Proverbs 27
1நாளையத்தினத்தைக்குறித்துப் பெருமைபேசாதே; 1 ஒரு நாள் பிறப்பிப்பதை அறியமாட்டாயே. 1
2உன்னுடைய வாய் அல்ல, மற்றவனே உன்னைப் புகழட்டும்; 1 உன்னுடைய உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும். 1
3கல் கனமும், மணல் பாரமுமாக இருக்கும்; 1 மூடனுடைய கோபமோ இந்த இரண்டைவிட பாரமாம். 1
4கடுங்கோபம் கொடுமையுள்ளது, கோபம் பயங்கரமானது; 1 பொறாமையோவென்றால், அதற்கு முன்னே நிற்கக்கூடியவன் யார்? 1
5மறைவான நேசத்தைவிட வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது. 1
6நண்பன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; 1 சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள். 1
7திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்; 1 பசியுள்ளவனுக்கோ கசப்பான ஆகாரங்களும் தித்திப்பாக இருக்கும். 1
8தன்னுடைய கூட்டைவிட்டு அலைகிற குருவி எப்படியிருக்கிறதோ, 1 அப்படியே தன்னுடைய இடத்தைவிட்டு அலைகிற மனிதனும் இருக்கிறான். 1
9வாசனைத் தைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல, 1 ஒருவனுடைய நண்பன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும். 1
10உன்னுடைய நண்பனையும், உன்னுடைய தகப்பனுடைய நண்பனையும் விட்டுவிடாதே; 1 உன்னுடைய ஆபத்துக்காலத்தில் உன்னுடைய சகோதரனுடைய வீட்டிற்குப் போகாதே; 1 தூரத்திலுள்ள சகோதரனைவிட சமீபத்திலுள்ள அயலானே சிறப்பானவன். 1
11என் மகனே, என்னை சபிக்கிறவனுக்கு நான் உத்திரவு கொடுக்கும்படியாக, 1 நீ ஞானவானாகி, என்னுடைய இருதயத்தைச் சந்தோஷப்படுத்து. 1
12விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; 1 பேதைகளோ நேராகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள். 1
13அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவனுடைய ஆடையை எடுத்துக்கொள், 1 அந்நிய பெண்ணுக்காக ஈடுவாங்கிக்கொள். 1
14ஒருவன் அதிகாலையிலே எழுந்து உரத்த சத்தத்தோடு 1 தன்னுடைய நண்பனுக்குச் சொல்லும் ஆசீர்வாதம் சாபமாக எண்ணப்படும். 1
15அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் 1 சண்டைக்காரியான பெண்ணும் சரி. 1
16அவளை அடக்கப்பார்க்கிறவன் 1 காற்றை அடக்கித் தன்னுடைய வலதுகையினால் எண்ணெயைப் பிடிக்கப்பார்க்கிறான். 1
17இரும்பை இரும்பு கூர்மையாக்கிடும்; 1 அப்படியே மனிதனும் தன்னுடைய நண்பனைக் கூர்மையாக்குகிறான். 1
18அத்திமரத்தைக் காக்கிறவன் அதின் கனியை சாப்பிடுவான்; 1 தன்னுடைய எஜமானைக் காக்கிறவன் கனமடைவான். 1
19தண்ணீரில் முகத்திற்கு முகம் ஒத்திருப்பதைப்போல, 1 மனிதர்களில் இருதயத்திற்கு இருதயம் ஒத்திருக்கும். 1
20பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; 1 அதுபோல மனிதனுடைய ஆசைகளும் திருப்தியாகிறதில்லை. 1
21வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; 1 மனிதனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை. 1
22மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடு நொய்யாகக் குத்தினாலும், 1 அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது. 1
23உன்னுடைய ஆடுகளின் நிலைமையை நன்றாக அறிந்துகொள்; 1 உன்னுடைய மந்தைகளின்மேல் கவனமாக இரு. 1
24செல்வம் என்றைக்கும் நிலைக்காது; 1 கிரீடம் தலைமுறை தலைமுறைதோறும் நிலைநிற்குமோ? 1
25புல் முளைக்கும், பச்சிலைகள் தோன்றும், 1 மலைப்பூண்டுகள் சேர்க்கப்படும். 1
26ஆட்டுக்குட்டிகள் உனக்கு ஆடையையும், 1 கடாக்கள் வயல் வாங்கத்தக்க கிரயத்தையும் கொடுக்கும். 1
27வெள்ளாட்டுப்பால் உன்னுடைய உணவுக்கும், 1 உன் வீட்டாரின் உணவுக்கும் 1 உன் வேலைக்காரிகளின் பிழைப்புக்கும் போதுமானதாக இருக்கும்.