Job 28
1வெள்ளிக்கு விளையும் இடம் உண்டு, 1 பொன்னுக்குப் புடமிடும் இடமுமுண்டு. 1
2இரும்பு மண்ணிலிருந்து எடுக்கப்படும்; 1 செம்பு கற்களில் உருக்கி எடுக்கப்படும். 1
3மனிதன் அந்தகாரத்திலும் மரண இருளிலும் இருக்கிற கற்களைக் 1 கடைசிவரை ஆராய்ந்து தேடி, 1 இருளுக்கும் அங்கே முடிவுண்டாக்குகிறான். 1
4கடக்கமுடியாததும் நிலையாததுமான ஆறு எழும்பினாலும், 1 உழைப்பாளியானவன் அதை மனிதரால் வற்றிப்போகவைத்துச் செல்லுகிறான். 1
5பூமியின்மேல் ஆகாரம் விளையும்; 1 அதின் கீழிடங்களிலிருக்கிறவைகளோ, 1 நெருப்பால் மாறினது போலிருக்கும். 1
6அதின் கற்களில் இந்திரநீலம் விளையும்; 1 அதின் பொடியில் பொன்பொடிகளும் உண்டாயிருக்கும். 1
7ஒரு வழியுண்டு, அது ஒரு பறவைக்கும் தெரியாது; 1 கழுகின் கண்ணும் அதைக் கண்டதில்லை; 1
8கொடிய மிருகங்களின் கால்கள் அதில் படவில்லை; 1 சிங்கம் அதைக் கடந்ததில்லை. 1
9அவன் தன் கைகளைக் கற்பாறையின்மேல் நீட்டி, 1 மலைகளை வேருடன் புரட்டுகிறான். 1
10கன்மலைகளுக்குள்ளும் நீர்க்கால்களை வெட்டுகிறான்; 1 அவனுடைய கண் விலையுயர்ந்த எல்லாவற்றையும் காணும். 1
11ஒரு துளியும் கசியாதபடி ஆறுகளை அடைக்கிறான்; 1 மறைவிடத்திலிருக்கிறதை வெளிச்சத்திலே கொண்டுவருகிறான். 1
12ஆனாலும் ஞானம் கண்டெடுக்கப்படுவது எங்கே? 1 புத்தி விளைகிற இடம் எது? 1
13அதின் விலை மனிதனுக்குத் தெரியாது; 1 அது மக்கள் வாழ்கிற தேசத்திலே கிடைக்கிறதில்லை. 1
14ஆழமானது: அது என்னிடத்தில் இல்லையென்கிறது; 1 சமுத்திரமானதும், அது என்னிடத்தில் இல்லையென்கிறது. 1
15அதற்கு ஈடாகத் தங்கத்தைக் கொடுக்கவும், 1 அதற்குக் கிரயமாக வெள்ளியை நிறுக்கவும் முடியாது. 1
16ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், 1 இந்திரநீலக்கல்லும் அதற்கு ஈடல்ல. 1
17பொன்னும் பளிங்கும் அதற்கு ஒப்பல்ல; 1 பசும்பொன் ஆபரணங்களுக்கு அதை மாற்றமுடியாது. 1
18பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்துடன் ஒப்பிட்டுப் பேசக்கூடாது; 1 முத்துகளைவிட ஞானத்தின் விலை உயர்ந்தது. 1
19எத்தியோப்பியாவின் புஷ்பராகம் அதற்கு நிகரல்ல; 1 பசும்பொன்னும் அதற்குச் சரியல்ல. 1
20இப்படியிருக்க, ஞானம் எங்கேயிருந்து வரும்; 1 புத்தி தங்கும் இடம் எங்கே? 1
21அது உயிருள்ள அனைவருடைய கண்களுக்கும் ஒளித்தும், 1 ஆகாயத்துப் பறவைகளுக்கு மறைந்தும் இருக்கிறது. 1
22நாசமும் + 28:22 அப்பொல்லியோன் , மரணமும், நாங்கள் எங்கள் காதுகளினாலேமாத்திரம் அதின் கீர்த்தியைக் கேட்டோம் என்கிறது. 1
23தேவனோ அதின் வழியை அறிவார், 1 அது இருக்கும் இடம் அவருக்கே தெரியும். 1
24அவர் பூமியின் கடைசிமுனைகளைப் பார்த்து, 1 வானங்களின்கீழ் இருக்கிறதையெல்லாம் காண்கிறார். 1
25அவர் காற்றுக்கு அதின் எடையை நியமித்து, 1 தண்ணீருக்கு அதின் அளவைக் கணக்கிட்டு, 1
26மழைக்குத் திட்டத்தையும், இடிமுழக்கத்துடன் கூடிய மின்னலுக்கு வழியையும் ஏற்படுத்துகிறார். 1
27அவர் அதைப் பார்த்துக் கணக்கிட்டார்; 1 அதை ஆராய்ந்து ஆயத்தப்படுத்தி, 1
28மனிதனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; 1 பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார்” என்று சொன்னான்.