்று படைத்தார்; 1 தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார். 1

5மனமேட்டிமையுள்ளவன் எவனும் யெகோவாவுக்கு அருவருப்பானவன்; 1 கையோடு கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பமாட்டான். 1

6கிருபையினாலும், சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; 1 யெகோவாவுக்குப் பயப்படுகிறதினால் மனிதர்கள் தீமையைவிட்டு விலகுவார்கள். 1

7ஒருவனுடைய வழிகள் யெகோவாவுக்குப் பிரியமாக இருந்தால், 1 அவனுடைய எதிரிகளும் சமாதானமாகும்படிச் செய்வார். 1

8அநியாயமாக வந்த அதிக வருமானத்தைவிட, 1 நியாயமாக வந்த கொஞ்ச வருமானமே நல்லது. 1

9மனிதனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; 1 அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ யெகோவா. 1

10ராஜாவின் உதடுகளில் இனிய வார்த்தை பிறக்கும்; 1 நியாயத்தில் அவனுடைய வாய் தவறாது. 1

11நியாயமான நிறைகோலும் தராசும் யெகோவாவுடையது; 1 பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல். 1

12அநியாயம்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; 1 நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும். 1

13நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; 1 நிதானமாகப் பேசுகிறவன்மேல் ராஜாக்கள் பிரியப்படுவார்கள். 1

14ராஜாவின் கோபம் மரணதூதர்களுக்குச் சமம்; 1 ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான். 1

15ராஜாவின் முகக்களையில் வாழ்வு உண்டு; 1 அவனுடைய தயவு பின்மாரிபெய்யும் மேகத்தைப்போல் இருக்கும். 1

16பொன்னைச் சம்பாதிப்பதைவிட ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு நல்லது! 1 வெள்ளியை சம்பாதிப்பதைவிட புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை 1

17தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; 1 தன்னுடைய நடையைக் கவனித்திருக்கிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான். 1

18அழிவுக்கு முன்னானது அகந்தை; 1 விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை. 1

19அகங்காரிகளோடு கொள்ளைப்பொருளைப் பங்கிடுவதைவிட, 1 சிறுமையானவர்களோடு மனத்தாழ்மையாக இருப்பது நலம். 1

20விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மை பெறுவான்; 1 யெகோவாவை நம்புகிறவன் பாக்கியவான். 1

21இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகி எனப்படுவான்; 1 உதடுகளின் இனிமை கல்வியைப் பெருகச்செய்யும். 1

22புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று; மதியீனர்களின் போதனை மதியீனமே. 1

23ஞானியின் இருதயம் அவனுடைய வாய்க்கு அறிவை ஊட்டும்; 1 அவனுடைய உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும். 1

24இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு இன்பமும், 1 எலும்புகளுக்கு மருந்தாகும். 1

25மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழியுண்டு; 1 அதின் முடிவோ மரண வழிகள். 1

26உழைக்கிறவன் தனக்காகவே உழைக்கிறான்; 1 அவனுடைய வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும். 1

27வீணான மகன் கிண்டிவிடுகிறான்; 1 அவனுடைய உதடுகளில் இருப்பது எரிகிற அக்கினிபோன்றது. 1

28மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; 1 கோள் சொல்லுகிறவன் உயிர் நண்பனையும் பிரித்துவிடுகிறான். 1

29கொடுமையானவன் தன்னுடைய அயலானுக்கு நயங்காட்டி, 1 அவனை நலமல்லாத வழியிலே நடக்கச்செய்கிறான். 1

30அவனுடைய மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன்னுடைய கண்களை மூடி, 1 தீமையைச் செய்யும்படி தன்னுடைய உதடுகளைக் கடிக்கிறான். 1

31நீதியின் வழியில் உண்டாகும் நரை முடியானது 1 மகிமையான கிரீடம். 1

32பலவானைவிட நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; 1 பட்டணத்தைப் பிடிக்கிறவனைவிட தன்னுடைய மனதை அடக்குகிறவன் உத்தமன். 1

33சீட்டு மடியிலே போடப்படும்; 1 காரியத்தின் முடிவோ யெகோவாவால் வரும்.

← Proverbs 15Read In The App, Free →Proverbs 17 →

Study Proverbs 16

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031