Job · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Job 30

1“இப்போதோ என்னைவிட இளவயதுள்ளவர்கள் என்னை கேலி செய்கிறார்கள்; 1 இவர்களுடைய தகப்பன்களை நான் என் மந்தையைக் காக்கும் நாய்களுடன் வைக்கவுங்கூட வெட்கப்பட்டிருப்பேன். 1

2வயது முதிர்ந்ததினாலே பெலனற்றுப்போன அவர்கள் கைகளினால் எனக்கு என்ன உதவியிருந்தது. 1

3குறைச்சலினாலும் பசியினாலும் அவர்கள் வாடி, 1 அதிக நாட்களாய் வெறுமையான வெட்டவெளிக்கு ஓடிப்போய், 1

4செடிகளுக்குள் இருக்கிற தழைகளைப் பிடுங்குவார்கள்; 1 காட்டுசெடிகளின் கிழங்குகள் அவர்களுக்கு ஆகாரமாயிருந்தது. 1

5அவர்கள் மனிதர்களின் நடுவிலிருந்து துரத்தப்பட்டார்கள்; 1 திருடனைத் துரத்துகிறதுபோல்: 1 திருடன் திருடன் என்று அவர்களைத் துரத்திவிட்டார்கள். 1

6அவர்கள் பள்ளத்தாக்குகளின் வெடிப்புகளிலும், 1 பூமியின் குகைகளிலும், கன்மலைகளிலும் போய் குடியிருந்தார்கள். 1

7செடிகளுக்குள்ளிருந்து கதறி, முட்செடிகளின்கீழ் ஒதுங்கினார்கள். 1

8அவர்கள் மூடரின் மக்களும், தகுதியில்லாதவரின் பிள்ளைகளும், 1 தேசத்திலிருந்து துரத்தப்பட்டவர்களுமாக இருந்தார்கள். 1

9ஆனாலும் இப்போது நான் அவர்களுக்குப் பாட்டும் பழமொழியும் ஆனேன். 1

10என்னை மிகவும் வெறுத்து, எனக்குத் தூரமாகி, 1 என் முகத்திற்கு முன்பாகத் துப்பத் தயங்காதிருக்கிறார்கள். 1

11நான் கட்டின கட்டை அவர் அவிழ்த்து, 1 என்னைச் சிறுமைப்படுத்தினதினால், 1 அவர்களும் கடிவாளத்தை என் முகத்திற்கு முன்பாக உதறிவிட்டார்கள். 1

12வலதுபுறத்தில் வாலிபர் எழும்பி, என் கால்களைத் தவறி விழவைத்து, 1 தங்கள் கேடான வழிகளை எனக்கு நேராக ஆயத்தப்படுத்துகிறார்கள். 1

13என் பாதையைக் கெடுத்து, என் ஆபத்தைப் பெருகச் செய்கிறார்கள்; 1 அதற்கு அவர்களுக்கு உதவி செய்கிறவர்கள் தேவையில்லை. 1

14பெரிய வழியை உண்டாக்கி, 1 தாங்கள் கெடுத்த வழியில் புரண்டு வருகிறார்கள். 1

15பயங்கரங்கள் என்மேல் திரும்பிவருகிறது, 1 அவைகள் காற்றைப்போல என் ஆத்துமாவைப் பின்தொடருகிறது; 1 என் செழித்தவாழ்வு ஒரு மேகத்தைப்போல் கடந்துபோனது. 1

16ஆகையால் இப்போது என் ஆத்துமா என்னில் சோர்ந்துபோனது; 1 உபத்திரவத்தின் நாட்கள் என்னைப் பிடித்துக் கொண்டது. 1

17இரவுநேரத்திலே என் எலும்புகள் துளைக்கப்பட்டு, 1 என் நரம்புகளுக்கு இளைப்பாறுதல் இல்லாதிருக்கிறது. 1

18வியாதியின் கடுமையினால் என் உடை மாறிப்போனது; 1 அது என் அங்கியின் கழுத்துப்பட்டையைப்போல, 1 என்னைச் சுற்றிக்கொண்டது. 1

19சேற்றிலே தள்ளப்பட்டேன்; 1 புழுதிக்கும் சாம்பலுக்கும் ஒப்பானேன். 1

20தேவனே உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; 1 நீர் எனக்கு பதில் கொடுக்காமலிருக்கிறீர்; 1 கெஞ்சி நிற்கிறேன், என்மேல் பாராமுகமாயிருக்கிறீர். 1

21என்மேல் கோபமுள்ளவராக மாறினீர்; 1 உம்முடைய கரத்தின் வல்லமையால் என்னை விரோதிக்கிறீர். 1

22நீர் என்னைத் தூக்கி, என்னைக் காற்றிலே பறக்கவிட்டு, 1 என்னைப் பயத்தினால் அழிந்துபோகச் செய்கிறீர். 1

23வாழ்வோர் அனைவருக்கும் குறிக்கப்பட்ட தங்கும் இடமாகிய மரணத்திற்கு என்னை ஒப்புக்கொடுப்பீர் என்று அறிவேன். 1

24ஆனாலும் நான் எந்த ஒருவனை அவன் ஆபத்திலே தவிக்கவைத்ததும், 1

25துன்பப்படுகிறவனைப் பார்த்து அவனுக்காக நான் அழாதிருந்ததும், 1 ஏழைக்காக என் ஆத்துமா கவலைப்படாதிருந்ததும் உண்டானால், 1 அவர் என் விண்ணப்பத்திற்கு இடங்கொடாமல், 1 எனக்கு விரோதமாகத் தமது கையை நீட்டுவாராக. 1

26நன்மைக்காகக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது; 1 வெளிச்சம் வருமென்று பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருள் வந்தது. 1

27என் உள்ளம் கொதித்து, 1 அமைதல் இல்லாதிருக்கிறது; உபத்திரவநாட்கள் என்மேல் வந்தது. 1

28வெயில் படாதிருந்தும், நான் கறுகறுத்து அலைகிறேன்; 1 நான் சபையிலிருந்து எழுந்திருக்கும்போது அலறுகிறேன். 1

29நான் தீக்கோழிகளுக்குச் சகோதரனும், 1 நரிகளுக்குத் தோழனுமானேன். 1

30என் தோல் என்மேல் கறுத்துப்போனது; 1 என் எலும்புகள் வெப்பத்தினால் காய்ந்துபோனது. 1

31என் சுரமண்டலம் புலம்பலாகவும், 1 என் கின்னரம் அழுகிறவர்களின் சத்தமாகவும் மாறின.

← Job 29Read In The App, Free →Job 31 →

Study Job 30

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142