Proverbs · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Proverbs 26

1கோடைக்காலத்திலே உறைந்த பனியும், 1 அறுப்புக்காலத்திலே மழையும் தகாததுபோல, 1 மூடனுக்கு மகிமை தகாது. 1

2அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலவும், 1 தகைவிலான் குருவி பறந்து போவதுபோலவும், 1 காரணம் இல்லாமல் சொன்னசாபம் தங்காது. 1

3குதிரைக்குச் சவுக்கும், கழுதைக்குக் கடிவாளமும், 1 மூடனுடைய முதுகுக்குப் பிரம்பும் ஏற்றது. 1

4மூடனுக்கு அவனுடைய மதியீனத்தின்படி மறுஉத்திரவு கொடுக்காதே; 1 கொடுத்தால் நீயும் அவனைப்போல ஆவாய். 1

5மூடனுக்கு அவனுடைய மதியீனத்தின்படி மறுஉத்திரவு கொடு; 1 கொடுக்காவிட்டால் அவன் தன்னுடைய பார்வைக்கு ஞானியாக இருப்பான். 1

6மூடன் கையிலே செய்தி அனுப்புகிறவன் 1 தன்னுடைய கால்களையே வெட்டிக்கொண்டு நஷ்டத்தை அடைகிறான். 1

7நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும், 1 அப்படியே மூடர்களின் வாயிலுள்ள உவமைச்சொல்லும் குந்தும். 1

8மூடனுக்கு மரியாதை கொடுக்கிறவன் கவணிலே கல்லைக்கட்டுகிறவன்போல் இருப்பான். 1

9மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி 1 வெறியன் கையில் அகப்பட்ட முள். 1

10பலத்தவன் அனைவரையும் நோகச்செய்து, 1 மூடனையும் வேலைவாங்குகிறான், 1 மீறி நடக்கிறவர்களையும் வேலைவாங்குகிறான். 1

11நாயானது தான் கக்கினதை சாப்பிடும்படித் திரும்புவதுபோல, 1 மூடனும் தன்னுடைய மூடத்தனத்திற்குத் திரும்புகிறான். 1

12தன்னுடைய பார்வைக்கு ஞானியாக இருப்பவனைக் கண்டால், 1 அவனைவிட மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாக இருக்கலாம். 1

13வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான். 1

14கதவு கீல்முளையில் ஆடுகிறதுபோல, 1 சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான். 1

15சோம்பேறி தன்னுடைய கையைக் கலத்திலே வைத்து 1 அதைத் தன்னுடைய வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான். 1

16புத்தியுள்ள மறுஉத்திரவு சொல்லத்தகும் ஏழுபேரைவிட 1 சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன். 1

17வழியிலே போகும்போது தனக்கு சம்மந்தமில்லாத வழக்கில் தலையிடுகிறவன் 1 நாயைக் காதைப் பிடித்து இழுக்கிறவனைப்போல இருக்கிறான். 1

18கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ, 1

19அப்படியே, தன்னோடு இருந்தவனை வஞ்சித்து: 1 நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் 1 என்று சொல்லுகிற மனிதனும் இருக்கிறான். 1

20விறகில்லாமல் நெருப்பு அணையும்; 1 கோள்சொல்லுகிறவன் இல்லாமல் சண்டை அடங்கும். 1

21கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, 1 கோபக்காரன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன். 1

22கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போல இருக்கும்; 1 ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் குத்தும். 1

23நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் 1 வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போல இருக்கும். 1

24பகைஞன் தன்னுடைய உள்ளத்தில் கபடத்தை மறைத்து, 1 தன்னுடைய உதடுகளினால் சூதுபேசுகிறான். 1

25அவன் தாழ்மையாக பேசினாலும் அவனை நம்பாதே; 1 அவனுடைய இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு. 1

26பகையை வஞ்சகமாக மறைத்து வைக்கிறவன் எவனோ, 1 அவனுடைய பொல்லாங்கு மகா சபையிலே வெளிப்படுத்தப்படும். 1

27படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்; 1 கல்லைப் புரட்டுகிறவன்மேல் அந்தக் கல் திரும்ப விழும். 1

28பொய்நாவு தன்னால் பாதிக்கப்பட்டவர்களைப் பகைக்கும்; 1 முகஸ்துதி பேசும் வாய் அழிவை உண்டாக்கும்.

← Proverbs 25Read In The App, Free →Proverbs 27 →

Study Proverbs 26

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031