Proverbs · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Proverbs 28

1ஒருவனும் பின்தொடராமல் இருந்தும் துன்மார்க்கர்கள் ஓடிப்போகிறார்கள்; 1 நீதிமான்களோ சிங்கத்தைப்போல தைரியமாக இருக்கிறார்கள். 1

2தேசத்தின் பாவத்தினால் அதின் அதிகாரிகள் அநேகராக இருக்கிறார்கள்; 1 புத்தியும் அறிவுமுள்ள மனிதனாலோ அதின் நற்சீர் நீடித்திருக்கும். 1

3ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன் 1 உணவு விளையாதபடி வெள்ளமாக அடித்துக்கொண்டுபோகிற மழையைப்போல இருக்கிறான். 1

4வேதப்பிரமாணத்தைவிட்டு விலகுகிறவர்கள் 1 துன்மார்க்கர்களைப் புகழுகிறார்கள்; 1 வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவர்களோ அவர்களோடு போராடுகிறார்கள். 1

5துன்மார்க்கர்கள் நியாயத்தை அறியார்கள்; 1 யெகோவாவை தேடுகிறவர்களோ அனைத்தையும் அறிவார்கள். 1

6இருவழிகளில் நடக்கிறவன் செல்வந்தனாக இருந்தாலும், 1 நேர்மையாக நடக்கிற தரித்திரன் அவனைவிட சிறப்பானவன். 1

7வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள மகன்; 1 உணவுப்பிரியர்களுக்குத் தோழனாக இருக்கிறவனோ 1 தன்னுடைய தகப்பனை அவமானப்படுத்துகிறான். 1

8அநியாய வட்டியினாலும் ஆதாயத்தினாலும் தன்னுடைய சொத்தைப் பெருகச்செய்கிறவன், 1 தரித்திரர்கள்மேல் இரங்குகிறவனுக்காக அதைச் சேகரிக்கிறான். 1

9வேதத்தைக் கேட்காதபடி தன்னுடைய செவியை விலக்குகிறவனுடைய 1 ஜெபமும் அருவருப்பானது. 1

10உத்தமர்களை மோசப்படுத்தி, 1 பொல்லாத வழியிலே நடத்துகிறவன் தான் வெட்டின குழியில் தானே விழுவான்; 1 உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள். 1

11செல்வந்தன் தன்னுடைய பார்வைக்கு ஞானவான்; 1 புத்தியுள்ள தரித்திரனோ அவனைப் பரிசோதிக்கிறான். 1

12நீதிமான்கள் களிகூரும்போது மகா கொண்டாட்டம் உண்டாகும்; 1 துன்மார்க்கர்கள் எழும்பும்போதோ மனிதர்கள் மறைந்துகொள்கிறார்கள். 1

13தன்னுடைய பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; 1 அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம்பெறுவான். 1

14எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்; 1 தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான். 1

15ஏழை மக்களை ஆளும் துன்மார்க்க அதிகாரி 1 கெர்ச்சிக்கும் சிங்கத்திற்கும் அலைந்து திரிகிற கரடிக்கும் ஒப்பாக இருக்கிறான். 1

16தலைவன் புத்தியீனனாக இருந்தால் அவன் செய்யும் இடுக்கண் மிகுதி; 1 பொருளாசையை வெறுக்கிறவன் தீர்க்காயுசைப் பெறுவான். 1

17இரத்தப்பழிக்காக ஒடுக்கப்பட்டவன் குழியில் ஒளிய ஓடிவந்தால், 1 அவனை ஆதரிக்கவேண்டாம். 1

18உத்தமனாக நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; 1 மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான். 1

19தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவால் திருப்தியாவான்; 1 வீணர்களைப் பின்பற்றுகிறவனோ வறுமையால் நிறைந்திருப்பான். 1

20உண்மையுள்ள மனிதன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; 1 செல்வந்தனாகிறதற்கு அவசரப்படுகிறவனோ ஆக்கினைக்குத் தப்பமாட்டான். 1

21பாரபட்சம் நல்லதல்ல, 1 பாரபட்சமுள்ளவன் ஒரு துண்டு அப்பத்திற்காக அநியாயம் செய்வான். 1

22பொறாமைக்காரன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான், 1 வறுமை தனக்கு வருமென்று அறியாமல் இருக்கிறான். 1

23தன்னுடைய நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைவிட, 1 கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான். 1

24தன்னுடைய தகப்பனையும் தன்னுடைய தாயையும் கொள்ளையிட்டு, 1 அது துரோகமல்ல என்பவன் பாழாக்குகிற மனிதனுக்குத் தோழன். 1

25பெருநெஞ்சன் வழக்கை உண்டாக்குகிறான்; 1 யெகோவாவை நம்புகிறவனோ செழிப்பான். 1

26தன்னுடைய இருதயத்தை நம்புகிறவன் மூடன்; 1 ஞானமாக நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான். 1

27தரித்திரர்களுக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையமாட்டான்; 1 தன்னுடைய கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும். 1

28துன்மார்க்கர்கள் எழும்பும்போது மனிதர்கள் மறைந்துகொள்கிறார்கள்; 1 அவர்கள் அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள்.

← Proverbs 27Read In The App, Free →Proverbs 29 →

Study Proverbs 28

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031