Proverbs · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Proverbs 23

1நீ ஒரு அதிபதியோடு சாப்பிடுவதற்கு உட்கார்ந்தால், 1 உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாகக் கவனித்துப்பார். 1

2நீ சாப்பாட்டு பிரியனாக இருந்தால், உன்னுடைய தொண்டையிலே கத்தியை வை. 1

3அவனுடைய ருசியுள்ள உணவுகள்மீது ஆசைப்படாதே; 1 அவைகள் வஞ்சக உணவாக இருக்கலாம். 1

4செல்வந்தனாகவேண்டுமென்று முயற்சிக்காதே; 1 சுயபுத்தியைச் சாராதே. 1

5இல்லாமற்போகும் பொருள்மேல் உன்னுடைய கண்களை ஏன் பறக்கவிடவேண்டும்? 1 அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டாக்கிக்கொண்டு, 1 வானில் பறந்துபோகும். 1

6பொறாமைக்காரனுடைய உணவை சாப்பிடாதே; 1 அவனுடைய ருசியுள்ள உணவுகளில் ஆசைப்படாதே. 1

7அவனுடைய இருதயத்தின் நினைவு எப்படியோ, 1 அப்படியே அவனும் இருக்கிறான்; 1 சாப்பிடும், குடியும் என்று அவன் உன்னோடு சொன்னாலும், 1 அவனுடைய இருதயம் உன்னோடு இருக்காது. 1

8நீ சாப்பிட்ட உணவை வாந்தியெடுத்து, 1 உன்னுடைய இனிய சொற்களை இழந்துபோவாய். 1

9மூடனுடைய காதுகள் கேட்கப் பேசாதே; 1 அவன் உன்னுடைய வார்த்தைகளின் ஞானத்தை அசட்டை செய்வான். 1

10பழைய எல்லைக்கல்லை மாற்றாதே; 1 திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே. 1

11அவர்களுடைய மீட்பர் வல்லவர்; 1 அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார். 1

12உன் இருதயத்தைப் புத்திமதிக்கும், 1 உன் காதுகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக. 1

13பிள்ளையை தண்டிக்காமல் விடாதே; 1 அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகமாட்டான். 1

14நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் 1 பாதாளத்திற்கு அவனுடைய ஆத்துமாவைத் தப்புவிப்பாயே. 1

15என் மகனே, உன்னுடைய இருதயம் ஞானமுள்ளதாக இருந்தால், 1 என்னிலே என்னுடைய இருதயம் மகிழும். 1

16உன் உதடுகள் செம்மையானவைகளைப் பேசினால், 1 என்னுடைய உள்மனம் மகிழும். 1

17உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; 1 நீ நாள்தோறும் யெகோவாவைப் பற்றும் பயத்தோடு இரு. 1

18நிச்சயமாகவே முடிவு உண்டு; 1 உன்னுடைய நம்பிக்கை வீண்போகாது.

19என் மகனே, நீ கேட்டு ஞானமடைந்து, 1 உன்னுடைய இருதயத்தை நல்வழியிலே நடத்து. 1

20மதுபானப்பிரியர்களோடும், 1 இறைச்சி அதிகமாக சாப்பிடுகிறவர்களோடும் சேராதே. 1

21குடியனும், சாப்பாட்டுப்பிரியனும் தரித்திரராவார்கள்; 1 தூக்கம் கிழிந்த துணிகளை அணிவிக்கும். 1

22உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; 1 உன்னுடைய தாய் வயதானவளாகும்போது அவளை புறக்கணிக்காதே. 1

23சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; 1 அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு. 1

24நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; 1 ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான். 1

25உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; 1 உன்னைப் பெற்றவள் மகிழுவாள்.

26என் மகனே, உன்னுடைய இருதயத்தை எனக்குக் கொடு; 1 உன் கண்கள் என்னுடைய வழிகளைப் பார்ப்பதாக. 1

27ஒழுங்கீனமானவள் ஆழமான படுகுழி; 1 அந்நியனுடைய மனைவி இடுக்கமான கிணறு. 1

28அவள் கொள்ளைக்காரனைப்போல் ஒளிந்திருந்து, 1 மனிதர்களுக்குள்ளே பாவிகளைப் பெருகச்செய்கிறாள். 1

29ஐயோ, யாருக்கு வேதனை? 1 யாருக்குத் துக்கம்? 1 யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? 1 யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தம்கலங்கின கண்கள்? 1

30மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கி வாழ்பவர்களுக்கும், 1 கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்கும்தானே. 1

31மதுபானம் இரத்த நிறமாக இருந்து, 1 பாத்திரத்தில் பளபளப்பாகத் தோன்றும்போது, 1 நீ அதைப் பார்க்காதே; அது மெதுவாக இறங்கும். 1

32முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், 1 விரியனைப்போல் தீண்டும். 1

33உன் கண்கள் ஒழுங்கீனமான பெண்களை நோக்கும்; 1 உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும். 1

34நீ நடுக்கடலிலே தூங்குகிறவனைப்போலவும், 1 பாய்மரத்தட்டிலே படுத்திருக்கிறவனைப்போலவும் இருப்பாய். 1

35என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை; 1 என்னை அறைந்தார்கள், எனக்குச் சுரணையில்லை; 1 நான் அதைப் பின்னும் தொடர்ந்து தேட எப்பொழுது விழிப்பேன் என்பாய்.

← Proverbs 22Read In The App, Free →Proverbs 24 →

Study Proverbs 23

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031