Job · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Job 11

1அப்பொழுது நாகமாத்தியனாகிய சோப்பார் மறுமொழியாக: 1

2“ஏராளமான வார்த்தைகளுக்கு பதில் சொல்லவேண்டாமோ? 1 வாயடிக்கிறவன் நீதிமானாக விளங்குவானோ? 1

3உம்முடைய வீம்புவார்த்தைகளுக்கு மனிதர் மவுனமாயிருப்பார்களோ? 1 நீர் கேலிசெய்யும்போது, ஒருவரும் உம்மை வெட்கப்படுத்தவேண்டாமோ? 1

4என் சொல் சுத்தம் என்றும், 1 நான் தேவனாகிய உம்முடைய பார்வைக்கு சுத்தமானவன் என்றும் நீர் சொல்லுகிறீர். 1

5ஆனாலும் தேவன் பேசி, 1 உமக்கு விரோதமாகத் தம்முடைய உதடுகளைத் திறந்து, 1

6உமக்கு ஞானத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தினால் நலமாயிருக்கும்; 1 உள்ளபடி பார்த்தால், அது இரண்டுமடங்காக இருக்கிறது; 1 ஆகையால் உம்முடைய அக்கிரமத்திற்கேற்றபடி தேவன் உம்மைத் தண்டிக்கவில்லையென்று அறிந்துகொள்ளும். 1

7தேவனுடைய மறைவான ஞானத்தை நீர் ஆராய்ந்து, 1 சர்வவல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியமுடியுமோ? 1

8அது வானம்வரை உயர்ந்தது; 1 உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, 1 நீர் அறிந்து கொள்வது என்ன? 1

9அதின் அளவு பூமியைவிட நீளமும், 1 சமுத்திரத்தைவிட அகலமுமாயிருக்கிறது. 1

10அவர் பிடித்தாலும், அவர் அடைத்தாலும், 1 அவர் நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்தினாலும், 1 அவரைத் தடை செய்கிறவன் யார்? 1

11மனிதருடைய மாயத்தை அவர் அறிவார்; 1 அக்கிரமத்தை அவர் கண்டும், 1 அதைக் கவனிக்காமல் இருப்பாரோ? 1

12புத்தியில்லாத மனிதன் காட்டுக்கழுதைக்குட்டிக்கு ஒப்பாகப் பிறந்திருந்தாலும், 1 அறிவுள்ளவனாக இருக்கிறான். 1

13நீர் உம்முடைய இருதயத்தை ஆயத்தப்படுத்தி, 1 உம்முடைய கைகளை அவருக்கு நேராக விரித்தால் நலமாயிருக்கும். 1

14உம்முடைய கையிலே அநீதி இருந்தால், 1 அதைத் தூரத்தில் அகற்றிவிட்டு, அநியாயம் உம்முடைய கூடாரங்களில் தங்கவிடாதிரும். 1

15அப்பொழுது உம்முடைய முகத்தை வெட்கமில்லாமல் தலைநிமிர்ந்து, 1 பயப்படாமல் பலன்கொண்டிருப்பீர். 1

16அப்பொழுது நீர் வருத்தத்தை மறந்து, 1 கடந்துபோன தண்ணீரைப்போல அதை நினைப்பீர். 1

17அப்பொழுது உம்முடைய ஆயுள்காலம் நடுப்பகலைவிட பிரகாசமாயிருக்கும்; 1 இருள் அடைந்த நீர் விடியற்காலத்தைப்போலிருப்பீர். 1

18நம்பிக்கை உண்டாயிருக்கிறதினால் பெலனாயிருப்பீர்; 1 தோண்டி ஆராய்ந்து சுகமாகப் படுத்துக்கொள்வீர். 1

19பயமுறுத்துவாரில்லாமல் தூங்குவீர்; 1 அநேகர் உமது முகத்தை நோக்கி விண்ணப்பம் செய்வார்கள். 1

20துன்மார்க்கருடைய கண்கள் பூத்துப்போய், 1 அவர்கள் அடைக்கலம் அவர்களை விட்டு அகன்று, 1 அவர்கள் நம்பிக்கை மரணமடைகிறவன் சுவாசம்போல் அழிந்துபோகும்” என்றான்.

← Job 10Read In The App, Free →Job 12 →

Study Job 11

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142