Job · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Job 19

1யோபு மறுமொழியாக: 1

2“நீங்கள் எதுவரைக்கும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி, 1 வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்? 1

3இப்போது பத்துமுறை என்னை நிந்தித்தீர்கள்; 1 நீங்கள் எனக்குக் கடினமுகம் காண்பிக்கிறதினால் உங்களுக்கு வெட்கமில்லை. 1

4நான் தவறாக நடந்தது உண்மையானாலும், 1 என் தவறு என்னுடன்தான் இருக்கிறது. 1

5நீங்கள் எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி, 1 எனக்கு நிந்தையாக என்னைக் கடிந்துகொள்ளவேண்டும் என்று இருப்பீர்கள் என்றால், 1

6தேவன் என்னைக் கவிழ்த்து, தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள். 1

7இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன், 1 கேட்பார் ஒருவரும் இல்லை; 1 கூக்குரலிடுகிறேன், நியாயவிசாரணை இல்லை. 1

8நான் கடந்துபோக முடியாதபடி அவர் என் பாதையை வேலியடைத்து, 1 என் வழிகளை இருளாக்கிவிட்டார். 1

9என்னிலிருந்த என் மகிமையை அவர் உரிந்துகொண்டு, 1 என் தலையின் கிரீடத்தை எடுத்துப்போட்டார். 1

10அவர் என்னை நான்கு புறத்திலும் நாசமாக்கினார், 1 நான் அற்றுப்போகிறேன்; 1 என் நம்பிக்கையை ஒரு செடியைப்போலப் பிடுங்கிப்போட்டார். 1

11அவர் தமது கோபத்தை என்மேல் எரியச் செய்தார்; 1 என்னைத் தம்முடைய சத்துருக்களில் ஒருவனாக எண்ணிக்கொள்ளுகிறார். 1

12அவருடைய தண்டுப்படைகள் ஏகமாக வந்து, 1 எனக்கு விரோதமாகத் தங்கள் வழியை உயர்த்தி, 1 என் கூடாரத்தைச் சுற்றி முகாமிட்டார்கள். 1

13என் சகோதரரை என்னைவிட்டுத் தூரப்படுத்தினார்; 1 எனக்கு அறிமுகமானவர்கள் எனக்கு அந்நியராய்ப் போனார்கள். 1

14என் சொந்தமக்கள் விலகிப்போனார்கள். 1 என் நண்பர்கள் என்னை மறந்துவிட்டார்கள். 1

15என் வீட்டு மக்களும், என் வேலைக்காரிகளும், 1 என்னை அந்நியனாக நினைக்கிறார்கள்; 1 அவர்கள் பார்வைக்கு நான் நிலையற்றவன். 1

16நான் என் வேலைக்காரனைக் கூப்பிடுகிறபோது அவன் எனக்கு பதில் கொடுக்கமாட்டான்; 1 என் வாயினால் நான் அவனைக் கெஞ்சவேண்டியதாயிற்று. 1

17என் மூச்சு என் மனைவிக்கு வேறுபட்டிருக்கிறது; 1 என் உடன் பிறந்தவர்களுக்காகப் பரிதபிக்கிறேன். 1

18சிறுபிள்ளைகளும் என்னை அசட்டை செய்கிறார்கள்; 1 நான் எழுந்தால், அவர்கள் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள். 1

19என் உயிர்நண்பர்கள் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள்; 1 நான் நேசித்தவர்கள் எனக்கு விரோதிகளானார்கள். 1

20என் எலும்புகள் என் தோலுடனும் என் சதையோடும் ஒட்டிக்கொண்டிருக்கிறது என் பற்களை மூடக் கொஞ்சம் தோல்மாத்திரம் தப்பினது. 1

21என் நண்பர்களே, எனக்கு இரங்குங்கள், 1 எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது. 1

22தேவனைப்போல நீங்களும் என்னை ஏன் துன்பப்படுத்தவேண்டும்? 1 என் உடல் எரிக்கப்பட்டாலும் நீங்கள் திருப்தியில்லாமல் இருக்கிறதென்ன? 1

23ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; 1 அவைகள் ஒரு புத்தகத்தில் வரையப்பட்டு, 1

24அல்லது என்றைக்கும் நிலைக்க அவைகள் கருங்கல்லிலே உளிவெட்டாகவும், 1 ஈய எழுத்தாகவும் பதிந்தால் நலமாயிருக்கும். 1

25என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், 1 அவர் கடைசி நாளில் பூமியின்மேல் + 19:25 அல்லது, என்னுடைய கல்லறை மேல், பூமியில் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல நிற்பது போல், 31:14, உபாகமம் 19:16, சங்கீதம். 12:5, ஏசாயா 19:21 நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். 1

26இந்த என்னுடைய தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, 1 நான் என் உடலுடன் இருந்து தேவனைப் பார்ப்பேன். 1

27அவரை நானே பார்ப்பேன்; 1 வேறே கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்; 1 இந்த ஏக்கத்தினால் என் உள்ளிருக்கும் உறுப்புகள் எனக்குள் சோர்ந்துபோகிறது. 1

28காரியத்தின் காரணம் எனக்குள் கண்டுபிடிக்கப்படும்போது, 1 நாம் ஏன் அவனைத் துன்பப்படுத்துகிறோம் என்று நீங்கள் சொல்லவேண்டியதாமே. 1

29பட்டயத்திற்குப் பயப்படுங்கள்; 1 நியாயத்தீர்ப்பு உண்டென்கிறதை நீங்கள் அறியவேண்டுமேன்று, 1 கோபமானது பட்டயத்தினால் உண்டாகும் தண்டனையை வரவழைக்கும்” என்றான்.

← Job 18Read In The App, Free →Job 20 →

Study Job 19

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142