Proverbs · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Proverbs 9

1ஞானம் தன்னுடைய வீட்டைக் கட்டி, 1 தன்னுடைய செதுக்கப்பட்ட ஏழு தூண்களையும் அமைத்து, 1

2தன்னுடைய கொழுத்த மிருகங்களை அடித்து, 1 திராட்சைரசத்தை ஊற்றிவைத்து, 1 தன்னுடைய உணவுப்பந்தியை ஆயத்தப்படுத்தி, 1

3தன்னுடைய பணிவிடைக்காரிகளை அனுப்பி, 1 பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு, 1

4புத்தியீனனை நோக்கி: 1 எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும். 1

5நீங்கள் வந்து என்னுடைய அப்பத்தைச் சாப்பிட்டு, 1 நான் ஊற்றிய திராட்சைரசத்தைக் குடியுங்கள். 1

6பேதமையைவிட்டு விலகுங்கள், 1 அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; 1 புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று சொல்லுகிறது. 1

7பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் அவமானமடைகிறான்; 1 துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான். 1

8பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, 1 அவன் உன்னைப் பகைப்பான்; 1 ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், 1 அவன் உன்னை நேசிப்பான். 1

9ஞானமுள்ளவனுக்குப் போதி, அவன் ஞானத்தில் தேறுவான்; 1 நீதிமானுக்கு உபதேசம் செய், 1 அவன் அறிவில் விருத்தியடைவான். 1

10யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; 1 பரிசுத்த தேவனின் அறிவே அறிவு. 1

11என்னாலே உன்னுடைய ஆயுசு நாட்கள் பெருகும்; 1 ஆயுளின் வருடங்கள் விருத்தியாகும். 1

12நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்; 1 நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்று சொல்லுகிறது. 1

13மதியற்ற பெண் வாயாடியும் ஒன்றுமறியாத மூடத்தனம் உள்ளவளுமாக இருக்கிறாள். 1

14அவள் தன்னுடைய வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் இருக்கைபோட்டு உட்கார்ந்து, 1

15தங்களுடைய வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கர்களைப் பார்த்து: 1

16எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும் என்றும், 1

17மதியீனனை நோக்கி: 1 திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், 1 மறைவான இடத்தில் சாப்பிடும் அப்பம் இன்பமாக இருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள். 1

18இருப்பினும் இறந்தவர்கள் அந்த இடத்தில் உண்டென்றும், 1 அவளுடைய விருந்தாளிகள் நரக பாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியமாட்டான்.

← Proverbs 8Read In The App, Free →Proverbs 10 →

Study Proverbs 9

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031