Job 10
1என் ஆத்துமா உயிரை வெறுக்கிறது, 1 நான் என் துயரத்திற்கு எனக்குள்ளே இடங்கொடுத்து, 1 என் மனவேதனையினாலே பேசுவேன். 1
2நான் தேவனை நோக்கி: 1 என்னைக் குற்றவாளியென்று முடிவுசெய்யாதிரும்; 1 நீர் எதற்காக என்னுடன் வழக்காடுகிறீர், அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்பேன். 1
3நீர் என்னை ஒடுக்கி, உம்முடைய கைகளின் செயலை வெறுத்து, 1 துன்மார்க்கரின் யோசனையைக் கிருபையாகப் பார்க்கிறது உமக்கு நன்றாயிருக்குமோ? 1
4சரீரக்கண்கள் உமக்கு உண்டோ? 1 மனிதன் பார்க்கிறவிதமாகப் பார்க்கிறீரோ? 1
5நீர் என் அக்கிரமத்தைத் தேடிப்பார்த்து, 1 என் பாவத்தை ஆராய்ந்து விசாரிக்கிறதற்கு, 1
6உம்முடைய நாட்கள் ஒரு மனிதனுடைய நாட்களைப்போலவும், 1 உம்முடைய வருடங்கள் ஒரு மனிதனுடைய வாழ்நாளைப்போலவும் இருக்கிறதோ? 1
7நான் துன்மார்க்கன் அல்ல என்பது உமக்குத் தெரியும்; 1 உம்முடைய கைக்கு என்னை விடுவிக்கிறவன் இல்லை. 1
8உம்முடைய கரங்கள் என்னையும் எனக்குரிய எல்லாவற்றையும் உருவாக்கிப் படைத்திருந்தும், 1 என்னை அழிக்கிறீர். 1
9களிமண்போல என்னை உருவாக்கினீர் என்பதையும், 1 என்னைத் திரும்பத் தூளாகப்போகச் செய்வீர் என்பதையும் நினைத்தருளும். 1
10நீர் என்னைப் பால்போல் ஊற்றி தயிர்போல் உறையச் செய்தீர் அல்லவோ? 1
11தோலையும் சதையையும் எனக்கு அணிவித்து எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை இணைத்தீர். 1
12எனக்கு உயிரைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்; 1 உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றியது. 1
13இவைகள் உம்முடைய உள்ளத்தில் மறைந்திருந்தாலும், 1 இது உமக்குள் இருக்கிறது என்று அறிவேன். 1
14நான் பாவம்செய்தால், அதை நீர் என்னிடத்தில் விசாரித்து, 1 என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமல் விடமாட்டீர். 1
15நான் துன்மார்க்கனாயிருந்தால் எனக்கு ஐயோ, 1 நான் நீதிமானாயிருந்தாலும் என் தலையை நான் எடுக்கமாட்டேன்; 1 அவமானத்தால் நிரப்பப்பட்டேன்; 1 நீர் என் சிறுமையைப் பார்த்தருளும், அது அதிகரிக்கிறது. 1
16சிங்கத்தைப்போல என்னை வேட்டையாடி, 1 எனக்கு விரோதமாக உமது அதிசய வல்லமையை விளங்கச் செய்கிறீர். 1
17நீர் உம்முடைய சாட்சிகளை எனக்கு விரோதமாக இரட்டிப்பாக்குகிறீர்; 1 என்மேல் உம்முடைய கோபத்தை அதிகரிக்கச் செய்கிறீர்; 1 போராட்டத்தின்மேல் போராட்டம் அதிகரிக்கிறது. 1
18நீர் என்னைக் கர்ப்பத்திலிருந்து பிறக்கவைத்தது என்ன? 1 ஒருவரும் என்னைப் பார்க்காமல், நான் அப்பொழுதே இறந்துபோனால் நலமாமே. 1
19நான் ஒருபோதும் இருந்ததுபோல இல்லாமல், 1 கர்ப்பத்திலிருந்து கல்லறைக்குக் கொண்டு போகப்பட்டிருப்பேன். 1
20என் நாட்கள் கொஞ்சமல்லவோ? 1
21காரிருளும் மரண இருளுமான இருண்ட தேசமும், 1 இருள்சூழ்ந்த ஒழுங்கில்லாத மரண மறைவிடமுள்ள தேசமும், ஒளியும் இருளாகும் தேசமுமாகிய, போனால் திரும்பிவராத தேசத்திற்கு, நான் போகுமுன்னே, 1
22நான் சற்று இளைப்பாறுவதற்கு நீர் என்னைவிட்டு ஓய்ந்திரும்” என்றான்.