Job 41
1“லிவியாதானை + 41:1 பெரிய திமிங்கலம் அ. முதலையாக இருக்கலாம். தூண்டிலைக்கொண்டு பிடிக்கமுடியுமோ? 1 அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றினாலே பிடிக்கமுடியுமோ? 1
2அதின் மூக்கை நார்க்கயிறு போட்டுக் கட்டமுடியுமோ? 1 குறட்டினால் அதின் தாடையை உருவக் குத்தமுடியுமோ? 1
3அது உன்னைப் பார்த்து அநேக விண்ணப்பம் செய்யுமோ? 1 உன்னை நோக்கி ஆசைவார்த்தைகளைச் சொல்லுமோ? 1
4அது உன்னுடன் உடன்படிக்கை செய்யுமோ? 1 அதை எல்லா நாட்களும் அடிமைப்படுத்துவாயோ? 1
5ஒரு குருவியுடன் விளையாடுகிறதுபோல், 1 நீ அதனுடன் விளையாடி, 1 அதை நீ உன் பெண்களுக்கு அருகில் கட்டிவைப்பாயோ? 1
6மீனவர்கள் அதைப் பிடிக்க முயற்சி செய்து, 1 அதை வியாபாரிகளுக்குப் பங்கிடுவார்களோ? 1
7நீ அதின் தோலை அநேக அம்புகளினாலும், 1 அதின் தலையை எறிவல்லையங்களினாலும் எறிவாயோ? 1
8அதின்மேல் உன் கையைப்போடு, யுத்தத்தை நினைத்துக்கொள்; 1 இனி அப்படிச் செய்யத் துணியமாட்டாய். 1
9இதோ, அதைப் பிடிக்கலாம் என்று நம்பினவன் மோசம்போய், 1 அதைப் பார்த்தவுடனே விழுவான் அல்லவோ? 1
10அதை எழுப்பக்கூடிய தைரியவான் இல்லாதிருக்க, 1 எனக்கு முன்பாக நிற்பவன் யார்? 1
11தனக்குப் பதில்கொடுக்கப்படும்படி, முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்? 1 வானத்தின் கீழுள்ளவைகள் எல்லாம் என்னுடையவைகள். 1
12அதின் உறுப்புகளும், அதின் வீரியமும், 1 அதின் உடல் இசைவின் அழகும் இன்னதென்று நான் சொல்லாமல் மறைக்கமாட்டேன். 1
13அது மூடியிருக்கிற அதின் போர்வையைக் எடுக்கக்கூடியவன் யார்? 1 அதின் இரண்டு தாடைகளின் நடுவே கடிவாளம் போடத்தக்கவன் யார்? 1
14அதின் முகத்தின் கதவைத் திறக்கக்கூடியவன் யார்? சுற்றிலுமிருக்கிற அதின் பற்கள் பயங்கரமானவைகள். 1
15முத்திரைப் பதிப்புபோல அழுத்தங்கொண்டு அடர்த்தியாயிருக்கிற அதின் கேடகங்களின் அமைப்பு மகா சிறப்பாயிருக்கிறது. 1
16அவைகள் நடுவே காற்றும் நுழையமுடியாமல் 1 நெருக்கமாக அவைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கிறது. 1
17அவைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு 1 இணைபிரியாமல் பிடித்துக்கொண்டிருக்கிறது. 1
18அது தும்மும்போது ஒளி வீசும், 1 அதின் கண்கள் சூரியஉதயத்தின் புருவங்களைப்போல இருக்கிறது. 1
19அதின் வாயிலிருந்து எரிகிற பந்தங்கள் புறப்பட்டு, 1 நெருப்புப்பொறிகள் பறக்கும். 1
20கொதிக்கிற சட்டியிலும் கொப்பரையிலும் இருந்து புறப்படுகிறதுபோல, 1 அதின் மூக்கிலிருந்து புகை புறப்படும். 1
21அதின் சுவாசம் கரிகளைக் கொளுத்தும், 1 அதின் வாயிலிருந்து தணல் புறப்படும். 1
22அதின் கழுத்திலே பெலன் குடிகொண்டிருக்கும்; 1 பயங்கரம் அதற்குமுன் நடனமாடும். 1
23அதின் உடல் அடுக்குகள், 1 அசையாத கெட்டியாக ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக்கும். 1
24அதின் நெஞ்சு கல்லைப்போலவும், 1 எந்திரத்தின் அடிக்கல்லைப்போலவும் கெட்டியாயிருக்கும். 1
25அது எழும்பும்போது பலசாலிகள் பயத்தினால் மயங்கித் திகைப்பார்கள். 1
26அதைத் தாக்குகிறவனுடைய பட்டயம், ஈட்டி, 1 வல்லையம், கவசம், ஒன்றும் அதற்குமுன் நிற்காது. 1
27அது இரும்பை வைக்கோலாகவும், 1 வெண்கலத்தை உளுத்த மரமாகவும் நினைக்கும். 1
28அம்பு அதைத் துரத்தாது; 1 கவண்கற்கள் அதற்குத் துரும்பாகும். 1
29அது பெருந்தடிகளை வைக்கோல்களாக எண்ணி, 1 ஈட்டியின் அசைவை இகழும். 1
30அதின் கீழாகக் கூர்மையான கற்கள் கிடந்தாலும், 1 அது சேற்றின்மேல் ஓடுகிறதுபோல கூர்மையான அவைகளின்மேலும் ஓடும். 1
31அது ஆழத்தை உலைப்பானையைப்போல் பொங்கச்செய்து, 1 கடலைத் தைலம்போலக் கலக்கிவிடும். 1
32அது தனக்குப் பின்னாகப் பாதையை மின்னச்செய்யும்; 1 ஆழமானது வெளுப்பான நரையைப்போல் தோன்றும். 1
33பூமியின்மேல் அதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை; 1 அது பயப்படும்விதமாக உண்டாக்கப்பட்டது. 1
34அது மேட்டிமையானதையெல்லாம் அற்பமாக நினைக்கிறது; 1 அது அகங்காரமுள்ள உயிரினங்களுக்கெல்லாம் ராஜாவாக இருக்கிறது” என்றார்.