Proverbs · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Proverbs 19

1மாறுபாடான உதடுகளுள்ள மூடனைவிட, 1 உத்தமனாக நடக்கிற தரித்திரனே சிறப்பானவன். 1

2ஆத்துமா அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல; 1 கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான். 1

3மனிதனுடைய மதியீனம் அவனுடைய வழியைத் தாறுமாறாக்கும்; 1 என்றாலும் அவனுடைய மனம் யெகோவாவுக்கு விரோதமாக எரிச்சலடையும். 1

4செல்வம் அநேக நண்பர்களைச் சேர்க்கும்; 1 தரித்திரனோ தன்னுடைய நண்பனாலும் பிரிந்துபோவான். 1

5பொய்ச்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பான்; 1 பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை. 1

6பிரபுவின் தயவை அநேகர் வருந்திக் கேட்பார்கள்; 1 கொடைகொடுக்கிறவனுக்கு எவனும் நண்பன். 1

7தரித்திரனை அவனுடைய சகோதரர்கள் எல்லோரும் பகைக்கிறார்களே, 1 எத்தனை அதிகமாக அவனுடைய நண்பர்கள் அவனுக்குத் தூரமாவார்கள்; 1 அவர்களுடைய வார்த்தைகளை அவன் நாடுகிறான், 1 அவைகளோ வெறும் வார்த்தைகளே. 1

8ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை நேசிக்கிறான்; 1 புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான். 1

9பொய்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பமாட்டான்; 1 பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான். 1

10மூடனுக்குச் செல்வம் தகாது; 1 பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமையானவனுக்கு எவ்வளவும் தகாது. 1

11மனிதனுடைய விவேகம் அவனுடைய கோபத்தை அடக்கும்; 1 குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை. 1

12ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; 1 அவனுடைய தயவு புல்லின்மேல் பெய்யும் பனிபோல இருக்கும். 1

13மூடனாகிய மகன் தன்னுடைய தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; 1 மனைவியின் சண்டைகள் ஓயாமல் ஒழுகும் நீர். 1

14வீடும் செல்வமும் பெற்றோர்கள் வைக்கும் சொத்து; 1 புத்தியுள்ள மனைவியோ யெகோவா அருளும் ஈவு. 1

15சோம்பல் தூங்கிவிழச்செய்யும்; 1 அசதியானவன் பட்டினியாக இருப்பான். 1

16கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்; 1 தன்னுடைய வழிகளை அவமதிக்கிறவன் சாவான். 1

17ஏழைக்கு இரங்குகிறவன் யெகோவாவுக்குக் கடன்கொடுக்கிறான்; 1 அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். 1

18நம்பிக்கையிருக்கும்வரை உன்னுடைய மகனைத் தண்டி; 1 ஆனாலும் அவனைக் கொல்ல உன்னுடைய ஆத்துமாவில் தீர்மானிக்காதே. 1

19கடுங்கோபி தண்டனைக்குள்ளாவான்; 1 நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாக வரும். 1

20உன்னுடைய முடிவுகாலத்தில் நீ ஞானமுள்ளவனாக இருக்கும்படி, 1 ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள். 1

21மனிதனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; 1 ஆனாலும் யெகோவாவுடைய யோசனையே நிலைநிற்கும். 1

22நன்மைசெய்ய மனிதன் கொண்டிருக்கும் ஆசையே தயவு; 1 பொய்யனைவிட தரித்திரன் சிறப்பானவன். 1

23யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்க்கைக்கு ஏதுவானது; 1 அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; 1 தீமை அவனை அணுகாது. 1

24சோம்பேறி தன்னுடைய கையை பாத்திரத்திலே வைத்து, 1 அதைத் திரும்பத் தன்னுடைய வாய்க்குகூட கொண்டுபோகாமல் இருக்கிறான். 1

25பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; 1 புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான். 1

26தன்னுடைய தகப்பனைக் கொள்ளையடித்து, தன்னுடைய தாயைத் துரத்திவிடுகிறவன், 1 வெட்கத்தையும், அவமானத்தையும் உண்டாக்குகிற மகன். 1

27என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளைவிட்டு விலகச்செய்யும் 1 போதகங்களை நீ கேட்காதே. 1

28அநியாய சாட்சிக்காரன் நியாயத்தை சபிக்கிறான்; 1 துன்மார்க்கர்களுடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும். 1

29பரியாசக்காரர்களுக்குத் தண்டனைகளும், 1 மூடர்களுடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாக இருக்கிறது.

← Proverbs 18Read In The App, Free →Proverbs 20 →

Study Proverbs 19

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

12345678910111213141516171819202122232425262728293031