Job 26
1யோபு மறுமொழியாக: 1
2“பெலனில்லாதவனுக்கு நீ எப்படி உதவிசெய்தாய்? 1 பெலனற்ற கையை நீ எப்படி ஆதரித்தாய்? 1
3நீ ஞானமில்லாதவனுக்கு எப்படி உறுதுணையாயிருந்து, 1 மெய்ப்பொருளைக் குறித்து அறிவித்தாய்? 1
4யாருக்கு அறிவைப் போதித்தாய்? 1 உன்னிடத்திலிருந்து புறப்பட்ட ஆவி யாருடையது? 1
5தண்ணீரின் கீழ் இறந்தவர்களுக்கும், 1 அவர்களுடன் தங்குகிறவர்களுக்கும் தத்தளிப்பு உண்டு. 1
6அவருக்கு முன்பாகப் பாதாளம் தெரியும்விதத்தில் திறந்திருக்கிறது; 1 நரகம் மூடப்படாதிருக்கிறது. 1
7அவர் வடக்குமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, 1 பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார். 1
8அவர் தண்ணீர்களைத் தம்முடைய கார்மேகங்களில் கட்டிவைக்கிறார்; 1 அதின் பாரத்தினால் மேகம் கிழிகிறதில்லை. 1
9அவர் தமது சிங்காசனம் நிற்கும் ஆகாயத்தை பலப்படுத்தி, 1 அதின்மேல் தமது மேகத்தை விரிக்கிறார். 1
10அவர் தண்ணீர்கள்மேல் சுழற்சி வட்டம் அமைத்தார்; 1 வெளிச்சமும் இருளும் முடியும்வரை அப்படியே இருக்கும். 1
11அவருடைய கண்டிப்பினால் வானத்தின் தூண்கள் அதிர்ந்து தத்தளிக்கும். 1
12அவர் தமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரச்செய்து, 1 தமது ஞானத்தினால் அதின் மூர்க்கத்தை அடக்குகிறார். 1
13தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்; 1 அவருடைய கை நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உண்டாக்கியது. 1
14இதோ, இவைகள் அவருடைய படைப்பில் கடைசியானவைகள், 1 அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; 1 அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார்” என்றான்.