Proverbs 1
1தாவீதின் மகனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்: 1
2இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, 1 புத்திமதிகளை உணர்ந்து, 1
3விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம். 1
4இவைகள் பேதைகளுக்கு புத்தியையும், வாலிபர்களுக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும். 1
5புத்திமான் இவைகளைக் கேட்டு அறிவில் வளருவான்; 1 விவேகி நல்ல ஆலோசனைகளை அடைந்து; 1
6நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், 1 ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் சொன்ன மறைபொருட்களையும் அறிந்துகொள்வான். 1
7யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; 1 மூடர் ஞானத்தையும் அறிவுரைகளையும் அசட்டை செய்கிறார்கள். 1 ஞானம் தழுவுவதற்கான அறிவுரைகள் 1
8என் மகனே, உன்னுடைய தகப்பன் புத்தியைக் கேள், 1 உன்னுடைய தாயின் போதனையைத் தள்ளாதே. 1
9அவைகள் உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடமாகவும், 1 உன்னுடைய கழுத்துக்கு பொன் சங்கிலியாகவும் இருக்கும். 1
10என் மகனே, பாவிகள் உனக்கு ஆசைகாட்டினாலும் 1 நீ சம்மதிக்காதே. 1
11எங்களோடு வா, இரத்தம்சிந்தும்படி நாம் மறைந்திருந்து, 1 குற்றமில்லாமல் இருக்கிறவர்களை 1 காரணமில்லாமல் பிடிக்கும்படி ஒளிந்திருப்போம்; 1
12பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்; 1 குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் 1 அவர்களை முழுமையாக விழுங்குவோம்; 1
13விலையுயர்ந்த எல்லாவிதப் பொருள்களையும் கண்டடைவோம்; 1 கொள்ளைப்பொருளினால் நம்முடைய வீடுகளை நிரப்புவோம். 1
14எங்களோடு பங்காளியாக இரு; 1 நம்மெல்லோருக்கும் ஒரே பை இருக்கும் என்று அவர்கள் சொன்னால்; 1
15என் மகனே, நீ அவர்களோடு வழிநடவாமல், 1 உன்னுடைய காலை அவர்களுடைய பாதைக்கு விலக்குவாயாக. 1
16அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, 1 இரத்தம் சிந்த விரைகிறது. 1
17எவ்வகையான பறவையானாலும் சரி, 1 அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது வீணானது. 1
18இவர்களோ தங்களுடைய இரத்தத்திற்கே மறைந்திருக்கிறார்கள், 1 தங்களுடைய உயிருக்கே கண்ணிவைத்திருக்கிறார்கள். 1
19பொருளாசையுள்ள எல்லோருடைய வழியும் இதுவே; 1 இது தன்னை உடையவர்களின் உயிரை வாங்கும். 1 ஞானத்தைத் தள்ளுதலுக்கு எதிரான எச்சரிக்கை 1
20ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது, 1 வீதிகளில் சத்தமிடுகிறது. 1
21அது ஆள் நடமாட்டமுள்ள தெருக்களின் சந்திப்பிலும், 1 நகரத்தின் நுழைவு வாசலிலும் நின்று கூப்பிட்டு, 1 பட்டணத்தில் தன்னுடைய வார்த்தைகளைச் சொல்லுகிறது: 1
22பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், ஏளனம் செய்பவர்களே, 1 நீங்கள் ஏளனத்தில் பிரியப்படுவதும், அறிவில்லாதவர்களே, 1 நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும். 1
23என்னுடைய கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; 1 இதோ, என்னுடைய ஆவியை உங்களுக்கு அருளுவேன், 1 என்னுடைய வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன். 1
24நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; 1 நான் என்னுடைய கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை. 1
25என்னுடைய ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, 1 என்னுடைய கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள். 1
26ஆகையால், நானும் உங்களுடைய ஆபத்துக்காலத்தில் சிரித்து, 1 நீங்கள் பயப்படும் காரியம் வரும்போது ஏளனம்செய்வேன். 1
27நீங்கள் பயப்படும் காரியம் புயல்போல் வரும்போதும், 1 ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும், 1 நெருக்கமும் இடுக்கணும் உங்கள்மேல் வரும்போதும், ஏளனம்செய்வேன். 1
28அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; 1 நான் மறுஉத்திரவு கொடுக்கமாட்டேன்; 1 அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள். 1
29அவர்கள் அறிவை வெறுத்தார்கள், 1 யெகோவாவுக்குப் பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள். 1
30என்னுடைய ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; 1 என்னுடைய கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டை செய்தார்கள். 1
31ஆகையால் அவர்கள் தங்களுடைய வழியின் பலனைச் சாப்பிடுவார்கள்; 1 தங்களுடைய யோசனைகளினால் திருப்தியடைவார்கள். 1
32அறிவீனர்களின் மாறுபாடு அவர்களைக் கொல்லும், 1 மூடரின் பொறுப்பின்மை அவர்களை அழிக்கும்; 1
33எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, 1 அவன் பயமின்றி தங்கி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாக இருப்பான்.