Proverbs · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Proverbs 6

1என் மகனே, நீ உன்னுடைய நண்பனுக்காகப் பொறுப்பேற்று, 1 அந்நியனுக்கு உறுதியளித்தால், 1

2நீ உன்னுடைய வாய்மொழிகளால் சிக்கிக்கொண்டாய், 1 உன்னுடைய வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய். 1

3இப்பொழுது என் மகனே, உன்னுடைய நண்பனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்டதால், 1 நீ உன்னைத் தப்புவித்துக்கொள்ள ஒன்று செய். 1

4உன்னுடைய கண்ணுக்கு தூக்கத்தையும், 1 உன்னுடைய கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், 1 உன்னுடைய நண்பனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி, 1 அவனை வருந்திக் கேட்டுக்கொள். 1

5வெளிமான் வேட்டைக்காரனுடைய கைக்கும், குருவி வேடனுடைய கைக்கும் தப்புவதுபோல, 1 நீ உன்னைத் தப்புவித்துக்கொள். 1

6சோம்பேறியே, நீ எறும்பினிடம் போய், 1 அதனுடைய வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். 1

7அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாமல் இருந்தும், 1

8கோடைக்காலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, 1 அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும். 1

9சோம்பேறியே, நீ எவ்வளவு நேரம் படுத்திருப்பாய்? 1 எப்பொழுது உன்னுடைய தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்? 1

10இன்னும் கொஞ்சம் தூங்கட்டும், இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், 1 இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு தூங்கட்டும் என்பாயோ? 1

11உன்னுடைய தரித்திரம் வழிப்போக்கனைப் போலவும், 1 உன்னுடைய வறுமை ஆயுதம் அணிந்தவனைப்போலவும் வரும். 1

12வீணான மனிதனாகிய ஒரு துன்மார்க்கன் ஏளனம் பேசித்திரிகிறான். 1

13அவன் தன்னுடைய கண்களால் சைகைகாட்டி, 1 தன்னுடைய கால்களால் பேசி, 1 தன்னுடைய விரல்களால் போதனை செய்கிறான். 1

14அவனுடைய இருதயத்திலே பொய்யுண்டு; 1 இடைவிடாமல் தீங்கைப் பிணைத்து, 1 வழக்குகளை உண்டாக்குகிறான். 1

15ஆகையால் திடீரென அவனுக்கு ஆபத்து வரும்; 1 உதவியில்லாமல் திடீரென நாசமடைவான். 1

16ஆறு காரியங்களைக் யெகோவா வெறுக்கிறார், 1 ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். 1

17அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, 1 குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்தும் கை, 1

18மிகக்கொடிய சிந்தனைகளைத் தூண்டுகின்ற இருதயம், 1 தீங்கு செய்வதற்கு விரைந்து ஓடும் கால், 1

19பொய்யானதைப் பேசும் பொய்ச்சாட்சி, 1 சகோதரர்களுக்குள்ளே விரோதத்தை உண்டாக்குதல் ஆகிய இவைகளே. 1

20என் மகனே, உன்னுடைய தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; 1 உன்னுடைய தாயின் போதகத்தைத் தள்ளாதே. 1

21அவைகளை எப்பொழுதும் உன்னுடைய இருதயத்திலே அணிந்து, அவைகளை உன்னுடைய கழுத்திலே கட்டிக்கொள். 1

22நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும்; 1 நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும்; 1 நீ விழிக்கும்போது அது உனக்கு போதிக்கும். 1

23கட்டளையே விளக்கு, 1 வேதமே வெளிச்சம், போதகதண்டனையே வாழ்வின் வழி. 1

24அது உன்னைத் துன்மார்க்கப் பெண்ணுக்கும், 1 ஆசை வார்த்தைகளைப் பேசும் நாக்கை உடைய ஒழுங்கீனமானவளுக்கும் விலக்கிக் காக்கும். 1

25உன்னுடைய இருதயத்திலே அவளுடைய அழகை ரசிக்காதே; 1 அவள் தன்னுடைய கண்ணின் இமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே. 1

26விபசாரியினால் ஒரு அப்பத்துண்டையும் இழக்கவேண்டியதாகும்; 1 விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள். 1

27தன்னுடைய உடை வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளமுடியுமா? 1

28தன்னுடைய கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கமுடியுமா? 1

29பிறனுடைய மனைவியிடம் தவறான உறவுகொள்பவனும், 1 அப்படியே அவளைத் தொடுகிற எவனும், தண்டனைக்குத் தப்பமாட்டான். 1

30திருடன் தன்னுடைய பசியை ஆற்றத் திருடினால் மக்கள் அவனை இகழமாட்டார்கள்; 1

31அவன் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழு மடங்கு கொடுத்துத் தீர்க்கவேண்டும்; 1 தன்னுடைய வீட்டிலுள்ள பொருள்களையெல்லாம் கொடுக்கவேண்டியதாகும். 1

32பெண்ணுடனே விபசாரம்செய்கிறவன் மதிகெட்டவன்; 1 அப்படிச் செய்கிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான். 1

33வாதையையும் வெட்கத்தையும் அடைவான்; 1 அவனுடைய நிந்தை ஒழியாது. 1

34பெண்ணைப்பற்றிய எரிச்சல் ஆணுக்கு கடுங்கோபத்தை உண்டாக்கும்; 1 அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடமாட்டான். 1

35அவன் எந்த நஷ்டத்தையும் பார்க்கமாட்டான்; 1 அநேகம் வெகுமதிகளைக் கொடுத்தாலும் அமர்ந்திருக்கமாட்டான்.

← Proverbs 5Read In The App, Free →Proverbs 7 →

Study Proverbs 6

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031