Proverbs 18
1பிரிந்து போகிறவன் தன்னுடைய ஆசையின்படி செய்யப்பார்க்கிறான், 1 எல்லா ஞானத்திலும் தலையிட்டுக் கொள்ளுகிறான். 1
2மூடன் ஞானத்தில் பிரியம்கொள்ளாமல், 1 தன்னுடைய மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான். 1
3துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடு இகழ்ச்சியும் வரும். 1
4மனிதனுடைய வாய்மொழிகள் ஆழமான தண்ணீர்போல இருக்கும்; 1 ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போல இருக்கும். 1
5வழக்கிலே நீதிமானைத் தோற்கடிக்கிறதற்கு, 1 துன்மார்க்கனுக்கு பாரபட்சம் செய்வது நல்லதல்ல. 1
6மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், 1 அவனுடைய வாய் அடிகளை வரவழைக்கும். 1
7மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, 1 அவனுடைய உதடுகள் அவனுடைய ஆத்துமாவுக்குக் கண்ணி. 1
8கோள்சொல்கிறவனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போல இருக்கும், 1 ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் குத்தும். 1
9தன்னுடைய வேலையில் அசதியாக இருப்பவன் அனைத்தையும் அழிப்பவனுக்குச் சகோதரன். 1
10யெகோவாவின் நாமம் மிகவும் பலத்த கோட்டை; 1 நீதிமான் அதற்குள் ஓடி சுகமாக இருப்பான். 1
11செல்வந்தனுடைய பொருள் அவனுக்கு பாதுகாப்பான பட்டணம்; 1 அது அவனுடைய எண்ணத்தில் உயர்ந்த மதில்போல இருக்கும். 1
12அழிவு வருமுன்பு மனிதனுடைய இருதயம் இறுமாப்பாக இருக்கும்; 1 மேன்மைக்கு முன்னானது தாழ்மை. 1
13காரியத்தைக் கேட்பதற்குமுன் பதில் சொல்லுகிறவனுக்கு, 1 அது புத்தியீனமும் வெட்கமுமாக இருக்கும். 1
14மனிதனுடைய ஆவி அவனுடைய பலவீனத்தைத் தாங்கும்; 1 முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்? 1
15புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; 1 ஞானியின் செவி அறிவை நாடும். 1
16ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழி உண்டாக்கி, 1 பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும். 1
17தன்னுடைய வழக்கிலே முதலில் பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; 1 அவனுடைய அயலானோ வந்து அவனை பரிசோதிக்கிறான். 1
18சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து, 1 பலவான்கள் நடுவே நியாயம்தீர்க்கும். 1
19பாதுகாப்பான பட்டணத்தை வசப்படுத்துவதைவிட 1 கோபம்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது கடினம்; 1 அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள்போல இருக்கும். 1
20அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்; 1 அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான். 1
21மரணமும், ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருக்கும்; 1 அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைச் சாப்பிடுவார்கள். 1
22மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; 1 யெகோவாவால் தயவையும் பெற்றுக்கொள்ளுகிறான். 1
23தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்; 1 செல்வந்தன் கடினமாக உத்திரவுகொடுக்கிறான். 1
24நண்பர்கள் உள்ளவன் நேசிக்கவேண்டும்; 1 சகோதரனைவிட அதிக சொந்தமாக நேசிக்கப்படுபவனும் உண்டு.